AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன் 2021 | November Matha Rishabam Rasi Palan 2021

dateOctober 19, 2021

ரிஷபம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே!   குடும்ப உறவுகளில் நெருக்கம் அதிகமாக இருக்கும்  திருமண முயற்சிகள் கை கூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். அதிக பணிகள் மற்றும் பொறுப்புகளை நீங்கள் சந்திக்க நேரும்.  தொழில் சிறப்பாக நடக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் எதையும் இந்த மாதம் மேற்கொள்வது நல்லதல்ல. ஏற்கனவே இருக்கும் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெற்று உங்கள் தொழிலில் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண்பீர்கள். நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் மூத்த உடன் பிறப்புகளுடன் உறவாடும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. ரிஷப ராசி இளம் காதலர்கள் தங்கள் காதல் கை கூடி வரக் காண்பார்கள். கனவுகள் நனவாகும் வகையில் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். திருமண முயற்சிகளில் நீங்கள் சந்தித்து வந்த தடை தாமதங்கள் விலகும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் காணப்படும். 

திருமணமான தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட சந்திரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். தொழில் மூலம் கணிசமான லாபமும் வருமானமும் பெறுவீர்கள். உங்கள் கணக்கு வழக்குகளை நீங்கள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம்.  உங்கள் பொருளாதார நிலை உயரும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது குறித்த செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். 

நிதிநிலையில் ஏற்றம் காண சுக்கிரன் பூஜை

வேலை: 

தனியார் துறையில் பணி புரிபவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வெளி நாட்டு வேலை குறித்த கனவில் இருப்பவர்கள் தங்கள் கனவுகள் நனவாகக் காண்பார்கள். உங்கள் தகுதிக்கேற்ற வேலை வெளிநாட்டில் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். நிதித்துறை மற்றும் வங்கித் துறையில் இருப்பவர்கள் கணிசமான வருமானம் பெருகக் காண்பார்கள். அரசுத் துறையில் பணியாற்றுபவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள் 

தொழில் 

தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் சிறந்த லாபம் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சியை அளிக்கும். குறிப்பாக வண்டி வாகன வகையிலான தொழில் மேன்மை அளிக்கும்.  அதன் மூலம் வருமானம் கணிசமாக உயரும். பங்கு வர்த்தகம் லாபத்தையும் மேன்மையையும் அளிக்கும்.  

தொழில் வல்லுனர்கள் 

இந்த மாதம் தொழில் வல்லுநர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கவிருக்கிறது. மருத்துவம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை தொழில் வல்லுனர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். சட்டத் துறையில் இருப்பவர்கள் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியைக் காண்பார்கள். கட்டிடத் துறை வல்லுனர்கள் இந்த மாதம் வெளி நாடு சென்று தங்கள் திறமைகளை காட்டிப் பிரகாசிக்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். 

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க  சனி பூஜை 

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள்  உணவு விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அங்காரகன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். வெளி நாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். முதுகலை பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை

சுப நாட்கள்: 8, 10, 15, 11, 21, 22, 24, 25, 29 
அசுப நாட்கள்: 4, 5, 7, 8, 9, 23 


banner

Leave a Reply