Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Rasi Calculator, Rashi Calculator, Rasi Nakshatra Calculator
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன?

நமது பிறப்பு நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்த நட்சத்திரங்களின் பாதையில் தான் சந்திரன் உள்ளிட்ட கோள்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. ஒரு குழந்தை ஜெனிக்கும் அல்லது பிறக்கும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ, அந்த நட்சத்திரமே அந்தக் குழந்தையின் பிறப்பு அல்லது ஜென்ம நட்சத்திரம் ஆகும். சந்திரனை ஜோதிடத்தில் ”மனோகாரகன்“ என்று கூறுவார்கள். நமது மனதை ஆளும் தன்மை சந்திரனுக்கு இருப்பதால், சந்திரன் நாம் பிறக்கும் போது இருக்கும் நட்சத்திரமான நமது ஜென்ம நட்சத்திரத்தைப் பொறுத்துத் தான் நமது எண்ணம், குணம் செயல்கள் யாவும் இருக்கும்.

27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும்:

மொத்தம் 360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலை கொண்டதாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் எனக் கொண்டு 27 நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் என கணக்கிட்டுள்ளனர். இந்த 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளுக்கு பிரிக்கும் பொழுது ஒரு ராசிக்கு 9 பாதங்கள் வரும்.

Find Rasi & Nakshatra – Birth Rasi and Nakshatra (Star) Calculator

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் அறிய உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் உள்ளிடவும்

பிறந்த தேதி

பிறந்த நேரம்

பிறந்த நாடு

பிறந்த இடம்

Resolve the simple captcha below:
2 + 2 =

Rasi Nakshatra Calculator

நட்சத்திரங்களும், நட்சத்திர அதிபதிகளும்:

ஒவ்வொரு நட்சத்திரமும் சில நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு ஆகும். அந்த நட்சத்திரங்களைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றும் உருவ அமைப்பே அந்த நடச்சத்திரத்திற்குப் பெயராக சூட்டப்பட்டுள்ளது. உதாரணமாக ஹஸ்தம் என்றால் கை என்று பொருள். ஹஸ்தம் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த ஐந்து நட்சத்திரங்களை இனித்தால் கை போன்ற தோற்றமளிக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு ஆளும் கிரகம் உள்ளது. இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் ஒன்பது கோள்கள் அதிபதியாகிறார்கள். மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தேவதை இருக்கிறார்கள். அவற்றைப் பற்றி காண்போம்.

நட்சத்திரங்களும் தேவதைகளும்:

