AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2021 | November Matha Kumbam Rasi Palan 2021

October 19, 2021 | Total Views : 596
Zoom In Zoom Out Print

கும்பம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் குதூகலம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்களால் மகிழ்ச்சி கிட்டும். உங்கள் வருமானம் உயரும். நீங்கள் பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணம் குறித்து இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதகமான பலன்களைக் காண்பார்கள்.  தொழில் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வெளிநாட்டு தொடர்பான தொழில் நடத்துபவர்களும் சிறந்த ஆதாயம் காண்பார்கள். உங்களில் சிலர் புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். உங்கள் ஆரோக்கியம் குறித்த செலவுகள் எழும் என்பதால் அதற்கு சிறிது பணத்தை நீங்கள் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் இனிமையும் மகிழ்ச்சியும் இருக்கும். குதூகலம் காணப்படும். உறவுகளில் ஒற்றுமை நீடிக்கும். பண நெருக்கடிகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில்  சுபநிகழ்ச்சிகள், விருந்து மற்றும் விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

குடும்ப உறவுகள் மேம்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் சேமிப்புப் பணத்தைச் சொத்தாக மாற்ற எண்ணுவீர்கள்.  அசையும் சொத்து அல்லது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். இந்த மாதம் வாகனம் அல்லது நிலம் வாங்கும் யோகம் உண்டு. அன்றாட செலவுகளில் அவசிய தேவைக்கு மட்டும் இடம் அளியுங்கள். ஆடம்பரத்தை தவிர்த்து விடுங்கள். கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும்.      பங்கு வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது  என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. பணம் குறித்த எந்தவிதமான  முக்கிய முடிவுகளையும் இந்த மாதம் எடுப்பது உசிதமல்ல. 

கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருக்கும் கும்ப ராசி அன்பர்கள் தங்களின் பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். உத்தியோகத்தில் சிறப்பாகச் செயலாற்றி சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் திறமைக்கு அங்கீகாரமும் நல்ல பெயரும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் நல்ல பெயர் பெறுவீர்கள். உத்தியோகம் நிமித்தமான பயணம் மூலம் நீங்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். 

தொழில்:

தொழில் செய்யும் கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் அனுகூல நிலை காண்பார்கள். தொழில் சிறப்பாக நடக்கும். அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய தொழில் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். தனம் சம்மந்தப்பட்ட தொழிலில் இந்தமாதம் அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த மாதம் நீங்கள் தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் நீங்கள் பல புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வெளிநாடு சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் அந்த வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வீர்கள்.  அதன் மூலம் நல்ல பெயரும் புகழும் சம்பாதிப்பீர்கள். தொழில் புரியும்  இடத்தில் மேலதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் எழும்.  எனவே நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. 

உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட சனி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது உபாதைகள் உங்களை அணுகாது என்ற போதிலும். வயிறு மற்றும் தலை சம்பந்தமான சிறு சிறு உடல் பாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைக்கான தேவை இருக்காது. தாய் மற்றும் தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் கடமையே கண்ணாக படிப்பில் அதிக  கவனம் செலுத்தி படிப்பார்கள். சிறந்த முறையில் கல்வி பயின்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள்.     உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள். 
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணபதி பூஜை

சுப நாட்கள்: 

8, 10, 15, 21, 22, 24, 25, 29.

அசுப நாட்கள்:

1, 2, 3, 4, 5, 11, 12, 27, 28.

banner

Leave a Reply

Submit Comment