Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
மீன ராசி பலன் 2025 | Pisces Horoscope 2025 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
pisces

மீனம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் தன நிலையில் ஏற்றம் மிகுந்து காணப்படும். உங்கள் சமூக அந்தஸ்தும் உயரும். தங்க ஆபரணம் விற்பனை செய்யும் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வருடமாகஇந்த வருடம் இருக்கப்போகிறது. கூட்டுத் தொழிலில் வெற்றியையும், நல்ல தன லாபத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும் உன்னத வருடமாக அமையப்போகிறது. தனியார் துறையில் வேலையில் இருப்பவர்கள் பணிகளை திட்டமிட்டு குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். குழந்தை பிறப்பில் தாமதத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக இந்த வருடம் அமையப்போகிறது. திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களுக்கு குழந்தைகளுடனான உறவு வலுப்படும். இந்த வருடம் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கும் வீடு கட்டும் பணிக்காகவும் அதிகமான பணத்தை செலவு செய்ய வேண்டி வரலாம். செலவுகளை குறைத்து நீண்டகால முதலீடுகளில் தனத்தை முதலீடு செய்வது எதிர்காலத்தில் அதிக லாபத்தை கொடுக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுடன் சுமூகமான உறவுநிலை நீடிக்கும். இந்த வருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவருவதற்கும் செலவுகள் செய்வீர்கள். வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவருவது மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்.

வருட ராசி பலன் 2025

மீனம்: குணாதிசயங்கள்

இவர்கள் கண்ணியமானவர்கள், பணிவானவர்கள், தத்துவவாதிகள், மதம்/ சம்பிரதாயம் மற்றும் இறை பயம் மிக்கவர்கள். இவர்கள் அமைதியின்றி இருப்பார்கள். எப்பொழுதும் கனவுலகில் இருப்பவர்கள். வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பவர்கள். இவர்கள் இயல்பிலேயே அன்பு, இரக்கம் மற்றும் விசுவாசம் மிக்கவர்கள். இவர்கள் மேலாண்மை, நிதி, பொருளாதாரம் , சட்டம், தத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற பாடங்களில் நாட்டம் உடையவர்கள்.

பரிகாரங்கள்:

  • வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெறுவார்கள்.
  • திருசெந்தூர் முருகன் வழிபாடு செய்துவர குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும்.
  • சனிக்கிழமைகளில் கருப்பசாமி வழிபாடு செய்துவர தொழில் சிறக்கும்.
  • கடன் சுமை குறைய செவ்வாய்கிழமைகளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அனைத்து விதமான ஐஸ்வர்யங்களை பெறுவதற்கு குரு பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, அக்டோபர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC