அரச மரத்தை சுற்றி வருவதன் மூலம் விரைவிலேயே உங்கள் இல்லத்தில் குழந்தை சத்தம் கேட்கும்.
செல்வத்துள் செல்வம் பெருஞ்செல்வம் மக்கட் செல்வம் என்று கூறுவார்கள். திருமணம் ஆனவுடன் அனைவரும் எதிர்பார்பப்து குழந்தைப் பேற்றைத் தான். திருமண வாழ்க்கை முழுமை அடைவது என்பது குழந்தை பிறந்த பின்பு தான். ஒவ்வொருவரும் தான் பெற்றோராக ஆகும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம். ஆனால் இந்த பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைப்பது அரிதாகிறது.ஒரு சிலருக்கு குழந்தைப் பேறு திருமணம் ஆனவுடன் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு தாமதம் ஆகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தோஷங்கள் மற்றும் சாபங்கள் காரணமாக இருக்கலாம் அல்லது ஜோதிட ரீதியாக ஏதாவது பிரச்சினை இருக்கலாம்.
இன்றைய காலக் கட்டத்தில் அதிகம் பேர் தமது குழந்தைப் பேற்றை தள்ளிப் போடுகிறார்கள். பிறகு மருத்துவ சிகிச்சை மேற்கொள்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டி தவம் இருக்கிறார்கள். கோவில் கோவிலாக சுற்றுகிறார்கள். அதனால் நாமாக வாய்ப்பைத் தவற விடுதல் கூடாது. மேலும் இன்றைய காலக்கட்டத்தில் நமது உணவு முறை குழந்தைப் பேறு இன்மைக்கு ஒரு காரணமாக அமைகிறது. சத்து அற்ற உணவு காரணமாக உடல் பலவீனம் குழந்தை இன்மைக்கு காரணமாக அமைகிறது எனலாம்.

குழந்தைப் பேறு பெறுவதற்கான எளிய பரிகாரத்தை இந்தப் பதிவில் காணலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அரச மரம் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். காலையில் தான் செல்ல வேண்டும். அரச மரத்திற்கு குழந்தை பாக்கியம் தரும் தன்மை உள்ளது. சனிக்கிழமை அன்று செல்லுங்கள். அரச மரத்தை தொடாமல் 27 முறை சுற்றி வர வேண்டும். அவ்வாறு சுற்றி வரும் போது குழந்தை பாக்கியம் வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஐந்து வாரங்கள் செய்து வர வேண்டும். கணவன் மனைவி இருவரும் சென்று வணங்கலாம்.
மற்றொரு எளிய பரிகாரமும் நீங்கள் இதனுடன் சேர்ந்து செய்யலாம்.
இதற்கு நீங்கள் அரச விதைகளை சிறிதளவு வாங்கிக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை ஒரு அரச இலையில் போட்டு மடித்து மஞ்சள் நூலில் கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதற்கு மஞ்சள் குங்குமம் அட்சதை சார்த்துங்கள். இலை வாடினாலும் பரவாயில்லை. இவ்வாறு செய்து வர உங்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிட்டும்.