அசுவினி

நட்சத்திரம்


அசுவினி

தேவதை


அசுவினி தேவர்கள்

பரணி

நட்சத்திரம்


பரணி

தேவதை


எமன்

கார்த்திகை

நட்சத்திரம்


கார்த்திகை

தேவதை


அக்னி

ரோகிணி

நட்சத்திரம்


ரோகிணி

தேவதை


பிரம்மா

மிருகசீரிடம்

நட்சத்திரம்


மிருகசீரிடம்

தேவதை


சந்திரன்

திருவாதிரை

நட்சத்திரம்


திருவாதிரை

தேவதை


ருத்திரன்

புனர்பூசம்

நட்சத்திரம்


புனர்பூசம்

தேவதை


அதிதி

பூசம்

நட்சத்திரம்


பூசம்

தேவதை


பிருகஸ்பதி

ஆயில்யம்

நட்சத்திரம்


ஆயில்யம்

தேவதை


சர்ப்பம்

மகம்

நட்சத்திரம்


மகம்

தேவதை


பித்ருக்கள்

புனர்பூசம்

நட்சத்திரம்


பூரம்

தேவதை


பகன்

உத்திரம்

நட்சத்திரம்


உத்திரம்

தேவதை


அர்யமான்

அஸ்தம்

நட்சத்திரம்


அஸ்தம்

தேவதை


சவிதா

சித்திரை

நட்சத்திரம்


சித்திரை

தேவதை


துவஷ்டா

சுவாதி

நட்சத்திரம்


சுவாதி

தேவதை


வாயு

விசாகம்

நட்சத்திரம்


விசாகம்

தேவதை


இந்திரன்

அனுஷம்

நட்சத்திரம்


அனுஷம்

தேவதை


மித்திரன்

கேட்டை

நட்சத்திரம்


கேட்டை

தேவதை


இந்திரன்

மூலம்

நட்சத்திரம்


மூலம்

தேவதை


நிருருதி

பூராடம்

நட்சத்திரம்


பூராடம்

தேவதை


அபஸ்

உத்திராடம்

நட்சத்திரம்


உத்திராடம்

தேவதை


விசுவதேவர்

திருவோணம்

நட்சத்திரம்


திருவோணம்

தேவதை


விஷ்ணு

அவிட்டம்

நட்சத்திரம்


அவிட்டம்

தேவதை


வசுக்கள்

சதயம்

நட்சத்திரம்


சதயம்

தேவதை


வருணன்

பூரட்டாதி

நட்சத்திரம்


பூரட்டாதி

தேவதை


அஜய்கபாதா

உத்திரட்டாதி

நட்சத்திரம்


உத்திரட்டாதி

தேவதை


அஹிர்புதன்யா

அவிட்டம்

நட்சத்திரம்


ரேவதி

தேவதை


பூஷா

நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும்:

கேது

அதிபதி

கேது

நட்சத்திரங்கள்

அசுவினி

அசுவினி

மகம்

மகம்

மூலம்

மூலம்

சுக்கிரன்

அதிபதி

சுக்கிரன்

நட்சத்திரங்கள்

பரணி

பரணி

பூரம்

பூரம்

பூராடம்

பூராடம்

சூரியன்

அதிபதி

சூரியன்

நட்சத்திரங்கள்

கார்த்திகை

கார்த்திகை

உத்திரம்

உத்திரம்

உத்திராடம்

உத்திராடம்

சந்திரன்

அதிபதி

சந்திரன்

நட்சத்திரங்கள்

ரோகிணி

ரோகிணி

திருவோணம்

திருவோணம்

அஸ்தம்

அஸ்தம்

செவ்வாய்

அதிபதி

செவ்வாய்

நட்சத்திரங்கள்

சித்திரை

சித்திரை

மிருகசீரிடம்

மிருகசீரிடம்

அவிட்டம்

அவிட்டம்

ராகு

அதிபதி

ராகு

நட்சத்திரங்கள்

திருவாதிரை

திருவாதிரை

சுவாதி

சுவாதி

சதயம்

சதயம்

குரு

அதிபதி

குரு

நட்சத்திரங்கள்

புனர்பூசம்

புனர்பூசம்

விசாகம்

விசாகம்

பூரட்டாதி

பூரட்டாதி

சனி

அதிபதி

சனி

நட்சத்திரங்கள்

அனுஷம்

அனுஷம்

உத்திரட்டாதி

உத்திரட்டாதி

பூசம்

பூசம்

புதன்

அதிபதி

புதன்

நட்சத்திரங்கள்

ஆயில்யம்

ஆயில்யம்

ரேவதி

ரேவதி

கேட்டை

கேட்டை

நட்சத்திர கணிப்பான்

நட்சத்திரம்

உங்களது பிறந்த தேதி, இடம் மற்றும் நேரத்தைக் கொண்டு எங்களது விலையில்லா நட்சத்திர கணிப்பான் மூலம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை அறிந்து கொள்ளலாம். எங்களது விவரமான நட்சத்திர அறிக்கை மூலம் நீங்கள் உங்களின் நட்சத்திரம், உங்கள் பலம், பலவீனம் பற்றி அறியலாம். மேலும் உங்கள் நட்சத்திர பாதம் மற்றும் அதன் விளக்கங்களையும் பெறலாம்.உங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களின் நட்சத்திரம் மற்றும் அது சார்ந்த அறிக்கைகளைப் பெற பிறப்பு விவரங்களை அளியுங்கள்.

உங்கள் ஜென்ம நட்சத்திரம் எது என உங்களுக்குத் தெரியும் அல்லவா? அந்த நட்சத்திரத்திற்கானஅதி தேவதை யார், உங்கள் நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கும் நற்பலன்களை நீங்கள் முழுமையாக பெறுவதற்குச் செல்ல வேண்டிய கோயில் எது, வணங்க வேண்டிய தெய்வம் எது என அறிந்து கொள்வது சிறப்பு.

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுடைய குணஇயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு
இருக்கின்றது. அதே சமயம் அந்த நடச்சத்திரத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெறவோஅல்லது நிவர்த்தி செய்து கொள்ளவோ அந்த நட்சத்திரத்தையும் தம் ஆளுகைக்கு உட்படுத்திய தெய்வங்களின் அனுக்கிரகத்தால் இயலும்.

