AstroVed Menu
AstroVed
search
search
x

November Matha Kadagam Rasi Palan 2021

dateOctober 19, 2021

கடகம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

குடும்பத்தில் ஒற்றுமையும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவும் காணப்படும். கணவன் மனைவி உறவில் சுமுக நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் அதிக பொறுப்புகள் வழங்கப்படும். என்றாலும்  சிறப்பாகப் பணியாற்றி பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிடத்தில் அனைவரிடமும் சமூகமான உறவு நிலை இருக்கும்.  உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது ஏற்ற மாதமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்கள் தொழில் போட்டியாளர்களை எளிதாக  வெற்றி காண உகந்த மாதமாக உள்ளது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் நட்பு வட்டாரம் பெருகும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

கடக ராசி இளம் வயது அன்பர்கள் மனதில் காதல் மலரும். காதலில் வெற்றியும்  கிட்டும். மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். காதலில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள். நல்ல புரிந்துணர்வு காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கமும் அன்னியோன்யமும் கூடும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை இருக்கும்.

திருமணமான தம்பதிகளுகிடையே ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாகப் புரளும். பயணங்களுக்காக நீங்கள் பணச் செலவை செய்ய வேண்டியிருக்கும். வரவை விட செலவுகள் குறைவாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை பாக்கிகளை செலுத்தி முடிப்பீர்கள். புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் லாபமும் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் மூலம் நீங்கள் லாபம் காணலாம். 

நிதிநிலையில் ஏற்றம் காண ராகு பூஜை

வேலை:

கடக ராசி அன்பர்களுள் சிலர் இந்த மாதம் வேலை மாற்றம் குறித்த முயற்சிகளை மேற்கொள்ள  எண்ணுவீர்கள்.  அது பற்றிய முடிவுகளை நன்கு யோசித்து எடுப்பது உசிதம். ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பதால் சில ஏமாற்றங்களைத் தவிர்க்க இயலும். நீதித் துறையில் பணியாற்றும் கடக ராசி அன்பர்கள் தங்கள் வேலையில் கூடுதல் பளு இருக்கக் காண்பார்கள்.  அரசுத் துறை பணியாளர்கள், தாங்கள்  நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். அதன் மூலம் வருமான உயர்வும் ஏற்படும். 

தொழில்:

சுய தொழில் இந்த மாதம் உங்களுக்கு அனுகூல பலன்களை அளிக்கும். தொழில் சிறப்பாக நடக்கும் அதன் மூலம் பண வரவு பெருகும். உங்கள் நிதிநிலை மற்றும் வசதிகள் ஏற்றத்துடன் இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் சிறந்த வாடிக்கையாளர்களையும் சிறந்த தொழில் வாய்ப்புகளையும் பெறுவார்கள்.  வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் நல்ல லாபமும் ஆதாயமும் காண்பார்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களின் தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். தங்கள் தொழில் மூலம் சிறந்த வருமானம் ஈட்டுவார்கள்.  ஊடகத்துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். பொறியியல் துறையை சார்ந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் மூலம்  முன்னேற்றம் உண்டாகும். நிதி மற்றும் உயர்கல்வித் துறையை சார்ந்தவர்களின் தன நிலையில் ஏற்றம் உண்டாகும். 

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க  ஸ்ரீம் ப்ரிஸி லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறுநீரகம் மற்றும் அஜீரணம் சம்மந்தப்பட்ட உடல் நல பாதிப்பு ஏற்படலாம். உங்கள் உபாதைகளுக்கு தண்ணீர் மற்றும் சத்தான உணவு மருந்தாக அமையும். மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தியானம் மன அமைதிக்கு வழி வகுக்கும். உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை  நீங்கள் சிறப்பாக வைத்துக் கொள்ள  இயலும். தாய் மற்றும் தந்தையின் உடல் நலத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு துர்கா பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள்  மனதை ஒருமுகப்படுத்துவதில் சில சிரமங்களைக் காண்பார்கள். கவனச் சிதறலுக்கு ஆட்படுவார்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். அவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள். அறிவியல் மற்றும் நீதித்துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று முன்னேறுவார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை

சுப நாட்கள்: 

11, 21, 24, 25, 29. 

அசுப நாட்கள்:

4, 5, 12, 13, 14, 23, 24.


banner

Leave a Reply