AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

சிம்ம ராசி பலன் 2021 - Leo Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,351
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி 2021 பொதுப்பலன்கள்:

சிம்ம  ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.  ராகு பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில் மற்றும் நிதிநிலையைப் பொறுத்தவரை சிறந்த வருடமாக இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். ஆனால் குருவும், சனியும் இணைந்து உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் வரை நீங்கள் பணியிடத்தில் சில எதிரிகள் மூலம் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்கள் வெற்றிப் பாதையில் அவர்கள் சில தடைகளை உண்டாக்குவார்கள். வருடத்தின் ஆரம்பத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கும். நீங்கள் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். சுய வேலைவாய்ப்பில் இருப்பவர்கள் நஷ்டம் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறுக்கு வழியில் செல்லாமல் நேர் வழியில்  செயல்பட வேண்டும். இந்த வருடம் மகர ராசியில் குரு சஞ்சரிக்கும் காலம் வரை உங்கள் இரண்டாம் வீட்டைப் பார்வை இடுவதால் உங்கள் பொருளாதாரம் முன்னேற்றம் காணும். சிலர் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில்  சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பம் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்வீர்கள்.  வயிறு மற்றும் கிட்னி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிம்ம ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு சிம்ம ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்:

இந்த வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மெச்சும் வகையில் நீங்கள் செயலாற்றுவீர்கள். பணியிடத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள்.  என்றாலும் உங்கள் சக பணியாளர்களில் சிலர் உங்கள் புகழ் மற்றும் பெருமை கண்டு உங்கள்  மீது பொறாமை கொண்டு உங்கள் வளர்ச்சிக்குத்  தடைகளை ஏற்படுத்துவார்கள்.  எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நீங்கள் உங்கள் தந்தையின் தொழிலில் உதவி புரிவீர்கள். வருடத்தின் மத்தியில் நீங்கள் பணி நிமித்தமாக  உள்நாடு அல்லது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.   ஆனால் நீங்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் புதிய தொழில் தொடர்புகள்  ஏற்படும். அவர்களுடன் நல்லிணக்க உறவு மேற்கொள்வீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வெற்றி பெற : லக்ஷ்மி நரசிம்ம ஹோமம்

காதல் மற்றும் குடும்பம்:

இந்த வருடம் குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முறை சாதாரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதாக  உங்களுக்குத் தோன்றும். விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் நீங்கள் நிலைமையை சமாளிக்கலாம். ஜனவரி முதல்  ஏப்ரல் வரையிலான காலக் கட்டத்தில்  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை வராமல் காத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கருத்தினையும் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சரியான முறையில் நடந்து கொண்டால் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்க பலமாக செயல்படுவார்.உங்கள் வீடு விற்பது அல்லது வேறு வீடு வாங்குவது  அல்லது இருக்கும் வீட்டை மாற்றி அமைப்பது போன்ற பேச்சு வார்த்தைகள் குடும்பத்தில் இடம் பெறும்.  உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.  உங்கள் உங்கள் குழந்தையுடன் இந்த வருடம் நல்லுறவு காணப்படும். உங்கள் குழந்தைகள் இந்த வருடம் வெற்றி பெறுவார்கள். அவர்களுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.  திருமணத்திற்குத் தயாராக இருப்பவர்களுக்கு ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது,

திருமண உறவில் நல்லிணக்கம் பெருக : சிவ சக்தி ஹோமம்

பொருளாதாரம் / நிதிநிலை:

உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதங்கள். இந்த மாதங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏப்ரல் முதல் உங்கள் செல்வம் பெருகும். சொத்துக்கள் சேரும். உங்கள் வாழ்க்கைத்  துணையின் மூலம் நீங்கள் செல்வம் பெறுவீர்கள். அல்லது அவர்களுடன் இணைந்து தொழில் செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள்.  உங்கள் வருமானத்தை விட  செலவுகள் அதிகமாக இருந்தாலும்  அதிக அளவில் வருத்தம் அடைய வேண்டியதில்லை. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தமான செலவுகள் இருக்கும்.  ஒருவேளை நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் தொழில் விரிவாக்கம் செய்ய  மூலப்பொருட்கள் வாங்க அதிக செலவுகளைச் செய்வீர்கள். உங்கள் செலவுகளை குறைத்து  சேமிப்பை அதிகரிப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். 

நிதிநிலை சிறக்க : குபேர ஹோமம்

மாணவர்கள் மற்றும் கல்வி:

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் நீங்கள் சாதகமான பலன்களைப் பெற இயலும்.  நீங்கள் கடினமாக உழைத்தால் இந்த மாதங்களில் வெற்றியைக் காணலாம்.  மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கு இது ஏற்ற காலம் அல்ல. விசா கிடைக்க அல்லது கல்லூரி சார்பில் தாமதங்களை சந்திக்க நேரும்.  படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வேலை உங்களுக்கு பிடித்தமானதாக இல்லாத போதிலும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்பது நிச்சயம்.

கல்வியில் வெற்றி பெற : ஹயக்ரீவ ஹோமம்

ஆரோக்கியம்:

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். எனவே உங்கள் உடல் நலத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வருமுன் காப்பது நல்லது என்பதற்கிணங்க நடந்து கொள்ள வேண்டும். சனி மற்றும் குரு இணைந்து உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு வயிறு மற்றும் கிட்னி சம்பந்தமான பிரச்சினை ஏற்படும். கண்கள், கை மணிக்கட்டு போன்ற பிரச்சினைகளும் எழும். முறையாக உங்கள் ஆரோக்கியத்தை  கவனித்துக் கொண்டால் பிரச்சினைகள் ஏதும் வராமல் காத்துக் கொள்ளலாம். ஆன்மீக நாட்டம் மற்றும் மருத்துவம் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும். 

ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம்

 வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள் :

•    வார இறுதி நாட்களில் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவு அளியுங்கள் 
•    உங்கள் தந்தை, பாட்டன் போன்றவர்களுக்கு மரியாதை அளித்து அவர்களுக்கு உதவுங்கள் 
•    வியாழக்கிழமை விரதம் இருந்து கோவிலில் அன்னதானம் மேற்கொள்ளுங்கள். 
•    தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்

அனுகூலமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் 
அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)

banner

Leave a Reply

Submit Comment