Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

விருச்சிக ராசி பலன் 2021 - Scorpio Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,265
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசி 2021 பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்களுக்கு  சில சிறிய பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல பலன்கள் கிட்டும். இந்த வருடம் நீங்கள் முக்கியமான பெரிய முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. என்றாலும் அதில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் மற்றும் செல்வம் சேரும். வெளி நாடு செல்ல வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் இப்பொழுது நிறைவேறும். உங்கள் காதல் விவகாரங்கள் கை கூடும். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வந்து போகும். தொழில் அல்லது  வியாபாரம் செய்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டு குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.  கல்வி பயிலும் மாணவர்கள் இந்த வருடம் கடினமாக முயற்சி செய்தால்  வெற்றியும் முன்னேற்றமும் காணுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். சில மாணவர்கள் வெளி நாடு சென்று படிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் நீங்கள் உங்கள் ஆரோக்கியம், பெற்றோரின் ஆரோக்கியம் குறிப்பாக, உங்கள் தந்தையின் ஆரோக்கியம் முதலியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் உணவு முறையிலும்  கவனமாக இருபப்து உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறப்பைத் தரும்.விருச்சிக ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு விருச்சிக ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்: 

இந்த வருடம் நீங்கள் சோம்பலைக் கைவிட்டு விட்டு  சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள்  கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பணியில் செலுத்துவீர்கள்.  சிந்தனையை விட செயல்கள் அதிகம் இருக்கும். ஒரு சில பிரச்சினைகள் தலை தூக்கினாலும் அவற்றையெல்லாம் சமாளித்து விடுவீர்கள். உங்கள் பொறுமையின்மையே உங்களுக்கு எதிரியாக மாறும் அபாயம் உள்ளது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வெற்றியின்  சிகரத்தை எட்டுவீர்கள். வேலை விஷயமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள நேரும். உங்கள் பணியைப் பொறுத்து அது உள்ளூர் பயணம், அல்லது வெளிநாட்டுப் பயணமாக இருக்கலாம். சுய வேலை வாய்ப்பில் உள்ளவர்களுக்கும் வெற்றி நிச்சயம் கிட்டும்.

வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண – குரு ஹோமம்

காதல் மற்றும் குடும்பம்:

அன்பும் பாசமும் மிக்க நீங்கள், இந்த வருடம் சில காலங்கள்  உங்கள் அன்பை உங்கள் வாழ்க்கைத் துனையைவிட பெற்றோரிடம் காட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களின் உடல் நிலையில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டியதால் அவர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை அதிகமாக இருக்கும். இது உங்கள் வாழ்க்கைத் துனையுடனான நெருக்கத்தைக் குறைக்கும்.  அதன் பிறகு கணவன் மனைவி உறவு சீராகிவிடும்.  பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நீங்கள் கவனமாகப் பழக வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் நவம்பர் மத்தியில் வரை உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி காண்பீர்கள்.  உங்கள் உடன் பிறப்புகளுடன் நல்லிணக்க உறவு மேற்கொள்வீர்கள்.  குரு  உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் நீங்கள் அமைதியுடனும், தன்னம்பிக்கையுடனும் பொறுமையுடனும், பதட்டம் இல்லாமலும் செயல்படுவீர்கள். நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்கள் மற்றும் சுப நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு செப்டம்பர் மாத வாக்கில்  திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : காமதேனு ஹோமம் 

பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:

நிதிநிலையைப் பொறுத்தவரை நீங்கள் தைரியமாக இருக்கலாம். உங்கள் நிதிநிலை மேம்படும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வாழ்க்கைத் துணை மூலம் நீங்கள் பல ஆதாயங்களைப் பெறுவீர்கள். சொத்து குறித்த வழக்குகள் ஏதேனும் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு சாதகமாக வழக்கு முடியும். அராசங்கம் மூலமாக கிடைக்கியவேண்டிய ஆதாயங்கள் ஏதேனும் இருந்தால் அவை இந்த வருடம் நிச்சயமாக உங்கள் கைக்கு வந்து சேரும்.  வரவு இருப்பது போலவே செலவும் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றாலும் உங்களின் பெரும்பாலான செலவுகள் சுபச் செலவுகளாகவே இருக்கும். ஆன்மீகக் காரியங்களுக்க்காகவும் நீங்கள் செலவுகளைச் செய்வீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குபேர ஹோமம் 

மாணவர்கள்  மற்றும் கல்வி:

உழைப்பே உயர்வுக்கு வெற்றி என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டிய காலக் கட்டமாக இந்த வருடம் இருக்கும்.  இந்த வருடம் மாணவர்களாகிய உங்களுக்கு கிரக அமைய்புகள் சாதகமாக இல்லாத காரணத்தினால் உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் உறுதுணையாகக் கொள்ள வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக் கட்டங்கள் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டங்கள்உங்களுக்கு மேற் படிப்பு சேர, போட்டித் தேர்வுகள் எழுத, வெளிநாடு சென்று படிக்க, உதவித்  தொகை பெற சாதகமாக இருக்கும். 

கல்வியில் வெற்றி பெற: ஹயக்ரீவ ஹோமம் 

ஆரோக்கியம்:

இந்த வருடம் பொதுவாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும்  நீங்கள் ஒரு சில உபாதைகளை சந்திக்க நேரும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். எனவே நீங்கள் உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உணவு முறையில் கவனம் கொள்ளுங்கள். முறையான தூக்கம் மற்றும் ஒய்வு மேற்கொள்ளுங்கள். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.இவை எல்லாம் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம் 

வீட்டில் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள்:

•    ஜோதிடரின் ஆலோசனை பெற்று முத்து அல்லது பவளம் அணிந்து கொள்ளுங்கள்
•    முக்கிய பணிகளை ஆரம்பிக்கும் முன் சந்தனம்  அல்லது சிந்தூரத்தை நெற்றியில் அணிந்து கொள்ளுங்கள்
•    தினமும் சிவ பெருமானை வழிபடுங்கள் “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை தினமும் 108  முறை ஜெபியுங்கள்
•    இந்த வருடம் வீட்டிலும் அலுவலகத்திலும் நன்மை தரும் பலன்களைக் காண நவகிரக ஹோமம் மேற்கொள்ளுங்கள் 

அனுகூலமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
 

banner

Leave a Reply

Submit Comment