மகரம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாகவும் வரவேற்கத் தக்க மாதமாகவும் இருக்கும். பொருளாதாரம். குடும்பம், வேலை என அனைத்து அம்சங்களிலும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்து இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லுறவு நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிட்டும். தொழில் சிறப்பாக நடக்கும். பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தின் மூலம் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உணவு கட்டுப்பாடு விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
மகர ராசியைச் சார்ந்த இளம் வயது அன்பர்கள் காதல் வயப்படக் கூடும். காதல் உறவில் மகிழ்ச்சியும் இன்பமும் கூடும். நீங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். இருவருக்கும் இடையிலான உறவு பலப்படும். திருமணமான தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கருத்தொருமித்து அன்யோன்யத்துடன் வாழ்வீர்கள். குடும்ப உறவினர்களுக்கு இடையே சுமுகமான உறவு நீடிக்கும்.
காதல் உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் சரளமாகப் புழங்கும். வரவை விட செலவு குறைவாக இருக்கும் வகையில் நீங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எனவே உங்கள் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் எதிர் கால நலன் கருதி பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். ஆன்மீகக் காரியங்கள் மற்றும் தான தருமங்களுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள்.
தன வருவாய் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிட்டும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். சக பணியாளர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பார்கள். . வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.
தொழில்:
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் தொழில் மூலம் வருமானம் பெருகும். நீங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதில் சிறந்த பலனும் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். உங்களில் சிலர் வெளிநாட்டில் அல்லது வெளி நாடு தொடர்பான தொழிலில் சிறப்புடன் செயலாற்றும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் நல்ல லாபம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் மேற்கொள்ள நினைப்பவர்கள் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். கூட்டுத் தொழில் சார்ந்த ஒப்பந்தங்களில் கையொப்பமிடுமுன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்துச் செயல்பட வேண்டும்.
தொழில் வல்லுனர்கள்:
மகர ராசி தொழில் வல்லுனர்கள் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல லாபத்தைக் காண்பார்கள். குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கூடுதல் பொறுப்புகளை ஏற்று சிறப்பாகச் செயலாற்றுவார்கள். சிறந்த பணிக்கு அங்கீகாரமும் பாராட்டும் பெறுவார்கள். மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் தொழில் மூலம் வருமானம் பெருகக் காண்பார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறப்பு. குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை
மாணவர்கள்:
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதைக் கருத்தில் கொண்டு மகர ராசி மாணவர்கள் இந்த மாதம் கடினமாக முயற்சி செய்து சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆசிரியர்களின் ஆதரவும் ஊக்குவிப்பும் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
1, 3, 4, 8, 10, 15, 21, 22, 25.
அசுப நாட்கள்:
4, 5, 11, 12, 23, 24, 26, 27, 28, 29.
Leave a Reply