விருச்சிகம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்குத் திருமணம் நடக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வீட்டில் விருந்து விசேஷங்கள் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். மாணவ மாணவியர்கள் அதிக கவனத்துடன் அதிக நேரம் படிக்க நேரும் என்பதால் ஓய்விற்கு நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
குடும்ப உறவு முறைகள் சிறப்பாக இருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். இளைய உடன் பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விருந்து விசேஷம் என வீடு கலகலப்பாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தக்க துணை கிடைக்கப் பெற்று இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. திருமணமான தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்வார்கள். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் கூடும். குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
திருமணத் தடை நீங்க லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதாரநிலை பொதுவாக சிறப்பாக இருக்கும். புதிய தொழில் மூலம் வருமானம் பெருகும். சில குறிப்பிட்ட துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் தொழில் மூலம் சிறந்த வருமானம் பெறுவார்கள். குறிப்பாக ஆசிரியர் பணி, தொலைத் தொடர்பு மற்றும் அறிவியல் துறையில் இருப்பவர்களின் தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய வாகனங்களை புதுப்பிக்கும் வகையில் நீங்கள் செலவுகளை சந்திக்க நேரும். தேவையற்ற செலவாக அதனை நீங்கள் கருத நேரலாம். பிறருக்கு நீங்கள் கடனாக அளித்த தொகைகள் திரும்பப் பெறுவதில் சில தாமதங்களை சந்திப்பீர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
பணியில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். புதிய பொறுப்புகள் உங்களை நாடி வரும். பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். சிறப்பாகப் பணியாற்றுவார்கள். உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளின் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கப் பெறுவார்கள்.
தொழில்:
சொந்தத் தொழில் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் வழக்கத்தை விட அதிக அளவிலான போட்டியாளர்களை சந்திக்க நேரும். புதிய தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். பல் பொருள் அங்காடி மற்றும் உணவு சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை இந்த மாதம் சிறப்புடன் நடத்தி லாபமும் முன்னேற்றமும் பெறுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
விருச்சிக ராசி தொழில் வல்லுனர்கள் சிறப்பாகப் பணியாற்றி தங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பார்கள். மின்சாரத்துறை, நீதித்துறை மற்றும் தோல் பதனிடும் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த வகையில் ஏற்றம் இருக்கும். பிற துறைகளைச் சார்ந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.
உத்தியோகம் மற்றும் சுய தொழில் சிறக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வயிறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தியானம் மற்றும் சிறு சிறு உடற்பயிற்சி மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாகக் காத்துக் கொள்ள இயலும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்வு எழதி வெற்றி பெறுவார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
சுப நாட்கள்:
8, 10, 11, 15, 25, 29.
அசுப நாட்கள்:
4, 5, 21, 22, 23, 24,
Leave a Reply