Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி | 2020 New Year Rasi Palangal Dhanusu

December 18, 2019 | Total Views : 742
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள்

தனுசு ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகள் நன்மை பயப்பதாக அமையும். மூன்றாவது காலாண்டில் பொருளாதார நிலை நல்ல முன்னேற்றம் அடையும். வருமானம், சேமிப்பு, செல்வம் பெருகும். வசதிகள் மேம்படும்; மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தாய் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத ஆதாயங்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்தும் வந்து சேரலாம். வேலை முன்னேற்றம் காணும் அதே நேரம், சொத்து வாங்கி, விற்கும் தொழிலும் வளர்ச்சி அடையும். உங்களில் சிலர் வீடு அல்லது வாகனம் வாங்குவார்கள். உங்கள் முன்னேற்றத்துக்குக் குறுக்கே வரும் தடைகள் அனைத்தும் விலகும். நீங்கள் நீதி, நியாயத்தை அனுசரித்தும் நடப்பீர்கள். இவை அனைத்தும், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களைக் கொண்ட மூன்றாவது காலாண்டீல் நடைபெறும் வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது.

ஆண்டின் கடைசி காலாண்டிலும், வேலை, தொழில் சிறப்பாகவே நடக்கும். சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு, இது, மிகச் சிறந்த காலமாக அமையும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை

வருடத்தின் பிற்பகுதியில் உங்கள் பணி நிலவரம், முற்பகுதியை விட நன்றாக இருக்கும். குறிப்பாக, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், இது மிகச் சிறப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளது. கடைசி 6 மாதங்களில், நீங்கள், உங்கள் முழுத் திறனுடன் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்குவீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள 2 மாதங்களில், இன்னும் அதிக முயற்சி செய்து, மேலான திறனை வெளிப்படுத்தி, பலரிடமும் பாராட்டு பெறுவீர்கள். மூன்றாவது காலாண்டு வீடு, நிலம் வாங்கி விற்கும் தொழிலை ஊக்குவிக்கும்; அதே நேரம், நான்காவது காலாண்டில், சேவைத் தொழில், சொந்தத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உங்களுக்குச் சவாலாக அமையும் எந்த ஒரு விஷயத்திலும், நீங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு, இந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் பிரகாசமாக உள்ளது.

வேலை, தொழில் மேம்பட Ganesha Fire Lab (Homa)

காதல், மணவாழ்க்கை, உறவுகள்

துணைகளுக்கிடையே நிலவும் உறவு, சுமாராகவே இருக்கும். எனவே, தங்களுக்கிடையே உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து, ஒருவர் மீது ஒருவர், ஆழ்ந்த அன்பு செலுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. குறிப்பாக, வாழ்க்கைத் துணைவர்களான கணவனும், மனைவியும் பரிவையும், பாசத்தையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதனால், மணவாழ்க்கையில் இன்பம் பெருகும். திருமணத்திற்குத் தகுந்த துணை தேடுவதற்குக் கடும் முயற்சிகள் செய்தால் மட்டுமே, இந்த நேரத்தில் வெற்றி கிடைக்கும்.

உறவுகள் சிறக்க Uma Maheshwara Fire Lab (Homa)

நிதி

ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என்ற 3 மாதங்களைத் தவிர, இந்த வருடத்தின் மற்ற நேரங்கள், உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றவை அல்ல என்றே கூறலாம். மற்ற 9 மாதங்கள் எப்படி இருந்தாலும் சரி, இந்த 3 மாதங்கள், பணத்தைப் பொறுத்தவரை, மிக வெற்றிகரமாகவே அமையும். இந்நேரம், உங்கள் செல்வமும், சேமிப்பும் உயரும். ‘வருங்காலத்திற்குச் சேமிப்பது, தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது’ என்பதைத் தாரக மந்திரமாகவே கொண்டால், நிதிநிலையில் தன்நிறைவு பெறலாம்.

நிதிநிலை ஏற்றம் பெற Dhanakarshana Yantra

கல்வி

ஆண்டின் துவக்கம், தனுசு ராசி மாணவர்களுக்கு பல பிரச்சினைகளைத் தரலாம். அப்பொழுது அவர்கள் படிப்பு சுமாராகவே இருக்கக் கூடும். ஆனால், மூன்றாவது காலாண்டில் அவர்கள் கல்வி மேம்படும்; இது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் நல்ல நிவாரணமாக அமையும். ஆனால், அயல்நாட்டுக் கல்வி பெற விரும்புபவர்களுக்கு இந்த வருடம், சாதகமாக இல்லாமல் போகலாம். எனவே, அதற்காக அவர்கள், கடின முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இது போல கல்வி உதவித்தொகை போன்றவை கிடைப்பதிலும், சில தடைகள் நேரலாம்.

கல்வியில் வெற்றி பெற Mercury Fire Lab (Homa)

ஆரோக்கியம்

வருடத் தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும் உங்கள் உடல்நிலை, ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நன்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. நோய்களால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட, இந்த 5 மாதங்களில் குணமடைய வாய்ப்புள்ளது. ஆனால், முதல் காலாண்டில், சில கடுமையான உடற் கோளாறுகள் கூட உங்களைத் தாக்கக்கூடும்; ஆதலால், அந்த நேரத்தில், மிக ஜாக்கிரதையாக இருப்பதும், அதிக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அனுசரிப்பதும் அவசியம்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Health Booster Package

பரிகாரங்கள்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அன்னை பார்வதி மற்றும் முருகப்பெருமானை வணங்கி, உங்கள் ஆரோக்கியம் மேம்பட பிரார்த்தனை செய்யவும் ஆலயங்கள், அந்தணர்கள், ஆன்மீகப் பெரியோருக்கு தானம் செய்யவும் ‘ஓம் சரவண பாவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும் ‘சர்வ மங்கள மாங்கல்யே, சிவே சர்வார்த்த சதிகே, ஷரண்யே த்ரயம்பகே கௌரி, நாராயணி நமோஸ்துதே’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்

பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும் கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:

9 Planets Fire Lab (Homa)

சாதகமான மாதங்கள்: ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

banner

Leave a Reply

Submit Comment