Magara Rasipalan 2021 Tamil

மகர ராசி 2021 பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும். சில கஷ்டங்கள் இருந்தால் தான் சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். உங்கள் ராசி அதிபதி உங்கள் ராசியில் அமர்ந்து இருப்பது உங்களுக்கு யோகத்தைப் பெற்றுத் தரும். சனி உங்களுக்கு அதிபதி என்பதால், சனிக்கு பிடித்தமான கடின உழைப்பை நீங்கள் மேற்கொண்டால் எதிலும் வெற்றி தான். உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து நீங்கள் பணியாற்றினால், நீங்கள் உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் இருக்கும் தடைகளை வென்று படிப்படியாக முன்னேறுவீர்கள். தொழில் செய்வோர், வியாபாரம் செய்வோர், சுய வேலை வாய்ப்பில் இருப்பவர் என அனைவரும் இந்த வருடம் அமோகமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றமும் சேர்ந்தே உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நிதிநிலையில் ஏற்படும் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் சில சலசலப்புகள் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும். இந்த வருடத்தின் ஓரிரு மாதங்கள் தவிர மீதி மாதங்கள் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். அந்த ஓரிரு மாதங்களில் தோன்றும் கருத்து வேறுபாடுகள் கணவன் மனைவி உறவுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டு வரும். மனப் பதட்டத்தைத் தவிர்க்க யோகா அல்லது தியானம் மேற்கொள்ள வேண்டும். திருமணமானவர்களுக்கு இந்த வருடம் சிறந்த வருடமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் இருக்கும். குழந்தைகளுடனான உறவு இந்த வருடம் சிறப்பாக இருக்கும்.மாணவர்கள் தங்களின் அதீத தன்னம்பிக்கையை மட்டும் நம்பி இராமல் சிறிது கடின உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வருடம் உங்கள் உடல் நிலை சாதாரணமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகள் இருந்தாலும் விரைவில் குணமாகும். இந்த வருடம் மனப் பதட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். மகர ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு மகர ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.
உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண - ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்
வேலை மற்றும் தொழில்:
பணியைப் பொறுத்தவரை இந்த வருடம் உங்களுக்கு அமோகமான வெற்றியை அளிக்கும் வருடம் என்று கூறலாம். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம், மதிப்பு, மரியாதை பெறுவீர்கள். தர்மகர்மாதி யோகம் உங்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஏப்ரல் முதல் செப்டம்பர் இடைப்பட்ட காலம் உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். பணி சம்பந்தமான பயணம் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் செல்லும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் நீங்கள் சட்ட அதிகாரிகள் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள், வெளிநாட்டு வியாபாரிகள் இந்த வருடம் சாதகமான பலன்களைக் காண்பார்கள். உங்கள் தொழிலில் நீங்கள் இந்த வருடம் அமோகமாக முன்னேறுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வெற்றி பெற – குரு ஹோமம்
காதல் மற்றும் குடும்பம்:
குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும். என்றாலும் இந்த வருடத்தின் சில மாதங்கள் உங்கள் திருமண வாழ்வில் இன்பம் நிறைந்து இருக்கும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிக்கும் மகர ராசி அன்பர்கள் தங்கள் உறவில் சுமூக நிலை காண இயலாது. ஏப்ரல் மாதம் குரு பகவான் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் நீங்கள் நல்ல பலன்களைக் காண்பீர்கள். வாழ்வில் வளமும் அமைதியும் நிறைந்து காணப்படும்.குழந்தைப் பிறப்பு, திருமணம் போன்ற சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் திருமணம் நடக்கும்.
திருமண வாரவில் நல்லிணக்கம் காண – சிவ - சக்தி ஹோமம்
பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:
உங்கள் நிதிநிலை ஸ்திரமாக இருக்கும். என்றாலும் சில முக்கிய செலவுகள் இருக்கும். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுபடுத்த வேண்டும். ஜனவரி, மே, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் சுப நிகழ்வுகளுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இதனால் பணப் பற்றாக்குறையை சந்திப்பீர்கள். உங்கள் நிதிநிலை மேம்படும். இந்த வருடம் ராகு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் உங்கள் செல்வ நிலை மேம்படும். ஏப்ரல்-செப்டம்பர் மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதம் குரு இரண்டாம் வீட்டில் இருப்பதால் உங்கள் செல்வ நிலை உயரும். இதன் மூலம் உங்கள் பொருளாதாரச் சிக்கல் தீரும்.
நிதிநிலை மேம்பட – குபேர ஹோமம்
மாணவர்கள் மற்றும் கல்வி:
கல்வி கற்கும் மகர ராசி மாணவர்களுக்கு இந்த வருடம் முன்னேற்றங்கள் பலவும் காண்பதற்கு சிறந்த வருடமாக இருக்கும். கல்வியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். நீங்கள் வெற்றிகரமாக கல்வியை கற்று முடிப்பீர்கள். ராகு மாயையான எண்ணங்களை வளர்க்கும் கிரகம். எனவே நீங்கள் மாயையில் சிக்காமல் கவனமுடன் படிக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். ஜனவரி-பிப்ரவரி, மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்கள் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த வருடம் உங்கள் மனம் விரும்பும் வகையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும் முன்பு எந்தப் பாடம் படிக்க வேண்டும் என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
கல்வியில் வெற்றி பெற – ஹயக்ரீவ ஹோமம்
ஆரோக்கியம்:
பொதுவாக மனம் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் மனது மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் ஏதாவது உடல் நலக் கோளாறுகளை சந்தித்து இருந்தால் அவைகள் படிப்படியாக குணமடையும். வருடத்தின் ஆரம்பத்தில் சில உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். மற்ற காலக் கட்டங்களில் உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். வருமுன் காப்பது நல்லது என்பதை உணர்ந்து நீங்கள் முறையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம்
வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்:
• ஜோதிடரை கலந்து ஆலோசித்து நீல சபையர் கல்லை அணிந்து கொள்ளுங்கள்
• சனிக்கிழமை நீல நிற ஆடை, வெள்ளிக்கிழமை வெள்ளை நிற ஆடை அணியுங்கள் ஏழைகளுக்கு அன்னதானம் அளியுங்கள்.
• செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லுங்கள், சனிக்கிழமை ஹனுமான் சாலீசா பாராயணம் செய்யுங்கள்.
• வியாழக்கிழமை ஆன்மீக குருமார்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
• வீடு மற்றும் பொது இடங்களில் யாரையும் ஏமாற்றாதீர்கள்
அனுகூலமான மாதங்கள்: ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், , நவம்பர் டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், அக்டோபர்
(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும் பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