அவரவர் பிறந்த நட்சததிரத்திற்கான தனிக் கோவில்களை அறிந்து அந்த திருத்தலத்துக்கு சென்று ஆண்டவனை வணங்கி வழி படுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளும் ஆசியும் பெறலாம்.

27 நட்சத்திரக்காரர்களுக் குரிய பரிகாரத் தலங்களைப் பற்றிக் காண்போம்

அஸ்வினி

அஸ்வினி

 

சென்னை திருவொற்றியூர் மற்றும் திருவிடைமருதூர் கோவில்களில் உள்ள நட்சத்திர லிங்கத்துக்கு தங்கள் ஜென்ம நட்சத்திதிரம் வரும் நாளன்று முடிந்த வழிபாடுகளைச் செய்யலாம். திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற சிற்றூரிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடலாம். அரப்பளீஸ்வரர் அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் பரிகார தெய்வமாக விளங்குகிறார்.

பரணி

பரணி

 

திருவாரூர் திருத்துறைப் பூண்டிப் பாதையில் உள்ள திருநெல்லிக்கா திருத்தலம் சென்று வழிபடலாம். பட்டீச்வரத்திற்கு தென் கிழக்கில் 2 கி. மீ தொலைவில், கும்பகோணத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ள ஆறை வட தளி – சோழ மாளிகை. இது நெல்லி வனம் என்று பெயர் கொண்டது. அடுத்து அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகிய திருவாவினன்குடி பரிகாரத் தலம் ஆகும்.

கார்த்திகை

கார்த்திகை

 

முருகன் உறையும் தலங்கள் எல்லாமே இந்த நட்சத்திரக் காரர்களுக்கு பரிகாரத் தலங்கள் ஆகும். குறிப்பாக திருச்செந்தூர் முருகன் ஆலயம். திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் அக்னீசுவரர் கோவிலும் கீரனூர் சிவலோகநாதர் திருக்கோவிலும் கார்த்திகை நட்சத்திரக்கார்கள் வழிபட வேண்டிய ஆலயம் ஆகும்.

ரோகிணி

ரோகிணி

 

தஞ்சாவூருக்கு வடக்கே கும்பகோணம் சாலையில் 11 கி. மீ தொலைவில் உள்ள நெல்லிச்சேரி ஜம்புனாதர் கோவில். சென்னைக்கு மேற்கே 10 கி. மீ. தொலைவில் கொரட்டூரில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில். செங்கல்பட்டுக்கு கிழக்கே திருபோரூர் சாலையில் 18 கி. மீ. தொலைவில் உள்ள செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் ஆலயம். இந்த நட்சத்திரக்காரர்கள் கண்ணன் குடிகொண்டுள்ள தலங்களிலும் வழிபடலாம்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம்

 

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்திரசூடேஸ்வரர்மரகதாம்பிகை திருக்கோவில்; தர்மபுரிக்கு வடக்கே 48 கி.மீ தொலைவில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் பார்வதியம்மை திருக்கோவில்.; கரூர் மாவட்டம் காவிரியின் வடகரையில் உள்ள கற்பூரவள்ளி சந்திரமௌலீஸ்வரர் கோவில்; தஞ்சை பாபநாசம் சாலையில் அய்யம்பேட்டை அருகில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவில்; திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் உள்ள எண் கண் ஆதிநாராயணப் பெருமாள் கோவில்

திருவாதிரை

திருவாதிரை

 

இவர்கள் தில்லை நடராஜப் பெருமானை வழிபட்டால் நன்மைகள் கிட்டும்.இந்த நட்சத்திரக்காரர்கள் அபயவரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோவிலுக்கு செல்லும் போது சிவனையும், பெருமாள் கோவில் செல்லும் போது திருமாலின் வாகனமான கருட பகவானையும் மனதார வழிபடலாம்.

