Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

கும்ப ராசி பலன் 2021 - Aquarius Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,284
Zoom In Zoom Out Print

கும்ப ராசி 2021 பொதுப் பலன்கள்:

அன்பார்ந்த கும்ப ராசி அன்பர்களே! வரும் புத்தாண்டு 2021 உங்களுக்கு எப்படிப்பட்ட பலனை அளிக்கும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் உள்ளது அன்றோ? வாருங்கள் இந்த வருடம் உங்களுக்காக என்னென்ன விஷயங்களைக் கொண்டுள்ளது எனக் காண்போம். வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் எனக் கலந்து தானே இருக்கும். இது இயற்கை நியதி என்றாலும் எந்த அளவில் இருக்கும் என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அமையும். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் உங்களுக்கு நல்ல பலன்கள் பலவும் கிட்டும் என்பது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். அதே சமயத்தில் சில சமயங்களில் நீங்கள் சவால்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் இந்த சாதகமான நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் என்றால் போட்டியாளர்கள் இருக்கத் தானே செய்வார்கள். நீங்கள் தான் கவனமாகச் செயலாற்ற வேண்டும். கடல் கடந்து சென்று உங்கள் தொழிலை  விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தைப் பொறுத்த வரை சில சமயங்களில் சண்டை சச்சரவுகள் வந்து போகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து  இருக்க வேண்டிய சூழ்நிலையும் உங்களுக்கு உருவாகும்.  பெற்றோர்களின் ஆரோக்கியத்தை நீங்கள் பேணிக் காக்க வேண்டிய தருணமாக இந்தத் தருணம் உங்களுக்கு இருக்கும்.  குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் நீங்கள் உங்கள் உறவை சிறப்பாக பராமரிக்க முடியும். நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் இந்த வருட ஆரம்பமே உங்களுக்கு களைகட்டும். உங்கள் துணையின் மூலம் நீங்கள் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் சிறப்பாக கல்வி பயின்று உங்களு பெருமையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர அளிப்பார்கள்.  நீங்களும் எவ்வளவு காலம் தான் காதல்  செய்து கொண்டிருப்பீர்கள். கவலை வேண்டாம். உங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. கும்ப ராசி மாணவர்களே நீங்கள் கல்வியியல் சிறந்து விளங்க இந்தக் காலக் கட்டம் உங்களுக்கு உதவும் என்றாலும் நீங்கள்  கவனமாக படிக்க வேண்டிய காலம் இது. உங்கள் ராசிக்கு பன்னிரண்டில் இருக்கும் சனியின் மூன்றாம் பார்வை உங்கள் இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. இராண்டாம் வீடு என்பது பணம் மற்றும் பணம் வரும் வழியைக் குறிக்கும் இடம் ஆகும். இங்கு சனியின் பார்வை அவ்வளவு சிறப்பானதல்ல. பண விஷயங்களில் உங்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும்.பணப் புழக்கம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்  பணப் பற்றாக்குறையைக் கூட நீங்கள் சந்திக்க நேரும்.  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை கருத்தில் கொண்டு இந்த  வருடம் நீங்கள்  உங்கள் ஆரோக்கியத்தைக்  காத்துக் கொள்ள வேண்டும். வயிற்று வலி, மூட்டு இணைப்பு வலி, ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவலை காரணமாக  மன அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாக நேரலாம்.  பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை மேற்கொண்டு அதனை   தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. கும்ப ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு கும்ப ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில் : 

வேலை செய்யும் கும்ப ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் வேலையில் சில ஏற்ற இறக்கங்களைச்  சந்திப்பார்கள். இந்த வருடத்தின் ஆரம்ப கால மாதங்கள் மற்றும் வருட இறுதி மாதங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின்  முழு ஆதரவு கிடைக்கப் பெறுவதன் மூலம் நீங்கள் உற்சாகமாக பணியாற்றுவீர்கள். உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும். உங்கள் படைப்பாற்றல் திறனும் மேலதிகாரிகளின் கவனத்திற்கு போகும். அவர்களின் பாராட்டைப் பெற்றுத் தரும். நாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் நம்மைச் சுற்றி இருக்கும் சிலர் தங்கள் உணர்வுகளின் தாக்கத்தை நம் மீது பிரயோகிப்பது சகஜம் தான். எனவே இந்தக் காலக் கட்டத்தில் பணியிடத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். அவர்களுடன்  வாக்குவாதம் ஏற்படக் கூடும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், தொழில்  சம்பந்தமான பயணங்களை, குறிப்பாக வருடத்தின் இரண்டாம் பகுதியில் மேற்கொள்வீர்கள். முதலீடு குறித்த விஷயங்களில்  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண – குரு ஹோமம்  

