பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்
இரு மனம் இணையும் திருமண வாழ்வு என்பது எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. திருமண நாளில் கூட தம்பதிகளை வாழையடி வாழையாக குடும்பம் தழைத்து ஒங்கும் வகையில் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். நமது திருமண சடங்குகள் எல்லாம் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது. அம்மி மிதித்து அருந்ததி பாரத்து இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று கூறி திருமணம் நடக்கும். இன்பத்திலும் துன்பத்திலும் இருவரும் ஒன்றாக பங்கு கொள்வோம். ஒருவரை ஒருவர் விட்டு இணை பிரியாமல் வாழ்வோம் என்றெல்லாம் உறுதி மொழி எடுத்து இணையும் வகையில் தான் நமது திருமண சடங்குகள் அனைத்தும் அமைகின்றன.
திருமணம் என்றதும் இரு மனம் மட்டும் இன்றி இரு வீட்டாரும் இதில் சம்பந்தப்படுகிறார்கள். நமது கலாச்சாரமும் நமது பாரம்பரியமும் ஒற்றுமையைத் தான் வலியுறுத்துகின்றன. நாம் இருவர் நமக்கிருவர் என்ற வாசகம் ஒரு அழகான குடும்பத்தைக் குறிக்கின்றது. எங்கேயோ பிறந்து வளர்ந்த இருவர் ஒன்று கூடி வாழ ஆரம்பிப்பது தான் திருமண வாழ்க்கை. பெற்றோர்கள் பார்த்து வைத்து நடத்தும் திருமணம் என்றாலும் காதலித்து புரிந்து கொண்ட திருமணம் என்றாலும் மனம் ஒப்பி வாழ வேண்டும் என்பது தான் அனைவரும் எதிர்பார்ப்பது.

விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை என்பதற்கேற்ப திருமண வாழ்வில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வாழ்க்கை என்னும் வண்டி சுமுகமாகச் செல்லும். இதனை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பது தான் கேள்விக் குறி. இன்றைய நவீன உலகில் அனைவருக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் சம்பாதிக்கின்றனர். இருவரிடத்திலும் பணம் இருக்கிறது. இந்த பொருளாதார சுதந்த்திரம் தான் அனுசரித்துப் போக வேண்டிய இடத்தில் ஈகோவை கிளப்புகிறது. நான் மட்டும் ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது. அதன் பலன் உறவில் விரிசல், பிரிவினை. ஒரு சிலருக்கு இது விவாகரத்து வரை கூட செல்கிறது. இந்த பிரிவு கணவன் மனைவியை மட்டும் பாதிப்பதில்லை. அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் இது பாதிக்கிறது. அப்படி சூழ்நிலை காரணமாக பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான ஒரு அற்புதமான பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் விட்டுச் செல்லுதலோ, விலகி செல்லுதலோ என்றைக்கும் தீர்வாகாது. மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்ண்டும். அத்துடன் இது போன்றதொரு சிறந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடித்து அற்புதமான இந்த உறவை அழகாக வாழ வழி தேடி கொள்ளலாம்.
கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட மந்திரம்.
ராகவேந்திரர் திருவுருப்படம் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். தினசரி வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து ஒரு சின்ன ஸ்டூல் அல்லது மனையில் ராகவேந்திரர் திருஉருவப் படத்தை வைத்து விடுங்கள். அவரை மனதார குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு பட்டுத் துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து கொள்ளுங்கள். அந்த படத்திற்கு முன்பு விளக்கேற்றி மல்லிகைப் பூ மாலை சாற்றி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று தினசரி 300 முறை ஜெபிக்க வேண்டும்.
இந்த எளிய பரிகாரத்தை ஒரு மண்டலம் வீதம் தினமும் செய்து வாருங்கள். இந்த பரிகாரத்தை என்று வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் வியாழக்கிழமை குருவை வணங்க தனிச் சிறப்பு வாய்ந்தது. எனவே அன்று ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. குருவின் அருளால் கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள்.











