Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
தனுசு ராசி பலன் 2024 | Sagittarius Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு வருட ராசி பலன் 2024

இந்த வருடம் காதல் கைகூடும். காதலர்களுக்கு இடையே நல்லிணக்கம் காணப்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகளும் உள்ளது. மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளுடனான உறவுகள் பலப்படும். உங்களுக்கு முன்னோர்களின் அருளும் ஆசிகளும் கிடைக்கும். பூர்வீக சொத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு உண்டாகும் நிலை ஏற்படலாம். அதனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். வாக்குவாத்தை தவிர்ப்பதன் மூலமும் வீட்டில் உள்ள மூத்தவர்களுடன் உங்கள் உறவு பலப்படும். நவம்பர், மற்றும் டிசம்பர் மாதங்களில் தொழில் செய்பவர்களுக்கு தன நிலையில் ஏற்றம் உண்டாகி லாபம் அதிகரிக்கும். கடந்த வருத்தை விட இந்த வருடம் கூட்டுத்தொழில் செய்யும் உங்களிடம் சக கூட்டாளிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தகவல்தொடர்பு சார்ந்த கூட்டுத்தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். கணிதத்துறையை சார்ந்த ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் தொழிலில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தி தரும் உண்ணத ஆண்டாக இந்த வருடம் அமையப்போகிறது.

வருட ராசி பலன் 2024

தனுசு: குணாதிசயங்கள்

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்கள். லட்சியம் கொண்டவர்கள். ஆர்வமூட்டும், தத்துவ, மத/ சம்பிரதாய மனப்பான்மை மற்றும் கடவுள் பயம் மிக்கவர்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் அதன் நன்மையைக் கருத்தில் கொண்டு நல்லது கெட்டது ஆராய்ந்து அதற்கேற்ப தனது இறுதி முடிவை எடுப்பவர்கள். இவர்கள். பொருளாதாரம், சட்டம், ஆன்மீக விஷயங்கள் போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்.இவர்கள் ஆசிரியர். விரிவுரையாளர், வங்கி அலுவலர், நிர்வாகம், ஆலோசகர் மற்றும் போதகராக ஆவார்கள்

பரிகாரங்கள்:

  • வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிந்து தக்ஷிணாமூர்த்தியை வழிபாடு செய்வது வாழ்வில் ஏற்றத்தை கொடுக்கும்.
  • பேராசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்வது தொழிலில் உயர் பதவியை பெற்று தரும்.
  • ஏழை விஷ்ணு தாசர்களுக்கு அன்னதானம் கொடுப்பது சமூக அந்தஸ்தில் ஏற்றத்தை கொடுக்கும்.
  • சிவன் கோவில்களில் பிரதோஷம் அன்று பால் அபிஷேகம் செய்ய பால் தானமாக கொடுப்பது தன நிலையில் ஏற்றத்தை கொடுக்கும்.
  • இளம் பெண்களுக்கு இனிப்பு பதார்த்தங்களை தானமாக கொடுப்பது செல்வ வளத்தை கூட்டும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

குரு பூஜை

சாதகமான மாதங்கள் : மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC