கடுமையான பணத்தட்டுப்பாடு, கடுமையான வீண் விரைய செலவை தடுக்கும் முருங்கை விதை
மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர்களோ அல்லது தொழில் செய்பவர்களோ யாராக இருந்தாலும் அவரவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறு ஒரு பட்ஜெட்டை போட்டு குடும்பம் நடத்தி வருவார்கள். என்றாலும் சில சமயங்களில் பண நெருக்கடி அல்லது தட்டுப்பாட்டை அவர்கள் சந்திப்பார்கள். பணத் தட்டுப்பாடு என்பது பணம் இல்லாமல் இருப்பது அல்ல. தேவையை நிறைவேற்றிக் கொள்ள பணம் குறைவாக இருப்பது ஆகும். இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். அது மட்டும் இன்றி சம்பாதிக்கும் பணம் சில தேவையற்ற காரணங்களுக்காக செலவு செய்ய நேரலாம். அதனை வீண் விரயம் என்று கூறலாம். இதனை சமாளிக்கும் அளவிற்கு பட்ஜெட்டில் இடம் இல்லாத நிலை தான் பணத்தட்டுப்பாடு அல்லது பண நெருக்கடி என்று கூறுவோம்.
அவ்வாறு பணத் தட்டுப்பாடு வரமால் இருக்கவும். வீண் விரயத்தை தடுக்கவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம். இது எளிய பரிகாரம் தான். இதற்கு அதிக பணம் செலவாகாது

வீட்டில் வீண் விரயம் வராமல் இருக்க முருங்கை விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கூட கிடைக்கும். அப்படி இல்லாவிடில் முத்தல் முருங்கைக்காயை வாங்கி அதன் விதைகளை காயப் போட்டு எடுத்துக் கொள்ளலாம். அதன் மீது கோமியம் தெளித்து கற்பூரம் காட்டி சாமி அறையில் வைக்கவும். அவ்வாறு செய்யும் போது முருகப் பெருமானை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒரு பாட்டில் வைக்கலாம். வரவேற்பறை, பூஜை அறை , சமையல் அறை என எல்லா அறைகளிலும் இதனை வைக்கலாம். கழிவறையில் வைக்கக் கூடாது. இதனை ஒரு மண்டலம் முதல் மூன்று மாதங்கள் வரை அப்படியே வைக்கலாம். பிறகு வேறு புதியதாக வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வர இது வீண் விரயத்தை தடுத்து உங்கள் செல்வத்தை சேமிக்க உதவும். செல்வ இழப்பை, பண விரயத்தை பொருள் விரயத்தை தடுக்கும். பண நெருக்கடி இல்லாமல் போகும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு பணம் உங்களிடம் தாங்கும்.











