துலா ராசி பலன் 2025 | Libra Horoscope 2025 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் உங்கள் பொருளாதார நிலையுடன் சேர்த்து சமூக அந்தஸ்தும் ஏற்றம் காணும் வகையில் தற்போதைய கோள்சார கிரக நிலைகள் உள்ளன. இந்த வருடம் ஆயத்த ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்த முதலீடுகளை செய்வீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விவசாயத்திற்கு கிடைக்க வேண்டிய அரசாங்க பணம் மற்றும் அனைத்து அரசாங்க உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த வருடம் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். மின் சாதனங்கள் விற்பனை செய்யும் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரித்து காணப்படும். குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். திருமணத்தில் தடை மற்றும் தாமதம் ஆனவர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமைந்து திருமணமும் நடைபெறும். இந்த வருடம் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். இந்த வருடம் புதிய வண்டி மற்றும் வீடு வாங்கும் அமைப்பு உண்டு. தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலையில் உள்ளவர்கள் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆராய்ச்சி கல்விபடிக்கும் மாணவர்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள். புதியதாக ஆராய்ச்சி மேற்கொண்டு ஆராய்ச்சியில் வெற்றிபெறுவார்கள்.

வருட ராசி பலன் 2025

துலாம்: குணாதிசயங்கள்

துலாம் ராசியினர் வாழ்வில் விரைவான முன்னேற்றத்திற்கான லட்சியம் கொண்டவர்கள். இவர்கள் தலைசிறந்தவர்கள். மிகச் சரியான உள்ளுணர்வு, புத்திசாலித்தனமான அறிவாற்றல், விவேகத்துடன் முடிவெடுக்கும் திறன், மற்றும் இனிமையான தன்மை கொண்டவர்கள். இவர்கள் வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர்கள். அல்லது சட்ட வல்லுனர்களாக ஆவார்கள்.

பரிகாரங்கள்:

  • வெள்ளிக்கிழமை தோறும் மகா லட்சுமி கோயிலுக்கு சென்று பசு நெய் தீபம் ஏற்றிவர தன நிலையில் ஏற்றம் உண்டாகும்.
  • வெள்ளிக்கிழமை மாலை காமதேனு சிலைக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் செய்துவர உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும்.
  • மகாவிஷ்ணு கோவிலில் புதன் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுத்துவர ஐஸ்வர்யங்கள் ஏற்படும்.
  • புதன் கிழமைகளில் வயதான ஏழைகளுக்கு வஸ்திர தானம் கொடுக்க முயற்சிகளில் இருந்த தடை விலகும்.
    • பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

      வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் ஏற்பட அஷ்ட லக்ஷ்மி பூஜை

      சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.

      சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, மார்ச், ஜூலை, அக்டோபர், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC