Navaratri 2023 - Invoke the Blessings of 28 Forms of Divine Feminine Energy to Destroy Negativity and Bestow Power, Prosperity and Progress in Life Join Now
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி 2023

மேஷ ராசி

சனி பெயர்ச்சி 2023 பலன்கள்

மேஷ ராசி
மேஷ பொதுப்பலன்

மேஷ ராசி அன்பர்களே! இந்த சனி பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு பதினொன்றாம் ராசியாகிய கும்ப ராசியில் சனி பிரவேசிக்கப் போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கான இந்த பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் இந்த பெயர்ச்சி 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். அதாவது இந்த பெயர்ச்சி 26 மாத காலம் வரை நீடிக்கும். சனி உங்கள் ராசியிலிருந்து முறையே 10 ஆம் வீட்டையும் 11ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அமைக்கும் இலக்குகள் மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு தொடர்கிறீர்கள் என்பதைப் பற்றி பொறுப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 11 வது வீட்டில் அதாவது கனவுகள், இலக்குகள் மற்றும் ஆசைகளை குறிக்கும் லாப ஸ்தானத்தில் சனியின் சஞ்சாரம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள், உங்கள் நோக்கம் என்ன, அதை எவ்வாறு அடைய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், சில வாய்ப்புகள் உங்களுக்கு எளிதாக வரும், ஆனால் அவற்றை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அவற்றை முழுமையாக அடைய நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். ஈகோவின் வெளிப்பாடு சனிக்கு பிடிக்காது என்பதை அறிவது நல்லது, எனவே இந்த காலம் முழுவதும், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து வாய்ப்புகளுக்கும் வெற்றிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மேஷ உத்தியோகம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிக பணிச்சுமை கூடும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கலாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் திறமைக்கு ஏற்றவாறு செயல்படுங்கள். உங்கள் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில தடைகள் இருக்கலாம். இருப்பினும், உங்களால் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும், மேலும் நீங்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். நீங்கள் ஒரு தொழிலை நடத்தினால், வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேஷ காதல் / குடும்ப உறவு

பொதுவாக, நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நீங்கள் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். உங்களால் அவர்களிடம் மனம் விட்டுப் பேச இயலும். மனதார கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் ஆழமான நட்பை நீங்கள் பெறுவீர்கள். . இந்த ஆண்டு, உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் கண்டு கொள்வீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சில சமயங்களில் உங்கள் பிள்ளைகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் நல்ல உறவைப் பேண விரும்பினால் அவர்களுடன் நெகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேஷ திருமண வாழ்க்கை

உங்கள் ராசியில் ராகு மற்றும் உங்கள் ராசியிலிருந்து 7 ஆம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்வதால் சில தடைகள் மற்றும் சிக்கல்கள் இருக்கும். திருமணம் செய்ய விரும்புபவர்கள் தவிர்க்க முடியாத சில தாமதங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் இறுதியில் கெட்டி மேளம் கொட்டக் காண்பார்கள். பொறுமை முக்கியம். திருமணம் ஆனவர்கள் வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் வேண்டுமானால் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேஷ நிதிநிலை

இந்த ஆண்டு, லாப ஸ்தானமாகிய 11 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் நிதிநிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்து, தெளிவாக திட்டமிட்டு முதலீடு செய்தால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் வருமானம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நிதி நிலை வலுவாக இருக்கலாம், மேலும் நீங்கள் சொத்து மற்றும் சேமிப்பில் முதலீடு செய்ய முடியும். பலனளிக்கும் முடிவுகளை ஈர்ப்பதற்காக தெளிவான கண்ணோட்டம் மற்றும் அதற்கேற்ப இலக்குகளை அமைக்கவும்.

மேஷ மாணவர்கள்

சில கவனச்சிதறல்கள் இருக்கலாம், எனவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொடர் முயற்சியும் அர்ப்பணிப்பும் இலக்கை அடையச் செய்யும். ஒரு சிலர் தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்களுக்கு விருப்பமான படிப்புகளைப் பெறலாம். சிலர் எதிர்கால படிப்புக்காக வெளிநாடு செல்லலாம், சாதகமான பலன்களைப் பெற இயலும். . போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்பவர்கள் வெற்றி பெற 100% முயற்சி செய்ய வேண்டும்.

மேஷ ஆரோக்கியம்

இந்த பெயரச்சியின் போது உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை-வாழ்க்கை இரண்டையும் சமன்படுத்தி செல்லுங்கள். உடற் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். வயதானவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சரியான உணவுத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உங்கள் உணவை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும், பழங்களை அதிகம் சாப்பிடவும். மேலும், யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.

மேஷ பரிகாரம்

சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்

ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.

சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு ஆடை மற்றும் போர்வை தானம் செய்யுங்கள்

அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்

சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்

மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்

VEDIC NEW YEAR HOMA
sample

எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2023 – பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2023 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2023 – பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனிவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்