AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Rishabam Rasi Palan 2021

dateNovember 10, 2021

ரிஷபம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த  மாதம் உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் அனுசரனையும் கிட்டும். உங்கள் வருமானம் உயரும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் வழங்கப்படும்  பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். அதன் மூலம் வருவாயும் அந்தஸ்தும் உயரும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

ரிஷப ராசி இளம் வயது காதலர்கள் தங்கள் காதல் உறவில் கவனமுடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உங்கள் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில்  கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் இருவருக்குள்ளும் நல்லிணக்கம் காணப்படும்.

காதலில் நல்லிணக்கம் உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை ஏற்றம் பெரும். வருமானம் பெருகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்களுக்கான செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரும். 

நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை

வேலை:

நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்களின் செயல்பாடுகள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக இருக்கும். தனியார் துறை உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகக் காண்பார்கள்.  பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்க்ளுகு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டும் அங்கீகாரமும் மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். 

தொழில்:

வியாபாரம் மற்றும் சுயதொழில் செய்யும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் நல்ல தன வருவாய் கிடைக்கும். தங்க நகை தொழில் செய்பவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

தொழில் வல்லுனர்கள்:

ரிஷப ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் கிட்டும்.   மருத்துவத் துறை, பொறியியல் துறை, ஊடகத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பணிபுரியும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள்.  நீங்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். அவர்களை திருப்திப்படுத்தி உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள. 

உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு கணேசா பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்க வாய்ப்பில்லை. ஒற்றைத்தலை வலி, சளித் தொல்லை, மூக்கடைப்பு மற்றும் ஜுரம் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சந்திர பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். உயர்கல்வி மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு சிறந்த முறையில்  தேர்ச்சி பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படிப்பதன் மூலம் தங்கள் இலக்குகளை அடையலாம். 

கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

2, 8, 9, 13, 19, 27, 29, 31.

அசுப நாட்கள்:

3, 4, 5, 22, 23.


banner

Leave a Reply