புனர்பூசம்

புனர்பூசம்

 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு தென் கிழக்கில் 20 கி.மீ தொலைவில் உள்ள கிருபாபுரீச்வரர்- மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம் சென்று வழிபடலாம். மூங்கிலை தல விருட்சமாகக் கொண்டுள்ள தலங்களில் வழிபாடு செய்யலாம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், தில்லை வளாகம், வடுவூர், அதம்பார், குடந்தை ராமசாமி கோவில் ஆகிய ஸ்தலங்களில் ராமபிரானை வழிபடலாம். கும்பகோணத்துக்கு அருகில் நண்டாங்கோவில் திருத்தலம் சென்று வழிபடலாம்.

பூசம்

பூசம்

 

கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் நரசிங்கபேட்டைக்கு அருகில் அமைந்துள்ள கோமுக்தீச்வரர் – அதுலகுஜ நாயகி திருக்கோவில் சென்று வழிபடலாம். மேலும் அரச மரத்தை தலங்களாகக் கொண்ட திண்டிவனம் புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒழுந்தியாப்பட்டு அரசிலி நாதர்- பெரிய நாயகி ஆலயம் , ஆவூர் பசுபதீச்வரர்-மங்களாம்பிகை ஆலயம், கோனேரி ராஜபுரம் உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை ஆலயம் , திருச்சுழி திருமேனி நாதர் துணைமாலை நாயகி ஆலயம் மற்றும் கும்பகோணம் திருவாரூர் சாலையில் 15 கி மீ தொலைவில் உள்ள திருச்சேறை ஆலயம் சென்று வழிபடலாம்.

ஆயில்யம்

ஆயில்யம்

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8 கி. மீ தொலைவில் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயம், சங்கரன் கோவில் சங்கரலிங்கம்-கோமதி அம்மன் ஆலயம், திருப்புனவாசல், புள்ளபூதங்குடி, திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள்- அகில வள்ளி நாச்சியர் மற்றும் நாகூர் நாகநாதர் – நாகவல்லி ஆலயம்.

மகம்

மகம்

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்ட திருக்கச்சூர், திட்டக்குடி அருகே உள்ள திருவரத்துறை, கீழப்பழுவூர் ஆலந்துறை நாதர், கும்பகோணம் மயிலாடுதுறை பாதையில் உள்ள திருவாலங்காடு வடாரன்யேஸ்வரர்ஆலயம் சென்று வழிபடலாம்.

பூரம்

பூரம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறைக்கு அருகில் உள்ள நாலூர் பலாசவனனாதர்- பெரியநாயகி அருள் பாலிக்கும் ஆலயம், கஞ்சனூர அக்னீஸ்வரர்- கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் தலம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை – திருக்கடையூர் சாலையில் உள்ள தலைச்சங்காடு சங்கருனாதேசுவரர் -சௌந்தரநாயகி அருள் பாலிக்கும் தலம் சென்று வழிபட வேண்டும்.

உத்திரம்

உத்திரம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள அரிசாபந்தீர்த்தார் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை வரதராஜப் பெருமாள் ஆலயம், காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகத்திற்கு தென்கிழக்கே உள்ள செய்யூர் செய்கையம்பதி அருள் புரியும் ஆலயம், கூவத்தூர் சிதம்பரேச்வரர் ஆலயம் சென்று வழிபடலாம்.

அஸ்தம்

அஸ்தம்

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தருமபுரி, வேளாலீசுவரர் ஆலயம், செய்யாறு திருவத்திபுரம் தலத்தில் குடி கொண்டுள்ள வேதபுரீசுவரர் -இளமுலை நாயகி ஆலயம், கடலூர் மாவட்டம் புவனகிரி வேதபுரீசுவரர் ஆலயம், விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருளில் உள்ள ஏமப்பூர் வேதபுரீசுவரர் திருக்கோவில், மதுரைக்கு வடகிழக்கில் 18 கி. மீ தொலைவில் உள்ள திருவாதவூர் தலத்தில் அருள் பாலிக்கும் வேதநாதர் – ஆரணிவல்லியம்மை ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

சித்திரை

சித்திரை

 

இந்த நட்சத்திரக்காரர்கள், நாகை மாவட்ட, சீர்காழிக்கு தென்கிழக்கே 3 கி. மீ தொலைவில் உள்ள அண்ணன் பெருமாள் கோவில், தாடிகொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில், கரூர் மாவட்டம் திருநாராயணபுரம், காளமேகப் பெருமாள் ஆலயம், தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் குடிகொண்டிருக்கும் ஆலயம், சென்னை காட்பாடி ரயில் பாதையில் திருவல்லம் தலத்தில் குடிகொண்டிருக்கும் திருவல்லநாதர்ஆலயம், திருவக்கரை, சந்திரசேகர் வடிவாம்பிகை குடிகொண்டிருக்கும் ஆலயம், அட்டவீரத் தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

