தனுசு நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் உங்களுக்கு இல்லற இன்பத்தை விட ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். என்றாலும் கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழ்வீர்கள். பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் புரிந்துணர்வு அதிகரிக்கும் காரணமாக உறவில் நெருக்கமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இளைய உடன் பிறப்புகளுடனான உறவு மேம்படும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தங்களுக்கான தக்க துணை கிடைக்கப் பெற்று மனம் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த மாதம் தங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமை இருக்கும். அவர்களின் அதரவு கிடைக்கப் பெறுவீர்கள். இளைய உடன்பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்களும் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்ப ஓற்றுமை ஓங்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புனித ஸ்தலங்கள் அல்லது ஆன்மீகப் பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
தனுசு ராசி அன்பர்களின் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரித்து அதனால் கையில் பணப்புழக்குமும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏதுமின்றி செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் மூலம் லாபமும் பண வரவும் இருக்கும். பங்கு வர்த்தக முதலீடு மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு மூலம் லாபம் பெறலாம்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். உங்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் உத்தியோகம் தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில்:
சொந்தத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்களுக்கு சாதகமாக இருக்கக் காண்பார்கள். தொழில் ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடுமுன் கவனம் தேவை. வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயமும் வெற்றியும் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளிகளிடம் இருந்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கமிஷன் அடிப்படையில் பணி புரிபவர்கள் தங்கள் தொழில் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள்.மருத்துவத் துறை, கல்வித்துறை, வங்கித் துறை, மற்றும் ஜோதிடத் துறையில் இருக்கும் புதிய நண்பர்கள் மூலம் உங்கள் தொழிலில் முதலீடு செய்ய தன உதவி கிடைக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான உடல் உபாதைகள் எதுவும் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அஜீரணம் சம்பந்தமான உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. தாயின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள். கல்வி கற்கும் திறன் மற்றும் கிரகிக்கும் திறன் கூடும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி பெறுவார்கள். பொறியியல் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
8, 10, 11, 15, 21, 22, 29.
அசுப நாட்கள்:
4, 5, 23, 24, 25, 26.
Leave a Reply