Rama Navami 2023: Invoke Rama through our 110 Birthday Powertime Rituals for Victory, Protection, Prosperity & Goal Achievement Join Now
Mesham Rasi Guru Peyarchi Palangal 2022-2023, மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

மேஷம் பொதுப்பலன்கள்

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசியில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சி ஏப்ரல் 22, 2023 அன்று நடைபெறும். மே 1, 2024 வரையில் இந்த சஞ்சாரம் இருக்கும். அதாவது இந்த பெயர்ச்சிக் காலம் பன்னிரண்டு மாதங்கள் வரை இருக்கும். உங்கள் ராசியில் இருந்து 9 மற்றும் 12 ஆம் வீட்டை குரு ஆட்சி செய்கிறார்.

உங்கள் ராசிக்கு சுபராக விளங்கும் குரு உங்கள் ராசியின் 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டை பார்வையிடுகிறார். இதன் விளைவாக நீங்கள் நற்பலன்களைக் காண்பீர்கள். சந்திரன் மனதை ஆள்வதால், அது உணர்ச்சிகளைக் கையாள்கிறது. மேலும் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கை தெளிவைக் கொடுக்கும். உங்கள் ராசியில் ராகு இருப்பதால் ராகு சந்திரன் இணைவு தோஷத்தை ஏற்படுத்துகின்றது. இது மன அழுத்தம் மற்றும் பிற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

உத்தியோகம் மற்றும் தொழில் நன்றாக இருக்கும். வளர்ச்சி சாத்தியம். இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்தும். கர்மகாரகன் எனப்படும் தொழிலின் அதிபதியான சனி, தனது சொந்த ராசியில், லாபத்தைக் குறிக்கும். வீட்டில் வலுவாக அமைந்திருப்பதால், வளர்ச்சி கூடும். இந்த குரு பெயர்ச்சி உங்கள் தொழில் வாழ்க்கைக்கு துணைபுரியும் காரணியாக இருக்கும். மாற்றம் தொடர்பான அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக இருக்கலாம். சிலர் பதவி உயர்வு பெறலாம் மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லலாம்.

அனைவரிடமும் நல்லுறவை மேற்கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் சனியின் பார்வை காரணமாக, உங்கள் குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதே வீட்டில் குருவின் பார்வை காரணமாக நல்ல புரிதலுக்கு வழிவகுக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் தந்தையின் ஆதரவு கூடுதல் நன்மையாக இருக்கலாம். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கலாம். தாமதங்கள் நீங்கலாம். உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆர்வமுள்ள காதலர்கள் வெற்றி பெறலாம். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கலாம். மேலும் சோதனை காலங்களில் விஷயங்களை உங்களுக்கு சாதகமாக மாற்ற இந்த காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

திருமணத்தைக் குறிக்கும் வீட்டில் கேதுவின் சஞ்சாரம் காரணமாக நீங்கள் பற்றின்மை உணர்வை உணரலாம். என்றாலும் குருவின் பார்வை அங்கு இருப்பதால் மிகுந்த சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலை அக்டோபர் 2023 இல், மறைந்துவிடும். மேலும் பிணைப்பும் புரிதலும் அதிகரிக்கலாம். எனவே அக்டோபர் வரை, உறவில் நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நிதிநிலையைப் பொறுத்தவரை ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் சாத்தியமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வமுள்ள வணிகர்கள் போதுமான நிதியைக் கொண்டிருக்கலாம். அனைத்து முதலீடுகளும் லாபம் தரும். கடன் வாங்கியவர்களுக்கு தீர்வு கிடைக்கும். அனைத்து பொருளாதாரத் தடைகளும் மறைந்து, எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கலாம்.

இந்த குருபெயர்ச்சி காலக் கட்டத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் சில சவாலான சூழலை சந்தித்தாலும் வெற்றி காண்பார்கள். தேர்வில் அனைத்து பாடங்களிலும் வெற்றி காண்பார்கள். அவர்களின் தன்னம்பிக்கை கூடலாம். அறிவு பெருகலாம். ஒரு சில மாணவர்கள் தங்கள் கனவு நனவாகும் வகையில் தாங்கள் விரும்பிய கல்லூரியில் சேர்க்கை கிடைக்கப் பெறுவார்கள். வெளி நாடு சென்று மேற்கல்வி படிக்க நினைப்பவர்கள் அதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

நோய் மற்றும் அதனைச் சார்ந்த பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். நீண்ட நாள் இருந்து வந்த நோய்கள் விலகும். நீங்கள் அன்றாடம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். அதன் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படலாம். அதிக தண்ணீரை குடிக்கவும். பழங்கள் அதிகம் உண்ணவும். அதன் மூலம் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி கிட்டும்.

மேஷம் வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்

வியாழக்கிழமை ஆலயம் சென்று நவக்கிரக குருவை வழிபடவும்

உங்கள் ஆரோக்கியம் ஒத்துழைத்தால் வியாழக்கிழமை விரதம் இருக்கவும்

பசுக்களுக்கு அகத்திக் கீரை அளிக்கவும் மற்றும் மாதம் ஒருமுறை அநாதை இல்லம் சென்று தொண்டு செய்யவும்

எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

குருபெயர்ச்சி 2022-2023 பலன்கள்

உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

குருபெயர்ச்சி 2022-2023 – பரிகாரம்

குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்