சுவாதி

சுவாதி

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்திற்கு வடகிழக்கே 7 கி. மீ தொலைவில் உள்ள திருப்புடை மருதூர் ஆலயம், அரியலூருக்கு தென்கிழக்கே 17 கி. மீ. தொலைவில் உள்ள பெரிய திருக்கோணம் ஆதி மத்யார்ஜுநேச்வரர்- பிருஹத்குஜாம்பிகை அருள்பாலிக்கும் ஆலயம், கோவை மாவட்டம் உடுமலைப் பெட்டிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ள கடத்தூர் அர்ஜுனேச்வரர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம், ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவில் சென்று வழிபடுவது சிறந்தது.

விசாகம்

விசாகம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், நெல்லை மாவட்டம் அத்தாளநல்லூர் ஆனைக்கருள் செய்த கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார் அருகில் உள்ள தீயத்தூர் சகஸ்ர லட்சுமீச்வரர், மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி. மீ. தொலைவில் உள்ள திருநின்றியூர் லட்சுமிபுரீச்வரர்-உலகநாயகி அருள் பாலிக்கும் தலம் சென்று வழிபட வேண்டும்.

அனுஷம்

அனுஷம்

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சென்னைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் அருள் பாலிக்கும் தலம், திருவண்ணாமலை, அண்ணாமலை உறையும் தலம், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்குதென் கிழக்கே 38 கி. மீ. தொலைவில் உள்ள திருப்புனவாசல் தலம், திருவாரூருக்கு வடமேற்கில் 7 கி. மீ தோளிவில் உள்ள திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் அபிஷேகவல்லித் தாயார் உறையும் தலம், மயிலாடுதுறைக்கு வடக்கே 5 கி. மீ தொலைவில் நீடூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 9 கி. மீ. தொலைவில் உள்ள திருநறையூர் தலம் சென்று வழிபட வேண்டும்.

கேட்டை

கேட்டை

 

திருச்சிக்கு வடக்கில் 6 கி. மீ தொலைவில் உள்ள பிட்சாண்டார் கோயில், மயிலாடுதுறைக்கு தெற்கே 8 கி. மீ. தொலைவில் உள்ள வழுவூர் கிருத்திவாசன் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

மூலம்

மூலம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், திருச்சி மாவட்டம் லால்குடி மேற்கில் 5 கி. மீ. தொலைவில் உள்ள வடகரை மாந்துறை ஆம்ரவன ஈசுவரர் உறையும் ஆலயம், சீர்காழிக்கு அருகில் உள்ள ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகேசர் அருள் பாலிக்கும் தலம், மயிலாடுதுறை மயூரநாதர், அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் திருத்தலம், மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் பாதாளேச்வரம் திருத்தலம், திருத்துறைப் பூண்டி – ஓரத்தநாடு வழியில் உள்ள மந்திரபுரீசுவரர் – பெரிய நாயகி கோயிலூர் , திருச்செந்தூருக்கு 14 கி. மீ. தொலைவில் உள்ள குலசேகரப்பட்டினம் பாண்டீசுவரர் – அறம் வளர்த்த நாயகி அருள் பாலிக்கும் தலம் , பல்லாவரத்திற்கு மேற்கில் உள்ள அகஸ்தீஸ்வரர் – ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் தலம் சென்று வழிபடலாம்.

பூராடம்

பூராடம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், திருச்சி மாவட்டம், லால்குடி அருகில் உள்ள அப்பிரதீசுவரர் அருளாசி வழங்கும் ஆலயம், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சபாநாயகர் – சிவாகம சுந்தரி அருளாசி வழங்கும் தலம், தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு வடக்கில் 3 கி. மீ தொலைவில் ஆகாசபுரீசுவரர் அருள் பாலிக்கும் திருத்தலம் சென்று வழிபட வேண்டும்.

