Navaratri 2023 - Invoke the Blessings of 28 Forms of Divine Feminine Energy to Destroy Negativity and Bestow Power, Prosperity and Progress in Life Join Now
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ராசி பலன் (Rasi Palan)

வேதம் அருளிய பல பெரும் கொடைகளில் தனிப் பெரும் கொடையாக இருப்பது வேத ஜோதிடம் ஆகும். ஜோதிடம் என்றால் ஒளியியல் என்று பொருள். நட்சத்திரங்களையும் அதன் கூட்;டங்களையும் வைத்து உருவாக்கப்பட்டது தான் ஜோதிடம்.

ஜோதிடசாஸ்திரம் பிரபஞ்சம் தோன்றிய காலத்திலேயே தோன்றியதாகும். தெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உன்னதமான கலை. சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது.

கண்களைக் கொண்டு தானே சித்திரம் வரைய முடியும். நமது வாழ்க்கைச் சித்திரத்தை நாம் சிறப்பாக வரைவதற்கு ஜோதிடத் தின் மூலம் கூறும் பலன்கள் நமக்கு உதவுகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தான் ஆவல் இருக்காது? அதற்கு தேவையான உபாயங்களுள் ஒன்று தான் ஜோதிடத்தின் மூலம் கணித்துப் பலன் கூறப்படும் ராசி பலன்.

இன்றைய ராசி பலன் (Today Rasi Palan)

இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். எந்த முன்னேற்பாடும் இன்றி ஒரு நாளை துவக்குவது தான் பெரும்பாலான பிரச்னைகளை உண்டாக்குகிறது. இதனால் பணப் பிரச்சினைகளும் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. கிரகங்களின் நிலை காரணமாக மாறுபடும் நமது நாளின் சுப, அசுப பலன்களை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப செயல்படுவதன் மூலம் நமது அன்றைய தினத்தை பிரச்சினை இல்லாமலும், இனிமையாகவும் கழிக்க பொதுவான இன்றைய ராசி பலனைப் பாருங்கள். உங்கள் நாள் மகிழ்ச்சியாக இருக்க ஆஸ்ட்ரோவேடின் நல்வாழ்த்துக்கள்!