மேஷ ராசி பலன் 2025 | Aries Horoscope 2025 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் பொருளாதார நிலையில் மேன்மை அடையக்கூடிய வருடமாக அமையப்போகிறது. தங்களின் தன வரவு அதிகரித்து காணப்படும். தன நிலையில் ஏற்றம் ஏற்படுவதினால் தங்களின் சமூக அந்தஸ்திலும் மாற்றம் ஏற்படும். சமூக அந்தஸ்தானது முன்பு இருந்ததை விட அதிகரித்து காணப்படும். திருமண முயற்சிகள் தடை மற்றும் தாமதப்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலமாகவும் வருமானம் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் அன்புக்குரிய வாழ்க்கை துணையுடன் நீங்கள் இணக்கமான உறவைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் தடைபட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் உன்னதமான வருடமாக திகழப்போகிறது. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். சுயமாக தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும் விதமாகவும் இந்த வருடம் அமையும். சுயமாக தொழில் செய்யும் ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்பவர்கள் புதியதாக தொழில் தொடங்கி உச்சத்தை அடைவார்கள். வெளிநாட்டுக்கு உத்தியோகம் நிமித்தமாக செல்ல வேண்டும் என்று இருப்பவர்களுக்கு வெளிநாட்டு உத்தியோகம் கிடைக்கும். அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் கவனமாக இருப்பது நலம்.

வருட ராசி பலன் 2025

மேஷம்: குணாதிசயங்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். ஒரு அணி அல்லது மக்கள் குழுவிற்கு தலைமை தாங்கி முன்னணியில் இருக்க விரும்புவார்கள். மேஷ ராசியினருக்கு பிறரின் கீழ் படிந்து நடத்தல் கடினமான காரியம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தைரியமாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள்.அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். விவிசாயம், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப பாடங்கள் அவர்களுக்கு விருப்பமானவை. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் விளையாட்டுவீரர், மருத்துவர், பொறியியலாளர் அல்லது பாதுகாப்புப் பணியாளராக ஆவார்கள். கடுமையான இயல்பும் செயல்களில் வேகமும் அவர்களின் பலவீனங்களாகும்.

பரிகாரங்கள்:

  • ஞாயிற்று கிழமைகளில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது உத்தியோக உயர்வை கொடுக்கும்.
  • திங்கட்கிழமை பார்வதி அம்மனுக்கு பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பது சொத்து சேர்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.
  • உத்தியோகத்தில் மேன்மை அடைய கருப்பசாமி கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
  • தன நிலை உயர வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் சிறிய காமதேனு விக்ரகத்திற்கு மொச்சை பயிரை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
  • படிப்பில் வெற்றிபெற புதன்கிழமை அன்று லட்சுமி ஹயகிரீவர் கோவிலுக்கு சென்று மூன்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

சகல சம்பத்துகளும் கிடைக்க அங்காளி பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, மார்ச், ஜூலை, அக்டோபர், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC