Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
கும்ப ராசி பலன் 2025 | Aquarius Horoscope 2025 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aquarius

கும்பம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் உங்களின் பொருளாதார நிலையில் ஏற்றம் மிகுந்து காணப்படும். தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலங்களில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நடைபயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெளிநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் நன்றாக படித்து முதன்மை பெறுவார்கள். வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான உறவு காணப்படும். காதலர்களுக்கு இடையே அன்பும் பிணைப்பும் அதிகரித்து காணப்படும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு இன்பத்தை கொடுக்கும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. அவர்களுக்கு உடனே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. நவம்பர் மாதத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியூர்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று வருவதன் மூலம் உங்கள் மனதில் நிம்மதி ஏற்படும்.

வருட ராசி பலன் 2025

கும்பம்: குணாதிசயங்கள்

கும்ப ராசியினர் புத்திசாலிகள், ஆனால் புதிய கருத்துகளை கிரகித்துக் கொள்வதில் மந்தமாக செயல்படுபவர்கள். பரந்த கண்ணோட்டம் கொண்டவர்கள். சாந்தமானவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள். நல்ல புரிந்துணர்வு கொண்டவர்கள். சகஜமாக பழகுபவர்கள் மற்றும் சுயநலமற்றவர்கள். இவர்கள் கஞ்சத்தனமாக இருப்பார்கள். அல்லது ஊதாரித்தனமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை பற்றியும் அவர்களின் ஒவ்வொரு அசைவைப் பற்றியும் நன்கு அறியும் இயல்புள்ளவர்கள் என்பதால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற இயலாது. இவர்கள் அனைத்தையும் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் உடையவர்கள். விஞ்ஞானம், ஆராய்ச்சி அல்லது மேம்பாட்டு துறையில் புதுமையான தொழில் வல்லுனர்களாக வர விரும்புவார்கள்.

பரிகாரங்கள்:

  • வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருக உங்கள் வீட்டு தலை வாசலில் உள்ள நிலை கதவின் மேல் ஓடித்தேய்ந்த குதிரை லாடத்தை மாட்டி வைப்பது ஐஸ்வர்யங்களை பெருக்கும்.
  • இளவயது பெண்களுக்கு திருமணத்திற்கு தன உதவி செய்வதன் மூலம் உத்தியோகத்தில் உயர் பதவியை அடைய முடியும்.
  • வயதான ஏழை எளியவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதன்மூலம் தொழிலில் அதிக லாபங்களை அடைய முடியும்.
  • கருப்பு எள்ளால் ஆன திண்பண்டங்களை சிறுவர்களுக்கு சனிக்கிழமை அன்று தானமாக வழங்கி வர தன நிலையில் ஏற்றம் உண்டாகும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அஷ்டலக்ஷ்மி பூஜை

சாதகமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மார்ச், செப்டம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC