AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Mithunam

dateFebruary 7, 2022

மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் விருந்து விசேஷம் என வீடு களை கட்டும்.  காதலர்களுக்கு இடையே இணக்கம் அதிகரிக்கும். உங்கள் இளைய உடன் பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.  நிலம் சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் வரலாம்.  மாணவர்கள் சிறப்பாகக் கல்வி  பயில்வார்கள் என்றாலும் மனதை ஒருமுகப் படுத்த வேண்டியது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். 

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

இளம் வயது மிதுன ராசி அன்பர்கள் காதலில் வெற்றி காண்பார்கள். காதல் உறவு நல்லுறவாகவும் சுமுக உறவாகவும் இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை அமையும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்க்கை  நடத்துவார்கள். புரிந்துணர்வு காரணமாக நல்லுறவு காணப்படும். உங்கள் இளைய உடன் பிறப்புகளுடனான  புரிதல்  நன்றாக இருக்கும்.     

திருமணமான தம்பதிகளுகிடையே ஒற்றுமை நிலவ சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். பங்கு வர்த்தகம், ஊக  வணிகம்  மற்றும் பிட் காயின் மற்றும் போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம்  நல்ல லாபங்களை  எதிர்பார்க்கலாம். மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் அரசாங்கத் துறையில் பணி புரிபவர் என்றால் உங்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.  தனியார் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். விளம்பரத்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணி புரிபவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும்.

தொழில்:

சுயதொழிலில் லாபம் மிகுந்து காணப்படும். தொழிலில் ஏற்றம் இருக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. ஏற்றுமதி தொழிலில் நல்ல வருமானம் கிட்டும். தொழில் விரிவடையும்.  பட்டு ஜவுளி தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். பழைய  வாகனம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் மந்த நிலை காணப்படும். 

தொழில் வல்லுனர்கள்:

சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப்  பெறுவீர்கள். நீங்கள் தனியார் துறையைச் சார்ந்தவர் என்றால் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உங்கள்  திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நீங்கள் அரசு சார்ந்த துறையில் பணி புரிபவர் என்றால் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கு உயர்பதவி மற்றும் வருமானம் உயர்வதற்கான  வாய்ப்புகள் ஏற்படும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க ராகு பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  ஆரோக்கிய உணவு உட்கொண்டு இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வீட்டில் இருக்கும் வயது மூத்தவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை. மற்றும் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

மாணவர்கள்:

மிதுன ராசி மாணவர்கள் சிறப்பாகக்  கல்வி  பயில்வார்கள் என்றாலும் மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். என்றாலும் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் வெற்றி காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருநிலை படுத்தி கவனமுடன் படித்தால்  படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் எளிதில் வெற்றி பெறலாம். அறிவியல் சம்மந்தப்பட்ட படிப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெறுவார்கள்.

கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை

சுப நாட்கள்: 

4, 5, 8, 9, 13, 14, 15, 16, 18, 20, 21, 22, 23.

அசுப நாட்கள்:

1, 2, 3, 6, 7, 10, 11, 12, 17, 19, 


banner

Leave a Reply