கடகம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Kadagam

கடகம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். காதலர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் நல்ல பலன்களைக் காண்பார்கள். நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிட்டும். இசை மற்றும் கலையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். இந்த மாதம் நீங்கள் நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. சிறு சிறு உபாதைகள் தவிர உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதப் பிரச்சினையும் இருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இந்த மாதம் கடக ராசி இளம் காதலர்களுக்கு இனிமையான மாதமாக இருக்கும். காதலர்கள் மனம் விட்டுப் பேசிக் கொள்வீர்கள். உங்கள் உறவில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்கும். இதன்மூலம் உங்கள் காதல் துணையைக் கவர்வீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் கூடும். குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
திருமணத் தடை நீங்க லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்களுக்கு தொழில் அல்லது வியாபாரம் மூலம் பணம் வரும் என்றாலும் கணிசமான லாபம் காண இயலாது. கூட்டுத் தொழிலிலும் இதே நிலை இருக்கும். தொலை தொடர்பு மற்றும் அறிவியல் துறையில் இருப்பவர்களின் தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் உங்கள் கையிருப்பு கரையும் வாய்ப்பு உள்ளது.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். உங்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் இந்த மாதம் பணியில் சில முன்னேற்றங்களைக் காண்பார்கள். நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில்:
நீங்கள் சுய தொழில் செய்பவர் என்றால் தொழிலில் போட்டியாளர்களை சந்திப்பீர்கள். புதிய முதலீடுகள் எதையும் இந்த மாதம் நீங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக பண வரவைக் காண்பார்கள். நிதி சம்மந்தப்பட்ட தொழிலில் இந்த மாதம் அதிக அளவு தன லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். கலைத் துறையை சார்ந்தவர்கள் இந்த மாதம் தங்கள் துறையில் பரிமளிப்பார்கள். தங்களின் திறமைகள் மூலம் சாதனைகளைப் புரியும் வாய்ப்புகள் உள்ளது. விளம்பர துறையை சார்ந்த தொழில் வல்லுனர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பார்கள். வெளிநாட்டு வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மற்றும் தியானம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவார்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.. ஆராய்ச்சித் துறை மாணவர்கள் இந்த மாதம் தங்கள் துறையில் நன்கு பரிமளிப்பார்கள். வெளி நாடு சென்று பயில நினைக்கும் மாணவர்கள். தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
சுப நாட்கள்:
4, 5, 7, 8, 9, 13, 14, 15, 16, 18, 20, 21.
அசுப நாட்கள்:
1, 2, 3, 6, 10, 11, 17, 27, 28, 29, 30, 31.
