AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Mithunam Rasi Palan 2021

November 10, 2021 | Total Views : 363
Zoom In Zoom Out Print

மிதுனம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் உங்களுக்கு பணிகள் அதிகம் காணப்படும். குடும்பத்திற்கென நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும்.  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தங்களின் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் உங்களால் அதிக கவனம் செலுத்த இயலாது. அதிக வேலைகளே அதற்கு காரணமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.  குடும்பத்தில் உள்ள வயது மூத்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் காரணமாக வாக்குவாதங்கள் எழும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்ப அமைதி காக்கப்படும். 

குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் பட்ஜெட் அமைத்து செலவுகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். அந்தச் செலவுகள் சுபச் செலவுகளாக அமைவது ஒருவிதத்தில் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்களுக்கான விரயங்கள் ஏற்படலாம்.      இந்த மாதம் புதிய ஆடைகள் மற்றும் நகைகள் வாங்கும் வகையில் செலவுகள் நேரலாம்.. 

நிதி நிலையில் உயர்வு பெற ராகு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருக்கும் மிதுன ராசி அன்பர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு   இந்த மாதம் அவர்களின் கனவுகள் நனவாகும். நீண்ட நெடும் நாட்களாக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த  வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

தொழில்:

வெளிநாட்டு ட்ராவல்ஸ் தொடர்பான தொழில் நடத்துபவர்களுக்கு தொழில் மூலம்  நல்ல லாபமும் ஆதாயமும் கிட்டும்.  கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படவேண்டும். கடின முயற்சி மற்றும் எச்சரிக்கை தேவை. அழகு சாதனம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் தனம் ஈட்டுவீர்கள்.

தொழில் வல்லுனர்கள்:

அரசுத் துறை சார்ந்து தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களின் பெருத்த ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் மற்றும் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த மாதம் வெற்றி வாய்ப்பு உங்களை நாடி வரும். உங்களுக்கு நல்ல பெயரும்  புகழும்  கிடைக்கும்.   

உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சனி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் உங்களை வருத்தும். அஜீரண கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்கனைகள் வரலாம். உண்ணும் உணவில் கவனம் தேவை.    தினமும் உடற்பயிற்சி செய்வதன்  மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் தடைகளுக்கு நடுவில் சாதனைகளைப் புரிவார்கள். இந்த மாத முதற் பகுதியை விட கடைசி பகுதியில் படிப்பில் ஏற்றம் காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பேராசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி  வாகை சூடுவார்கள். 

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

2, 13, 19, 27, 29, 31.

அசுப நாட்கள்:

3, 4, 7, 8, 9, 22, 23.

banner

Leave a Reply

Submit Comment