மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2021 | November Matha Meenam Rasi Palan 2021

x
x
x
cart-added The item has been added to your cart.

மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2021 | November Matha Meenam Rasi Palan 2021

October 19, 2021 | Total Views : 37
Zoom In Zoom Out Print

மீனம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். உங்கள் வார்த்தைகளில் இனிமை இருக்கும்.  பாட்டு, நடனம், மற்றும் கலைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். காதலர்களுக்கு இந்த மாதம் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவர்  என்றால் இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த பதவி உயர்வு கிட்டும். அதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும். என்றாலும் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற அங்கீகாரமும் பெறுவீர்கள். மாணவர்கள் விடா முயற்சி செய்து வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

காதல் வலையில் வீழ்ந்த மீன ராசி இளம் வயது அன்பர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியை அனுபவிக்கும் மாதமாக இருக்கும். உங்கள் மனதில் இருக்கும் அன்பை இனிமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துவீர்கள். இதன்மூலம் உங்கள் காதல் துணையைக் கவர்வீர்கள். திருமண வயதில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் தங்களுக்கான துணை கிடைக்கப் பெற்று இல்லற வாழ்வில் அடி எடுத்துவைக்க இந்த மாதம் துணை செய்யும். திருமணமான தம்பதிகள் இனிய இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வும் அதன் காரணமாக நெருக்கமும் அதிகரிக்கும். குழந்தைகளிடம் நல்லுறவும் அவர்கள் மூலம் மகிழ்ச்சியும் கிட்டும். 

காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

தொழில் மூலம் நீங்கள் அதிக பணவரவு காண இயலாது. பண வரவு எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருக்கும். வியாபாரத்தின் மூலம் கிட்டும் லாபம் உங்கள் தேவைகளுக்கான பணத்தை அளிக்கும்.  இந்த மாதம் நீங்கள் மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணத்தை சிக்கனமாகக் கையாள வேண்டும். இந்த மாதம் சேமிப்பதையும் நீங்கள் கடினமாக உணர்வீர்கள். 

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக  இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமானதாக  இருக்கும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் திறமைக்கான  பாராட்டும் புகழும் பெறுவர்கள். பணியிடத்தில் புதிய நண்பர்களுடன் உங்களுக்கு அறிமுகம் ஏற்படும்.  நீங்கள் அரசுத் துறையில் பணியாற்றுபவர் என்றால் குறிப்பாக நீங்கள் உயர் பதவி வகிப்பவர் எனில் உங்கள் பணியில்  நீங்கள் சிறந்த முன்னேற்றங்களைக் காண்பீர்கள். 

தொழில்:

சொந்தத் தொழில் செய்யும் மீன ராசி அன்பர்கள் குறிப்பாக வெளிநாட்டுத் தொடர்புடைய  தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக பண வரவைக் காண்பார்கள். கமிஷன் அடிப்படையில் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த வருமானமும் லாபமும் பெறுவார்கள். 

தொழில் வல்லுனர்கள்:

உங்கள் தொழில் குறித்து நீங்கள் வெளி நாடு செல்ல வேண்டி விரும்பினாலும். அல்லது வெளி நாட்டில் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும் இந்த மாதம் உங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பீர்கள்.  நீங்கள் இசை, நாடகம், நடனம் போன்ற படைப்பு மற்றும் கலைத் திறன் தொடர்புடைய துறையில் பணிபுரிபவர் என்றால் நீங்கள் உங்கள் திறமைகளை செவ்வனே வெளிபடுத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பல சாதனைகளைப் படைத்து முன்னேறுவீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண சனி பூஜை

ஆரோக்கியம்:

இது வரை நீங்கள் சந்தித்து வந்த உடல் உபாதைகளில் இருந்து மீள்வீர்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சளி மற்றும் தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். பெரிய அளவிலான உடல் உபாதைகள் உங்களை வருத்தாது. தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் மனதையும் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள இயலும்.  

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தங்கள் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் விருப்பம் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம் நிறைவேறும்.  ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்: 

8, 10, 15, 21, 22, 25, 29

அசுப நாட்கள்:

3, 4, 5, 11, 12, 23, 24, 27, 28.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos