x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
cancer

கடகம் வருட ராசி பலன் 2020

கடக ராசி அன்பர்களுக்கு, 2020 ஆண்டின் இடைப்பட்ட 3 மாதங்களான ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாத காலங்கள், அனைத்து வகையிலும், நல்வாழ்வை அளிப்பதாக அமையும். வேலை, தொழில் முன்னேற்றம், நிதிநிலை வளர்ச்சி, சுபச் செலவுகள், நல்லாரோக்கியம் எனப் பலவகையிலும், உங்களுக்குச் சிறந்த பலன்கள் விளையும். உறவுகள், குறிப்பாக, தாய், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளிகள் ஆகியவர்களுடன் உங்கள் உறவு, சுமுகமாக இருக்கும். இந்த மாதங்களில், உங்களில் பலருக்கும், திருமணத்திற்கு ஏற்ற வரன்கள் அமையும் வாய்ப்பும் உள்ளது. சொத்து வாங்குவது, விற்பது போன்றவையும் லாபகரமாக நிறைவேறும். சிலர் சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கவும் கூடும்.
இந்த 3 மாத காலத்தில், உங்கள் நற்குணங்களும், நேர்மையும் சிறந்து விளங்கும். புண்ணியம் சேர்க்கும் நற்செயல்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடும். உங்கள் பக்கம் வீசும் அதிர்ஷ்டக் காற்றும், உங்களுக்குப் பலவகை வெற்றிகளைப் பெற்றுத் தரும். வருடத்தின் கடைசி 3 மாதங்களிலும், பண லாபங்கள், பொருள் ரீதியான வெற்றிகள் போன்றவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். வருடக் கடைசியில், உங்கள் தைரியம், பேச்சு மற்றும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் திறன் போன்றவையும் மேம்படும். கடவுள் நம்பிக்கையும் பெருகும்.

வருட ராசி பலன் 2020

கடகம்: குணாதிசயங்கள்

கடக ராசியினர் கற்பனைத் திறம் மிக்கவர்கள். இவர்கள் பிறரின் கருத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். இவர்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள். உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இரக்கமிக்கவர்கள். இவர்களிடம் புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றல் காணப்படும். அனுசரித்து போகக்கூடியவர்கள். மென்மையாகப் பேசும் இயல்பு உடையவர்கள். இவர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக மாறக் கூடியவர்கள். சில சமயங்களில் திடீரென்று கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.சில சமயங்களில் அன்புடன் நடந்து கொள்வார்கள். சில சமயங்களில் அடக்கமாக அல்லது பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கலகலப்பாக தைரியமாக இருப்பார்கள். பொறுமை காப்பதன் மூலம் தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.

பரிகாரங்கள்:

பெண்கள், குழந்தைகள் போன்றவர்களிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளங்கள்.
விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்குத் துன்பம் விளைவிக்காதீர்கள்; இவைகளுக்கு உணவும் அளியுங்கள்.
சத்யநாராயணர், தக்ஷிணாமூர்த்தி போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.
‘ஓம் நமோ நாராயணாய’, ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரங்களை, சனிக்கிழமைகளிலும், ஏகாதசி, துவாதசி நாட்களிலும், 108 முறை ஜபம் செய்யுங்கள்.
‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை, திங்கட் கிழமைகளிலும், பிரதோஷம், சிவராத்திரி நாட்களிலும், 108 முறை ஜபம் செய்யுங்கள்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

நவக்ரஹ ஹோமம்

சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர், டிசம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

ராசி பலன் - கடகம்

பொதுப்பலன்கள்: கடக ராசி அன்பர்களுக்கு, 2020 ஆண்டின் இடைப்பட்ட 3 மாதங்களான ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாத காலங்கள், அனைத்து வகையிலும், நல்வாழ்வை அளிப்பதாக அமையும். வேலை, தொழில் முன்னேற்றம், நிதிநிலை வளர்ச்சி, சுபச் செலவுகள், நல்லாரோக்கியம் எனப் பலவகையிலும், உங்களுக்குச் சிறந்த பலன்கள் விளையும். உறவுகள், குறிப்பாக, தாய், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளிகள் ஆகியவர்களுடன் உங்கள் உறவு, சுமுகமாக இருக்கும். இந்த மாதங்களில், உங்களில் பலருக்கும், திருமணத்திற்கு ஏற்ற வரன்கள் அமையும் வாய்ப்பும் உள்ளது. சொத்து வாங்குவது, விற்பது போன்றவையும் லாபகரமாக நிறைவேறும். சிலர் சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கவும் கூடும்.
இந்த 3 மாத காலத்தில், உங்கள் நற்குணங்களும், நேர்மையும் சிறந்து விளங்கும். புண்ணியம் சேர்க்கும் நற்செயல்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடும். உங்கள் பக்கம் வீசும் அதிர்ஷ்டக் காற்றும், உங்களுக்குப் பலவகை வெற்றிகளைப் பெற்றுத் தரும். வருடத்தின் கடைசி 3 மாதங்களிலும், பண லாபங்கள், பொருள் ரீதியான வெற்றிகள் போன்றவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். வருடக் கடைசியில், உங்கள் தைரியம், பேச்சு மற்றும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் திறன் போன்றவையும் மேம்படும். கடவுள் நம்பிக்கையும் பெருகும்.

