Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மீன ராசி பலன் 2021 - Pisces Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,100
Zoom In Zoom Out Print

மீன ராசி 2021 பொதுப் பலன்கள்:

மீன ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் சில விஷயங்களில் பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த வருடம் ஆரம்ப மாதங்கள் மற்றும் இறுதி மாதங்களில் கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் அதிகரிக்கும். காதலர்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாத வண்ணம் நடந்து கொண்டால் உங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறக் காண்பீர்கள். நீங்கள் அதிக வருமானத்தை ஈட்டுவீர்கள். இதனால் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் செய்வீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.  வரவு அதிகரிப்பது போலவே உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சிறிது உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால்  உங்கள் மனதில்  செலவுகள் குறித்த பதட்டம் அதிகரிக்கும். நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் கடின உழைப்போடு உங்கள் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துங்கள. இந்த வருடம் பணி மற்றும் தொழில் குறித்த விஷயத்தில் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் சிறந்த வெற்றியைக் காண்பீர்கள். நீங்கள் வேலையில் இருப்பவர் என்றால் வேலை மாற்றம் குறித்த உங்கள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை விருத்தி செய்வார்கள். மாணவர்களுக்கு இந்த வருடம் ஓரளவு சாதகமான நிலை இருக்கும். கல்வி முன்னேற்றத்தில் ஏற்ற  இறக்கமான நிலை இருக்கும். நீங்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டால் வெற்றி காண்பீர்கள்.  வெளிநாடு சென்று மேற்படிப்பு  மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களின் கனவுகள் யாவும்  நனவாகும். பொதுவாக இந்த வருடம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உடல் பருமன், முட்டிவலி மற்றும் இதயம் சார்ந்த உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்  கொள்ளலாம்.   உங்கள் பெற்றோரின் உடல் நலத்திலும் நீங்கள்  அக்கறை செலுத்த வேண்டும். மீன ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு மீன ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்:

பணியைப் பொறுத்த வரை இந்த வருடம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் எல்லாரிடமும் நல்லுறவு மேற்கொள்ளும் சாத்தியம் உள்ளது. உங்களுக்கு பெயரும் புகழும் கூடும். பணியில் மேன்மை காண்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நற்பலன்கள் உங்களை நாடி வரும். பணி நிமித்தமாக இந்த ஆண்டு மத்தியில்  உங்களுக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பும் வந்து சேரும். பணியிட மாற்றம் வேண்டி காத்திருக்கும் உங்களுக்கு இந்த வருட இறுதியில் உங்கள் ஆசை நிறைவேறக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மீன ராசி அன்பர்கள் இந்த வருடம் சிறப்பாக செயலாற்றி மேன்மையும் வெற்றியும் காணும் வாய்ப்பு உள்ளது. பணி மற்றும் தொழிலைப் பொறுத்த வரை நீங்கள் அமோக வெற்றி காணும் வருடமாக இந்த வருடம் இருக்கும். 

வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண : சனி ஹோமம் 

காதல் மற்றும் குடும்பம்:

மீன ராசிக் காதலர்கள் தங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறக் காண்பார்கள்.  திருமணமான தம்பதிகள் வாழ்வில் மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கும். குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு இந்த வருடம் குழந்தைப் பேறு கிடைக்கும். உங்கள் உடன் பிறந்தவர்களுடனும் உறவு சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை   பெருகும். என்றாலும் நீங்கள் செப்டம்பர் அக்டோபர்  மாதங்களில் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து அசையாச் சொத்து ஒன்றை வாங்குவீர்கள்.  சில முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் வீட்டை வாடகைக்கு விடுவீர்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சிவ சக்திஹோமம்

பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:

இந்த வருடம் உங்களின் நிதிநிலையில் ஏற்றங்கள் இருந்தாலும் ஒரு சில ஏமாற்றங்களும் கூடவே இருக்கும். சொத்து சேர்ப்பதற்கு இந்த வருடம் உங்களுக்கு சாதகமான வருடமாக இருப்பதால் நீங்கள் சொத்துக்களைச் சேர்ப்பீர்கள்.  உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார். நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். இந்த வருடம் உங்களுக்கு மருத்துவச் செலவு, வழக்குச் செலவு போன்ற சில செலவுகளும் ஏற்படும்.

உங்கள் நிதிநிலை மேன்மை பெற : குபேர ஹோமம்

மாணவர்கள் மற்றும் கல்வி:

வருடத்தின் முதல் பகுதியை விட வருடத்தின் கடைசி பகுதி சிறப்பானதாக இருக்கும். இந்த வருடத்தின் மத்தியில் நீங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவீர்கள்.  நீங்கள் மேற் படிப்பிற்காக  வெளிநாடு செல்வீர்கள் என்றாலும் தடைகள், நேர்முகத் தேர்வு வெற்றியில் சில போராட்டங்கள் கல்லூரி சேர்க்கையில் சில பிரச்சினைகள் போன்றவற்றை நீங்கள் எதிர் கொள்ள நேரும். தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றி உங்கள் பாதையில் நீங்கள் முன்னேற வேண்டும். அதற்கு கடின உழைப்பும் சிறந்த கவனமும் தேவை என்பதை புரிந்து நடந்து கொண்டால் இந்த வருடம் நீங்கள் சிறந்த முறையில் கல்வியில் வெற்றி காண்பீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே உரித்தாகும்.  

கல்வியில் வெற்றி பெற : ஹயக்ரீவ ஹோமம் 

ஆரோக்கியம்:

மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு மனப் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் மூட்டு வலி, இதய பிரச்சினைகள் போன்றவைகளை சந்திக்க நேரும்.  எனவே கவனமாக இருக்க வேண்டும் உங்கள் உணவு முறையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். சிறிய உபாதைகள் என்றாலும் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம்

வீட்டில் செய்யபக் கூடிய பரிகாரங்கள்:

•    ஜோதிடரின் ஆலோசனை  பெற்று  கனக புஷ்பராகக் கல்லை   தங்கத்தில் பதித்து உங்கள் ஆள்காட்டி விரலில்  அணிந்து கொள்ளுங்கள்.
•    வாழ்வில் அனைத்திலும் வெற்றி காண தினமும்  ஆஞ்சநேயரை வழிபடுங்கள் மற்றும் . அனுமான் சாலீசா ஜெபியுங்கள்
•    இரண்டு முக அல்லது மூன்று முக ருத்ராட்சம் கழுத்தில் அணியுங்கள். 
•    குருமார்களுக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள், நெய் போன்றவற்றை தானம் செய்யுங்கள் 
•    சனிக்கிழமை, இரும்புக் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உங்கள் பிம்பத்தை பார்த்துப் பின் அதனை ஏழைக்கு தானமாக அளியுங்கள். இது சனிபகவானின் அசுப தாக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், அக்டோபர், நவம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
 

banner

Leave a Reply

Submit Comment