சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Simmam

சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் பேச்சில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி இலக்கை எட்டுவீர்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும். புதிய தொழில் ஆரம்பித்தல் அல்லது முதலீடு செய்தல் போன்றவற்றை தவிர்த்தல் நன்மை பயக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமை அதிகம் காணப்படும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
சிம்ம ராசி இளம் வயதினருக்கு மனதில் காதல் அரும்பு மலரும். காதலர்கள் தங்கள் உறவில் காணப்பட்ட பிரச்சினைகள் தீரக் காண்பார்கள். கணவன் மனைவி உறவு சுமுக உறவாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்லுறவு கூடும். புரிந்துணர்வு காரணமாக கருத்து ஒற்றுமை இருக்கும். தாய் மற்றும் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் வருமானம் கூடும். கையில் பணம் சரளமாகப் புழங்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். இந்த மாதம் நன்கொடை போன்ற தரும காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் அனுகூலமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும். நீங்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் அனுகூலமான பலன்களை பெற்றுத் தரும்.
தொழில்:
சுய தொழில் அல்லது வியாபாரம் செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் சுமாரான லாபங்களைக் காண இயலும். தொழிலில் போட்டியாளர்கள் இருப்பார்கள் என்றாலும் நீங்கள் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் தொழிலில் புதிய யுத்திகளைக் கையாள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். பணிக்கு புதிய ஆட்களை நியமிப்பீர்கள். தொழிலில் போட்டியாளர்களை நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். குறிப்பாக .தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் சிம்ம ராசி அன்பர்கள் சிறந்த முறையில் தொழிலை மேற்கொண்டு முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாட்டில் தொழில் வாய்பை எதிர் நோக்கிக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் தேடி வரும். கட்டிடத் துறை மற்றும் ஆர்கிடெக்சர் துறையை சேர்ந்தவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகத்தில் உயர்வு கிடைக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். உங்கள் ஆரோக்கியத்தில் . பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வயிறு மற்றும் குடல் சம்பந்தமான உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
சிம்ம ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். ஆராய்ச்சி கல்வியில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்கள் கிட்டும்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
4, 5, 7, 15, 16, 18, 23, 24, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
1, 2, 3, 6, 17, 25, 26.