வேலை: மே, ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், உங்கள் பணி நிலவரம் மிகச் சிறந்த நிலையை எட்டும். ஊதிய உயர்வு, சலுகைகள், உங்களுக்குச் சாதகம் தரும் இடமாற்றங்கள் போன்றவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் நேரத்தில், தொழில் துறையில் பல சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். இந்த காலகட்டத்தில், நீங்கள் முழுத்திறனுடன் செயலாற்றி, பெரும் வெற்றிகளை ஈட்டலாம். அதே நேரம், நீதி, நேர்மை தவறாமல் நடந்தே, நீங்கள் இது போன்ற சாதனைகளைச் செய்யலாம். நிலம், வீடு போன்றவற்றை வாங்கி, விற்கும் தரகு வேலையும் நல்ல பலன் தரும். ஆண்டின் மீதிப் பகுதி சுமாராகவே இருக்கும்.

வேலை, தொழில் மேம்பட சூரிய ஹோமம்

காதல் / திருமணம்: ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் திருமணத்திற்கு வரன் தேடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். திருமணங்களுக்கும் ஏற்பாடு செய்யலாம். இந்த நேரத்தில், திருமணமான தம்பதிகளிடையே சுமுக உறவு நிலவும்; நெருக்கம் கூடும். ஆனால், காதல் உறவுகள் சுமாராகவே இருக்கும். எனவே, எந்தவித தவறான அணுகுமுறையும் மேற்கொள்ளாமல், அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

உறவுகள் சிறக்க பார்வதி ஹோமம்

நிதிநிலைமை: ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பண வளம் நிறைந்து விளங்கும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் நிதி தொடர்பான சில நல்ல முடிவுகள், முதலீடுகள் போன்றவை ஆதாயம் தரும். தொழிலும் கணிசமான லாபங்கள் தரும். பணத்தைப் பெருக்க, புதிய திட்டங்களையும் நீங்கள் தீட்டக்கூடும். ஆனால், இந்த ஆண்டின் மற்ற காலங்களில், பண விஷயங்களில், கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதேபோல, தேவையற்ற செலவுகளும் ஏற்படலாம்; எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

நிதிநிலை ஏற்றம் பெற தனாகர்ஷன யந்திரம்

மாணவர்கள்: இந்த ஆண்டின் முதல் மற்றும் இறுதி 3 மாதங்கள், கல்வி முன்னேற்றத்திற்கு சாதமாக அமையவில்லை; எனவே, படிப்பு தொடர்பான முக்கிய முடிவுகளையும், நடவடிக்கைகளையும் இந்த நேரத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது. ஆனால், ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் கல்வி முயற்சிகளுக்கு பெரிதும் துணைபுரியும். இந் நேரத்தில் மாணவர்கள், சோம்பல் போன்றவற்றைத் துறந்து, கடுமையாக உழைத்து, பல வெற்றிகளை ஈட்ட முடியும்.

கல்வியில் வெற்றி பெற புதன் ஹோமம்

ஆரோக்கியம்: ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், நோய் பாதிப்புகள் எதுவும் இன்றி, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும். ஆனால் அடுத்து வரும் 3 மாதங்களில் உடல்நிலை குறித்து எச்சரிக்கை தேவை; இந்த நேரத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆண்டின் மற்ற பகுதிகளில், ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பழக்க வழக்கங்களையும், சுற்றுப்புறத்தையும் எந்நேரமும் தூய்மையாக வைத்துக் கொள்வதால், நல்ல உடல்நிலையை பராமரிக்க முடியும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க தன்வந்தரி ஹோமம்

பரிகாரங்கள்:

பெண்கள், குழந்தைகள் போன்றவர்களிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளங்கள்.
விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்குத் துன்பம் விளைவிக்காதீர்கள்; இவைகளுக்கு உணவும் அளியுங்கள்.
சத்யநாராயணர், தக்ஷிணாமூர்த்தி போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.
‘ஓம் நமோ நாராயணாய’, ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரங்களை, சனிக்கிழமைகளிலும், ஏகாதசி, துவாதசி நாட்களிலும், 108 முறை ஜபம் செய்யுங்கள்.
‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை, திங்கட் கிழமைகளிலும், பிரதோஷம், சிவராத்திரி நாட்களிலும், 108 முறை ஜபம் செய்யுங்கள்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

நவக்ரஹ ஹோமம்

சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர், டிசம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC