November Matha Thulam Rasi Palan 2021
துலாம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:
குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். குடும்பச் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல ஒற்றுமை இருக்கும். உறவில் அன்யோன்யம் கூடும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை பளு காரணமாக மனதில் பதட்டமான நிலை இருக்கும். அது உங்கள் உடல் நிலையை பாதிக்கும் என்பதால் அமைதியுடன் செயல்படுவது நல்லது. பதட்டமின்றி செயல்படுங்கள். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். மாணவர்கள் கவனமுடன் படிப்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது துலாம் ராசி அன்பர்கள் மனதில் காதல் மலரும். காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே. தாம்பத்திய வாழ்வு நன்றாக இருக்கும். இல்லற வாழ்வின் இன்பத்தை முழுமையாகப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பாக மூத்த சகோதர சகோதரிகளுடனான உறவுகள் பலப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை
நிதி நிலை:
துலாம் ராசி அன்பர்களின் நிதிநிலை இந்த மாதம் சீராக இருக்கும். பங்கு வர்த்தக வியாபாரம் அல்லது பங்கு வர்த்தக முதலீடு உங்களுக்கு சிறந்த லாபத்தை அளிக்கும். இதுவரை தொல்லை தந்து வந்த கடன் சுமைகள் இந்த மாதம் குறையும். உங்கள் வருமானம் பெருகும். குறிப்பாக பொறியியல் மற்றும் நீதித் துறைகளில் வேலை செய்பவர்களின் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். அதிகப் படியான பணத்தைக் கொண்டு இந்த மாதம் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும். யூக வணிகமான பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை
வேலை:
நீங்கள் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர் என்றால் இந்த மாதம் நீங்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெற்று இந்த மாதம் உங்கள் கனவுகள் நனவாகும். அரசுத் துறை ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வார்கள். பணியிடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெற்று மகிழ்வார்கள்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை அளிக்கும். பழைய கூட்டுத் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கூட்டுத் தொழில் முதலீடுகளின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் ரீதியிலான வெளிநாட்டுப் பயணங்களின் போது நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
தொழில் வல்லுனர்கள்:
துலாம் ராசி தொழில் வல்லுனர்களுக்கு தங்கள் தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். தங்களின் தொழில் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் அபரிமிதமான லாபம் கிட்டும். இந்த மாதம் உங்கள் நிர்வகிக்கும் திறமை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். . உங்கள் நிர்வாகத்திறன் பாராட்டைப் பெறும் வகையில் இருக்கும். உத்தியோகம் செய்யும் இடத்தில் உங்கள் தன்னம்பிக்கை உயரும். இதனால் மற்றவர்களின் கவனம் உங்கள் மீது திரும்பும்.
உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஈரல் மற்றும் கணையம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவே மருந்து, மருந்தே உணவு. எனவே அளவான சத்தான உணவை எடுத்துக்கொள்வது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். நல்ல தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து பேராசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பேராசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
8, 10, 11, 15, 22, 29.
அசுப நாட்கள்:
4, 5, 19, 20, 21, 24, 25.







