துலாம் ராசி 2021 பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும். சில கஷ்டங்கள் இருந்தால் தான் சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடத்தில் ஒரு சில மாதங்கள் தவிர மீதி மாதங்கள் உங்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் தாய் வழி உறவினர்கள் உங்களுக்கு உற்ற துணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். அவர்கள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கர்மகாரகன் என்று அழைக்கப்படும் சனி உங்கள் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்கள் தொழில் மற்றும் பணியில் முன்னேற்றங்கள் பலவும் காணப்படும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் செவ்வாய் உங்கள் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் பணியிடத்தில் சில பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு ஆன்மீக சூட்சுமங்கள் மற்றும் அமானுஷ்ய விஷயங்கள் அறிந்து கொள்வதில் உங்களுக்கு நாட்டம் இருக்கும். அதே சமயத்தில் இந்த வருடம் சில காலம் நீங்கள் சில பின்னடைவுகளையும் சந்திப்பீர்கள். வேலை காரணமாக நீங்கள் சில காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க நேரும். உங்கள் தாயின் உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் முதன்மையானதாக இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கும். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் உருவாகும். சில தேவையற்ற செலவுகள் ஏற்படும் மற்றும் மறைந்து உள்ள சில விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வரும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்கள் மாணவர்களுக்கு நன்மை தரும் காலமாக இருப்பதால் மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டால் கல்வியில் முன்னேற ஏதுவாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். திருமணமாகாத துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். துலாம் ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு துலாம் ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.
உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண - ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்
வேலை மற்றும் தொழில் :
பணியோ, தொழிலோ இந்த வருடம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் சில சமயம் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். எனவே கவனமாகச் செயல்பட வேண்டும். இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நீங்கள் உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் உற்சாக உழைப்பு, கடின உழைப்பின் மூலம் பணியிடத்தில் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியில் முன்னேற்றமும் வெற்றியும் காண்பீர்கள். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது புதிய வேலை கூட கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியை மனதில் கொண்டு செயல்பட்டால் உங்களுக்கு முன்னேற்றம் கிட்டும். நீங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைப் பெறும் வாய்ப்பு அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் தொழிலில் சில நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண : நவகிரக ஹோமம்
காதல் மற்றும் குடும்பம்:
இந்த வருடம் உங்கள் குடும்ப வாழ்க்கை ஏற்ற இறங்கங்களுடன் காணப்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். உங்கள் தாயின் உடல் நிலை குறித்த உங்கள் கவலை காரணமாக அவருடன் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சிறிய பிரச்சினைகள் ஏற்பட வாய்புள்ளது. பணி காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாடு காரணமாகவோ குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சமயம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சூடான சச்சரவுகள் ஏற்படும். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சமயம், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் உங்கள் கணவன் வழி உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். காதல் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் இந்த வருடம் நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன்களைக் காண்பார்கள். செவ்வாய் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்கள், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க ஏதுவான தருணங்கள்
திருமண உறவில் நல்லிணக்கம் காண : காமதேனு ஹோமம்
பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:
இந்த வருடம் உங்களுக்கு லாபமும் நஷ்டமும் இணைந்து வரும். பணவரவும் பணப்புழக்கமும் உங்களுக்கு சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். தாய் வழி உறவினர்கள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையும் உங்களுக்கு பல ஆதாயங்களை அளிப்பார் மேலும் திடீர் லாபங்கள் கிட்டும் வாய்ப்பும் உள்ளது. லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வாய்புகள் இந்த வருடம் உங்களை நாடி வரு. ஒரு சிலருக்கு எதிர் பாராத நஷ்டங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணம் இருக்கிறதே என்று அதிகம் செலவு செய்வது நல்லதல்ல. உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
நிதிநிலை மேம்பட : குபேர ஹோமம்
மாணவர்கள் மற்றும் கல்வி:
துலாம் ராசி மாணவர்களுக்கு இந்த வருடம் கல்வியில் முன்னேற்றம் காண அதிக வாய்ப்புகள் கிட்டும். குறிப்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டங்களில் அதிர்ஷ்டம் கூடிவரும். கல்வி பயில்வதற்காக வெளிநாடு செல்வீர்கள். என்றாலும் போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால் தான் வெற்றி பெற முடியும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டங்களில் நீங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்போடு கல்வி பயின்று ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். மேற் படிப்பிற்காக வெளிநாடு செல்ல இந்த வருடம் உங்களுக்கு மிகவும் சாதகமான வருடம். சிறந்த பலன்களைக் காண்பீர்கள்.
கல்வியில் வெற்றிபெற : ஹயக்ரீவ ஹோமம்
ஆரோக்கியம்:
துலாம் ராசி அன்பர்களின் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எட்டாம் வீட்டில் ராகு மற்றும் இரண்டாம் வீட்டில் கேது உங்கள் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். பழைய மீந்து போன உணவு, குளிர் சாதனப் பெட்டியில் வைத்த உணவு போன்றவற்றை உண்ணாதீர்கள். பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதம் சில சிறிய உடல் நல உபாதைகள் வந்து போகும். கும்ப ராசியில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு ஆரோக்கியம் குறித்த கவனத்தை அளிக்கும்.
ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம்
வீட்டில் செய்யக் கூடிய பர்காரங்கள்:
• ஜோதிடரை கலந்து ஆலோசித்து வெள்ளியில் வைரம் பதித்த மோதிரம் அணியுங்கள்.
• கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உணவு அளியுங்கள். குளிப்பாட்டிவிடுங்கள். கோசாலையை சுத்தம் செய்யுங்கள்.
• குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் “ஓம் ஸ்ரீ சுக்ராய நமஹ” என்று 108முறை ஜெபியுங்கள்
• வெள்ளிக்கிழமை வீட்டில் தென்கிழக்கு மூலையில் விளக்கு மற்றும் அகர்பத்தி ஏற்றுங்கள்
• உங்கள் தாய், சகோதரி, உடன் பணிபுரியும் பெண்களுக்கு உதவுங்கள்
அனுகூலமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், அக்டோபர், நவம்பர்
(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும் பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
Leave a Reply