மேஷ ராசி பலன் 2022:
மேஷ ராசி அன்பர்களே! ராசிக்கு ஜீவன ஸ்தானத்திற்கும் லாபஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் ஜீவன ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வது தொழில் ரீதியில் மேன்மையை ஏற்படுத்தும். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவானும் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதனால் உங்கள் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தொழிலில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். இளைய சகோதரர்களுடனான உறவு பலப்படும். அவர்களால் ஆதாயம் உண்டு. குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பும் இணக்கமான சூழ்நிலையும் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் அமையும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் விரிவான விபரங்களுக்கு மேஷ ராசி பலன் 2022 படிக்கவும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
ரிஷப ராசி பலன் 2022:
ரிஷப ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் லாப ஸ்தானாதிபதியான குரு தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் தந்தை வழியில் ஆதாயத்தையும் பிதுரார்ஜித சொத்துக்களை அனுபவிக்கும் பாக்கியத்தையும் வெளிநாட்டு பிரயாணங்களால் அனுகூலத்தையும் வாரி வழங்கும் படியாக இந்த குரு பெயர்ச்சி இருக்கப்போகிறது. உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் பொருளாதாரத்தில் ஏற்றத்தையும் இந்த குருப்பெயர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. மேலும் விரிவான விபரங்களுக்கு ரிஷப ராசி பலன் 2022 படிக்கவும்.
மிதுன ராசி பலன் 2022:
மிதுன ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் ஆயுள் ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானாதிபதியான குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு தாமதம் ஆனவர்களுக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தை வழங்கும் படியாக இந்த குரு பெயர்ச்சி இருக்கப்போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் தொழிலில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தி தருவதாக இந்த குருப்பெயர்ச்சி அமையப்போகிறது. மேலும் விரிவான விபரங்களுக்கு மிதுன ராசி பலன் 2022 படிக்கவும்.
கடக ராசி பலன் 2022:
கடக ராசிக்கு களத்திர ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் களத்திர ஸ்தானமான மகர ராசியிலேயே ஆட்சி பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் உழைப்பு மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியான குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் உத்தியோக ரீதியான மாறுதல்களையும் எதிர்பாராத உயர்பதவியையும் வழங்கும் படியாக இந்த 2022 ஆம் வருடம் இருக்கப்போகிறது. திருமண முயற்சிகளில் வெற்றியையும் ஏற்படுத்தி தருவதாக இந்த 2022 ஆம் வருடம் இருக்கப்போகிறது. மேலும் விரிவான விபரங்களுக்கு கடக ராசி பலன் 2022 படிக்கவும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
சிம்ம ராசி பலன் 2022:
சிம்ம ராசி அன்பர்களே! குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இளைய உடன் பிறப்புகளுடன் சிறந்த உறவை பராமரிக்க இயலும். இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் தங்கள் காதல் உறவில் கவனமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே உங்கள் வாக்கில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் பெறும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் விடா முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியும். தாய் தந்தை மற்றும் வீட்டில் இருக்கும். வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை. மேலும் விரிவான விபரங்களுக்கு சிம்ம ராசி பலன் 2022 படிக்கவும்.
கன்னி ராசி பலன் 2022:
கன்னி ராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவையும், அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள இயலும். குடும்பத்தில் உள்ள வயதான நபர்களிடம் மரியாதையுடன் பழகுங்கள். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களை மேற்கொள்ளாதீர்கள். உங்கள் பொருளாதார ஏற்றத்திற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறிப்பாக அரசு உத்தியோகத்தில் உள்ள கன்னி ராசி அன்பர்கள் திறமையுடன் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலமாக இந்த வருடம் உங்களுக்கு அமையும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். மாணவர்கள் ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வருமானத்தைப் பெருக்கும் புதிய வழிமுறைகளை நீங்கள் நாடுவீர்கள். மேலும் விரிவான விபரங்களுக்கு கன்னி ராசி பலன் 2022 படிக்கவும்.
துலாம் ராசி பலன் 2022:
துலாம் ராசி அன்பர்களே! இந்தப் புது வருடத்தில் இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மற்றும் அமைதியின்மை நீங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லிணக்க உறவும் அமைதியும் காணப்படும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த பிணக்குகள் நீங்கும். அவர்களுடன் உங்களின் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஆர்வம் கொள்வீர்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். உங்கள் மனதில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புனித ஸ்தலங்கள் அல்லது ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மேலும் விரிவான விபரங்களுக்கு துலா ராசி பலன் 2022 படிக்கவும்
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
விருச்சிக ராசி பலன் 2022:
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வருடம் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பண வரவு இருக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் புது வருடத்தில் உங்கள் தோற்றத்தில் வனப்பு கூடும். உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மேலும் விரிவான விபரங்களுக்கு விருச்சிக ராசி பலன் 2022 படிக்கவும்.
தனுசு ராசி பலன் 2022:
குடும்ப உறவுகள் வருட ஆரம்பத்தை விட வருடத்தின் பிற்பகுதியில் சிறப்பாக இருக்கும். நீங்கள் உத்தியோகம் செய்பவர் என்றால், உங்கள் திறமை மூலம் நல்ல பெயரையும் புகழையும் பெறுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் உத்தியோகம் குறித்த ஆலோசனைகளை நீங்கள் எளிதாக கிடைக்கப் பெறுவீர்கள். அதிலும் குறிப்பாக வயதில் மூத்த நபர் ஒருவர் உங்களுக்கு உத்தியோகம் குறித்த ஆலோசனைகளை வழங்குவார். உங்கள் பொருளாதார நிலையில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். உங்கள் துணையின் வளர்ச்சிப் பாதையில் சிறு சிறு தடைகள் வந்து போகும். பயணங்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மேலும் விரிவான விபரங்களுக்கு தனுசு ராசி பலன் 2022 படிக்கவும்.
மகர ராசி பலன் 2022:
மகர ராசி அன்பர்களே! இந்தப் புது வருடத்தில் உங்கள் நிதிநிலையில் நீங்கள் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் பணபுழக்கம் அபரிமிதமாக இருக்கும். உபரி வருமானத்தை நீங்கள் சேமிப்பதன் மூலம் எதிர்கால பாதுகாப்பைப் பெற இயலும். எனவே இந்த வருடம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அரசுத் துறையில் பணி புரிபவர்களும் தங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி காண்பார்கள். உங்கள் உடல் நலத்தில் அக்கறை அவசியம் சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நன்மை பயக்கும். மேலும் விரிவான விபரங்களுக்கு மகர ராசி பலன் 2022 படிக்கவும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
கும்ப ராசி பலன் 2022:
உங்கள் குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வீர்கள். உறவினர்களிடம் உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் மூத்த உடன்பிறப்புகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலையைப் பொறுத்த வரை இந்த மாதம் உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி பயில்வார்கள். மேலும் விரிவான விபரங்களுக்கு கும்ப ராசி பலன் 2022 படிக்கவும்.
மீன ராசி பலன் 2022:
மீன ராசி அன்பர்களே! கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். திருமண வயதில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்களுக்கான துணையைக் கண்டு கொள்வார்கள். உங்களுக்கு கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் கடினமாக உழைத்து, உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள், பதட்டம் ஏதும் இன்றி காணப்படுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள். மேலும் விரிவான விபரங்களுக்கு மீன ராசி பலன் 2022 படிக்கவும்.
Leave a Reply