உத்திராடம்

உத்திராடம்

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சென்னைக்கு மேற்கில் 8 கி. மீ. தொலைவில் உள்ள கோயம்பேடு குருங்காலீசுவரர் – தர்மசம்வர்த்தினி ஆலயம், காட்பாடிக்கு தென் கிழக்கே உள்ள காங்கேயநல்லூரில் உறையும் காங்கேசுவரர்-பாலகுஜாம்பிகை உறையும் ஆலயம், சேலத்துக்கு கிழக்கே 32 கி. மீ. பேளூரில் சுயம்புலிங்கமாக விளங்கும் தான்தோன்றீசுவரர்-அறம் வளர்த்த அம்மை ஆலயம் , கும்பகோணத்துக்கு வடமேற்கே 6 கி. மீ தொலைவில் இருக்கும் திரு இன்னம்பூர் எழுத்தறி நாதேசுவரர் அன்னை சுகந்த குந்தளாம்பிகை ஆலயம், மன்னார்குடிக்கு வடக்கே 10 கி. மீ திருப்பூவநூர் சதுரங்க வல்லபநாதர்அருள்பாலிக்கும் தலம், திருத்துறைப் பூண்டிக்கு தெற்கே 12 கி. மீ. தொலைவில் இருக்கும் திருக்கடிக்குளம் கரபகனாதர் – சௌந்தர நாயகி உறையும் ஆலயம் , சிவகங்கையில் இருந்து 19 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கோஷ்டியூர் திருத்தலம் சென்று வழிபட வேண்டும்.

திருவோணம்

திருவோணம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாலச்சத்திற்குத் தெற்கே 12 கி. மீ. தொலைவில் ராஜேந்திரப் பட்டினம் என்று அழைக்கப்படும் எருக்கத்தம் புலியூர் தலத்தில் உறையும் நீலகண்டேசுவரர் அன்னை நீலமலர்க்கண்ணி அம்பிகை உறையும் திருத்தலம் சென்று வழிபட வேண்டும். நாராயண திரு அவதார திரு நட்சத்திரம் இது என்பதால் நாராயணனை வணங்கலாம்.

அவிட்டம்

அவிட்டம்

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. அவிட்ட நட்சத்திரக் காரர்கள் விஷ்ணுவை இஷ்ட தெய்வமாக வணங்கலாம்.

சதயம்

சதயம்

 

இந்த நட்சத்திரக்காரர்கள், நாகை மாவட்டத்தில் உள்ள கடம்பனூர் ஆலயம், கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள தட்சின காசி என அழைக்கப்படும் கடம்பை, கடலூர் மாவட்டம் காடுமன்னர்கொவிளுக்கு தென்மேற்கில் 5 கி. மீ. தொலைவில் உள்ள மேலக்கடம்பூரில் உறையும் அமிர்தகடேஸ்வரர் உறையும் ஆலயம், திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6 கி. மீ தொலைவில் உள்ள உத்தமர்கோவில், மதுரை மாநகரில் சேவை சாதிக்கும் வைகுந்தநாதர்-தாயார் மதுரவல்லி உறையும் கூடல் தளம் சென்று வழிபடலாம்.

பூரட்டாதி

பூரட்டாதி

 

இந்த நட்சத்திரக்காரர்கள் திருவானேஷ்வர் திருக்கோவில் உள்ள இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். திருக்குவளை தலத்திற்குச் சென்று தியாகராஜப் பெருமானை வணங்கினால் இவர்கள் குபேர சம்பத்து பெறலாம். அது தவிர அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கோவில்களில் உள்ள மகாலட்சுமி அல்லது தாயார் சந்நிதிகளில் உளமுருக பிரார்த்தனை செய்வதம் மூலம் வாழ்வில் வளங்களைப் பெறலாம்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி

 

இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதி தேவதை விஷ்ணுவின் அம்சமானதால் திருமாலையும், திருமகளையும், காமதேனுவையும் இஷ்ட தெய்வங்களாகக் கொண்டு வணங்கலாம்.

ரேவதி

ரேவதி

 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு மேற்கில் 13 கி. மீ தொலைவில் உள்ள இழுப்பைப்பட்டு என்ற தலத்தில் நீலகண்டேசுவரர் - அமுதகரவல்லி உறையும் ஆலயம், திண்டிவனத்தில் இருந்து 3 கி . மீ. தொலைவில் உள்ள இரும்பு மாகாளம் தலம், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி ஆலயம் சென்று வழிபட வேண்டும்.