Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2021 | December Matha Mesham Rasi Palan 2021

November 10, 2021 | Total Views : 333
Zoom In Zoom Out Print

மேஷம் டிசம்பர் 2021 பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே நீடித்த நல்லிணக்கம் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகம் சிறப்பாக  இருக்கும். புதிய தொழிலை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும்.  அசையாச் சொத்துக்களின் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் நீண்ட கால லாபம் பெறலாம்.  உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் வரலாம். எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை. தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி மாணவர்கள் வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். 

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லுறவு இருக்கும். குறிப்பாக இளைய உடன் பிறப்புகளுடனான  உறவில் நல்ல புரிந்துணர்வு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே வேற்றுமைகள் நீங்கி இருவரும் கருத்தொருமித்து வாழ்வார்கள்.  நல்ல புரிந்துணர்வு காரணமாக இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். திருமணம் குறித்த முயற்சிகள் யாவும் கை கூடும். திருமணத்தில் இருந்து வந்த தடை மற்றும் தாமதங்கள் நீங்கி இல்லற வாழ்வில் நீங்கள் அடி எடுத்து வைக்க இயலும்.  

திருமணமான தம்பதிகளுகிடையே ஒற்றுமை நிலவ சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.  செய்தொழில் மூலம் மற்றும்  புதிய தொழில் முதலீடுகள் மூலம் நல்ல தன லாபத்தை ஈட்ட முடியும். கமிஷன் சார்ந்த வியாபாரிகள் இந்த மாதம் பெரும் லாபம் காண்பார்கள். ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். ட்ராவல்ஸ் நடத்துபவர்கள் தொழில் சிறப்பாக நடந்து அதன் மூலம் லாபம் பெருகும். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

நீங்கள் தனியார் துறையில் பணியில் இருப்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். சக பணியாளர்களுடன் சுமுக உறவு இருக்கும். பணியில் அவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் பணியில் சிறிது மந்த நிலை இருப்பதாக உணர்வீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து அளிப்பதில் தாமதங்களை சந்திப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் ஏமாற்றம் காண்பீர்கள். 

தொழில்:

மேஷ ராசி அன்பர்களின் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். சுயதொழில் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மென்பொருள் தொழிலில் உள்ளவர்கள் நல்ல ஏற்றத்தை காண்பார்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றமும் அதன் மூலம் நல்ல நல்ல வருமானத்தையும் காண்பார்கள். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்கள் குறிப்பிட்ட வளர்ச்சியைக் காண்பார்கள்.  தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நல்ல ஆதாயமும் காண்பீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க ராகு பூஜை

ஆரோக்கியம்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.  வயிறு சம்மந்தப்பட்ட உடல் நல பாதிப்பு ஏற்படலாம். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மூத்த வயதினர்கள் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். 

நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை

மாணவர்கள்:

மேஷ ராசி மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவதில் சில சிரமங்களை சந்திக்க நேரும். என்றாலும் நீங்கள் மன உறுதியுடன் செயல்பட்டு கல்வியில் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகப் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கணிதத்துறை சார்ந்து ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது  ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்கள்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்: 

2, 8, 9, 13, 19, 27, 29, 31.

அசுப நாட்கள்:

3, 4, 5, 22, 23. 

banner

Leave a Reply

Submit Comment