Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2021 | November Matha Mithunam Rasi Palan 2021

October 19, 2021 | Total Views : 536
Zoom In Zoom Out Print

மிதுனம் நவம்பர் 2021 பொதுப்பலன்:

இந்த மாத ஆரம்பத்தில் நீங்கள் சாதாரண பலன்களைப் பெறுவீர்கள். மாத இறுதியில் சில நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். பண வரவும் குறைவாக இருக்கும். வீடு பராமரிப்பு குறித்த செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். உங்கள் சேமிப்புப் பணத்தில் இருந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியிடச் சூழல் சாதகமாக இருக்கக் காண்பார்கள். தொழில் சிறப்பாக இருக்கும். உங்கள் வெளி நாட்டுக் கனவுகள் நனவாகும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். 

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

இந்த மாதம் காதலர்களுக்கு ஏற்ற மாதமாக இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக மாத ஆரம்பத்தில் உறவில் புரிந்துணர்வின்மை காரணமாக  கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.  தேவையற்ற பேச்சுகள் அல்லது வாக்கு வாதங்களை தவிர்ப்பது நலம். மாத இறுதியில் உறவில் சகஜமான மற்றும் சுமுகமான  நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

திருமணமான தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட அங்காரகன்  பூஜை

நிதி நிலை:

இந்த மாத நிதிநிலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்க  வாய்ப்பில்லை என்றாலும் உங்கள் தொழில் மூலம் நீங்கள் கணிசமான வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகம் இந்த மாதம் உங்களுக்கு லாபம் அளிக்காது. உங்களில் சிலருக்கு காப்ப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் நிதிநிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. 

நிதிநிலையில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

இந்த மாதம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். ஆடை தயாரிப்பு அல்லது உணவு தாயரிப்புத் துறையினர் சிறந்த லாபமும் கணிசமான வருமானமும் பெற்று மகிழ்ச்சி காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.   நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள். 

தொழில்:

இந்த மாதம் மிதுன ராசி அன்பர்களின் தொழில் சிறப்பாக நடக்கும். வெளிநாட்டில் தொழில் செய்யும் எண்ணத்தில் மேற்கொண்ட முயற்சிகள் இந்த மாதம் வெற்றி அளிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். அதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள்  

இந்த மாதம் நீங்கள் சிறந்த வளர்ச்சியைக் காண்பீர்கள். வெளி நாடு சென்று உங்கள் திறமைகளை பளிச்சிட வைப்பீர்கள். அதன் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். நீங்கள் அரசு சார்ந்த துறையில் பணி புரிபவர் என்றால் நீங்கள் எதிர் பார்த்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இன்றி சில ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற ஆதாயங்கள் கிட்டுவதில் கால தாமதம் இருக்கும்.   

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க  சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

 உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களில் சிலர் மூட்டு வலிக்கு ஆளாக நேரலாம். வயிற்று உபாதைகளை சந்திக்க நேரலாம் எனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் தங்கள் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பதட்டத்தைக் கைவிட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க வேண்டும். ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். எளிய தியானப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை

சுப நாட்கள்: 06, 11, 21, 22, 24, 25, 26, 29
அசுப நாட்கள்:  4, 5, 7, 8, 9, 10, 11, 12, 23, 27, 28

banner

Leave a Reply

Submit Comment