Ashta Bhairava Invocation to 8 Fierce Forms of Shiva Helps Remove Obstacles, Master Time, Manifest Material Goals & Attain Fame, Power & Status JOIN NOW
கடக ராசி பலன் 2024 | Cancer Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகவும் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். புதிய காதல் உறவு மலரும். காதலில் வெற்றி கிடைக்கும். ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்து காணப்படும். வேலைபளு காரணமாக மனச்சோர்வும் தூக்கமின்மை பிரச்சனைகளும் ஏற்படலாம். உங்கள் மனதிற்கு பிடித்த விசயங்களில் ஈடுபடுத்தி மனச்சோர்வை போக்கிக் கொள்ளலாம். பொதுவாக மளிகை வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்து காணப்படும். காதல் உறவில் உள்ளவர்கள் தன் துணை மூலமாக ஆதாயம் பெறுவார்கள். இன்பச்சுற்றுலா சென்றுவர உகந்த காலகட்டமாக உள்ளது. உங்களுக்கு இசை மற்றும் கலை மீது ஆர்வம் அதிகரிக்கும். திருமண உறவில் உள்ளவர்களுக்கு அன்யோன்யம் கூடும். தாம்பத்திய உறவில் நெருக்கம் அதிகரிக்கும். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் உயர்வு ஏற்படும். சிலருக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. வெளிநாட்டு வேலையை எதிர் நோக்கி காத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டு உத்தியோகம் கை கூடிவரும். வயதான பெண்களுக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். ஆக்க அறிவை பயன்படுத்தி செய்யும் பணியில் உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். உங்களுடன் பணியில் உள்ள சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படும்.

வருட ராசி பலன் 2024

கடகம்: குணாதிசயங்கள்

கடக ராசியினர் கற்பனைத் திறம் மிக்கவர்கள். இவர்கள் பிறரின் கருத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். இவர்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள். உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இரக்கமிக்கவர்கள். இவர்களிடம் புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றல் காணப்படும். அனுசரித்து போகக்கூடியவர்கள். மென்மையாகப் பேசும் இயல்பு உடையவர்கள். இவர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக மாறக் கூடியவர்கள். சில சமயங்களில் திடீரென்று கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.சில சமயங்களில் அன்புடன் நடந்து கொள்வார்கள். சில சமயங்களில் அடக்கமாக அல்லது பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கலகலப்பாக தைரியமாக இருப்பார்கள். பொறுமை காப்பதன் மூலம் தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.

பரிகாரங்கள்:

  • திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும்.
  • நீங்கள் நீதி, நேர்மை தவறாமல் நன்னெறியில் நடந்து கொள்வது உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும்.
  • உங்கள் தாயார் அல்லது தாயார் வயதை உடைய பெண்களுக்கு திங்கள் கிழமைகளில் வஸ்திரம் எடுத்து கொடுப்பதின் மூலம் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
  • மணவர்கள் தேவுகளில் வெற்றி பெற, ஸ்ரீ ஹயக்ரீவர் கோவிலுக்கு சென்று ஹயக்கீவரை வணங்கி மூன்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர படிப்பில் வெற்றி கிடைக்கும்.
  • சிறிய யானை சிலையை வீட்டு வரவேற்பு அறையில் வைத்து தினமும் பார்த்துவர அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

மாணவர்கள் படிப்பில் உச்சத்தை தொட ஹயக்ரீவர் ஹோமம்

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC