Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கன்னி ராசி பலன் 2021 - Virgo Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,106
Zoom In Zoom Out Print

கன்னி ராசி பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருட ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வருட முடிவிலும் நீங்கள் பல நல்ல பலன்களைக் காண்பீர்கள். மகிழ்ச்சி தரும் விஷயங்களாக  பூர்வ புண்ணிய பலன்களைப்  பெறுவீர்கள்.  ஆன்மீக  ஈடுபாடு வழக்கத்தைவிட அசாதாரணமாக இருக்கும். வருடத்தின் ஆரம்ப மாதங்களில் குடும்ப உறவுகள் சிறக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும்.  உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் இந்த வருடம் உங்கள் தொழில் அமோகமாக இருக்கும். என்றாலும்  நீங்கள் தொழில்  கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இந்த வருடம் முழுவதும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த வருடம் உங்கள் போக்கில் மந்த நிலை இருக்கும். வருட மத்தியில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் உள்ள காலக்கட்டத்தில் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும்.  உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.  நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பிரிந்து  இருக்க நேரும்.  உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் போது நீங்கள் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரும்.  மாணவர்களுக்கு கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் மனதை ஒருமுகப்படுத்த தியானம் மேற்கொள்வது சிறப்பு. வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள்  சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். கன்னி ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு கன்னி ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்:

நீங்கள் வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு இந்த வருடம் உங்களுக்கு ஏற்ற காலம். பல வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி நாடி வரும். நீங்கள் முதலில் செய்த வேலையே கூட கிடைக்கலாம். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக ஆராய்ந்து சரியான வேலையை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வேலை மாற்றத்திற்கு ஜனவரி, மார்ச், மற்றும் மே மாதங்கள் சாதகமான மாதங்களாக இருக்கும்.  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பணியிடத்தில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.  தொழில் செய்பவர்கள் இந்த மாதங்களில் தாங்களாக முடிவெடுக்காமல் நிபுணர்களை கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்ள  வேண்டும். பொதுவாக வேலை மற்றும் தொழிலைப்  பொறுத்தவரை ஆரம்ப மாதங்கள் சிறந்த பலன்களை அளித்தாலும் சில மாதங்கள் நீங்கள் சவால்களை சந்திக்க நேரும்.  ஒரே நேரத்தில் பல வேலைகள் வரும் போது நீங்கள் சிறிது தடுமாறுவீர்கள். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரம் கூட வெட்டமாட்டான் என்பது போல ஒரு வேலையிலும் உங்களால் கவனம் செலுத்த இயலாமல் போக்கலாம். ஒன்பதாம் வீட்டில் ராகு இருப்பதன் காரணமாக நீங்கள் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். 
 வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண – குரு ஹோமம் 

காதல் மற்றும் குடும்பம்:

வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து தானே இருக்கும்.  நீங்கள் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா ? உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். வருட ஆரம்பத்தில் பல குழப்பங்களுடன் இருக்கும் உங்கள் குடும்ப உறவு முறைகள் வருட மத்தியில் சீராகி வருட முடிவில் உங்களுக்கு சாதகமாக அமையும்.  வார்த்தைகளை கொட்டி விட்டால் அள்ளமுடியாது. எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.  குறிப்பாக பூர்வீகச் சொத்து குறித்த விஷயங்களில் கவனமாகப் பேசவும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு செப்டம்பர் மாத வாக்கில் திருமணம் நிச்சயிக்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணை வேலை வேலை என்று பணியிலேயே கவனம் செலுத்துவது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவரின் வெற்றி உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் முதல் குழந்தை குறிந்த கவலை காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். உங்கள் இரண்டாம் குழந்தை நிலை சிறப்பாக இருக்கும். குறிப்பாக கல்வியில்  சிறந்த முறையில் வெற்றி  காணும் வகையில் இருக்கும். 
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண – சிவ சக்தி ஹோமம் 
நிதிநிலை 

இந்த வருடம் உங்கள் நிதி நிலையில் ஒரு ஸ்திரத் தன்மையை நீங்கள் காண்பீர்கள். வெளிநாட்டின் மூலம் ஆதாயங்கள் வந்து சேரும். நீங்கள் வெளிநாடு கூடச் செல்வீர்கள். உங்கள் தந்தை வழி சொத்துங்கள் உங்களுக்கு வரும். உங்கள் வருமானமும் பெருகும் என்பது உங்களுக்கு இரட்டிப்பு  மகிழ்ச்சியை அளிக்கும். அதே சமயத்தில் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.  பொழுதுபோக்கு, ஷேர்  மார்கெட் மற்றும் ஊக வணிகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள்.

நிதிநிலை சிறக்க – குபேர ஹோமம்

மாணவர்கள்:

உழைப்பே உயர்வு தரும் என்பதை கருத்தில் கொண்டு கன்னி ராசி மாணவர்கள் படிக்க வேண்டும். பாடங்களைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் ஏற்படும். வீட்டுப் பாடங்களை எழுதுவதிலும் சோம்பல் இருக்கும். கவனச்சிதறல் காரணமாக படிப்பில் உங்கள் ஆர்வம் குறையும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. நீங்கள் மனது வைத்தால் சோம்பலைக் கை விட்டு வீட்டுப் பாடங்களை  குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியும். தியானம் மேற்கொண்டு மனதை ஒருமுகப் படுத்துங்கள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிட்டும். அரசியல் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் சமூகவியல் படிக்கும் மாணவர்கள் இந்த வருடம் சிறப்பாக செயலாற்றுவார்கள். 

கல்வியில் வெற்றி பெற – ஹயக்ரீவ ஹோமம்

ஆரோக்கியம்:

இந்த வருடம் நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். என்றாலும்  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களில் சிலருக்கு நீரிழிவு மற்றும் யூரின் ட்ராக் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஆரோக்கியம் சிறக்க – தன்வந்தரி ஹோமம்

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள் :

•    ஓம் ராகுவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
•    உங்கள் தந்தை, மூத்தவர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர்களின் ஆசிகளைப் பெறுங்கள்
•    ஜோதிடரின் ஆலோசனை பெற்று மரகதக் கல்லை அணியுங்கள்
•    சிகப்பு மலர் சார்த்தி அன்னை துர்கையை வழிபடுங்கள்  

அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் 
அனுகூலமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)

banner

Leave a Reply

Submit Comment