காதல் மற்றும் குடும்ப உறவுகள் :

குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும் வகையில் இந்த வருடம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை என்று தான் கூற வேண்டும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனவி உறவிலும் நெருக்கம் குறையும். கருத்து வேறுபாடு வந்த போதிலும் நீங்கள் அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருப்பிடம் மாறி வசித்தால் ஓரளவு நற்பலன்களைக் காணலாம்.  உங்கள் வாழ்க்கைத் துணையின் பணி சம்பந்தமான முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இதன் மூலம் உறவு மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்யம் ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது நல்லது. உறவுகளில் இணக்க நிலை இல்லாத காரணத்தால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.  குடும்பத்த நிர்வகிக்க, பராமரிக்க, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய என்று செலவுகளை சந்திப்பீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்கள் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். உங்கள் உதவியை நாடுவார்கள்.  .  உங்கள் பெற்றோரின் உடல் நலம் குறித்த கவலை ஏற்படும். அவர்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

திருமண நல்லிணக்க உறவு மேம்பட – சிவ-சக்தி ஹோமம் 

நிதி நிலையைப் பொறுத்த வரை  இந்த வருடத்தில் ஜனவரி. பிப்ரவரி, ஏப்ரல், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் உங்களுக்கு நலம் பயக்கும் மாதங்களாக அமையும். இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள்  சொத்துகளை வாங்குவீர்கள்.  உங்கள் சேமிப்பை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்ள இந்தக் காலக் கட்டம் ஏதுவாக இருக்கும். மற்றபடி இந்த வருடம் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக நீங்கள் சில தடைகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகமாகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். இதனால் மன ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். அதே சமயத்தில் குரு பகவானின் ஆசியுடன் நீங்கள் தரும காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தரும காரியங்களுக்காக செய்யும் செலவுகள் உங்களுக்கு புண்ணியத்தைத்  தேடித் தரும் சுபச் செலவுகளே அன்றி வீண் செலவுகள் இல்லை. 

நிதிநிலை மேம்பட மற்றும் பொருளாதார வளம் பெருக : குபேர ஹோமம் 

மாணவர்களின் கல்வி:

வருடத்தின் ஆரம்ப காலங்கள் கும்ப ராசி மாணவர்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும்.  உழைப்பவர் உயர்வு காண்பார் என்பதற்கிணங்க நீங்கள் எவ்வளவுகெவ்வளவு உழைத்து படிப்பில் கவனம் செலுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு வெற்றியும் காண்பீர்கள்.  ஏப்ரல் மாதம் நீங்கள் வெற்றியில் திளைத்து மகிழ்வீர்கள். போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இது சாதகமான பலன் தரும் வருடமாக இருக்காது. தொழில் நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். ஆனால் தகவல் தொழில் நுட்பம், ஊடகங்கள், அச்சுத்தொழில் வணிகவியல்  மற்றும் கட்டடக்கலை மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்க இயலும். 
கல்வியில் வெற்றி காண – ஹயக்ரீவ ஹோமம்

ஆரோக்கியம்:

இந்த வருடம்  முழுவதும் உங்கள் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகளை நீங்கள் சந்தித்துக்  கொண்டே இருப்பீர்கள்.  குறிப்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள். மூட்டுப்  பிரச்சினைகள், அசிடிட்டி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேர தூக்கம், சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்  கொள்ள இயலும். இல்லாவிடில் உடல் நலக் குறைவு காரணமாக நீங்கள் எந்த காரியத்தையும் சரிவர செய்ய இயலாது போகும். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 
ஆரோக்கியம் மேம்பட – தன்வந்தரி ஹோமம் 

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்:

•    ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்று வைரக் கல்லை அணியவும்
•    நான்கு முக அல்லது ஏழு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளவும் 
•    சனிக்கிழமைகளில் விலங்குகள் பறவைகளுக்கு உணவு வைக்கவும். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்
•    கோசாலையில் உள்ள பசுக்களை பராமரிக்கவும். ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

அனுகூலமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
 

banner

Leave a Reply

Submit Comment