கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Kadagam Rasi Palan 2021
கடகம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:
குடும்பத்தில் உள்ளவர்களிடம் மதிப்பும் மரியாதையும் கூடும், நல்லுறவு நீடிக்கும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் நண்பர்களின் உறவில் அமைதியை தக்க வைத்துக் கொள்ள இயலும். இந்த மாதம் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
காதல் உறவில் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். கவனம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். அன்னியோன்யம் பெருகும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். நண்பர்களிடம் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும்.
திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். பழைய கடன்கள் எல்லாம் அடைபடும். சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள அதிகம் ஆடம்பர செலவுகள் செய்யும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் முக்கியமான முடிவுகள் எதையும் இந்த மாதம் எடுக்காதீர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே மனதில் சிறிது பதட்ட நிலை காணப்படும். மனப்பதட்டத்தை சமாளித்து நீங்கள் தைரியமாகச் செயல்படுவீர்கள். தனியார் துறையில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உத்தியோகம் செய்யும் இடத்தில் சில போட்டிகள் காணப்படும். நீங்கள் உங்கள் போட்டியாளர்களை சமாளித்து உத்தியோகத்தில் வெற்றி பெறுவீர்கள்.
தொழில்:
சுய தொழில் செய்பவர்கள் புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலமாக புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் வாய்ப்புகள் ஏற்படும். புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் தங்கள் உத்தியோகத்தில் பெயரும் புகழும் பெறுவார்கள். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திப்பார்கள். சட்டம் மற்றும் தொழில் நுட்பத் துறையில் பயிலும் மாணவ மாணவியர்கள் தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெறுவார்கள். ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை
சுப நாட்கள்:
2, 8, 13, 19, 27, 29, 31.
அசுப நாட்கள்:
3, 4, 9, 10, 11, 22, 23.











