Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி | 2020 New Year Rasi Palangal Thulam

December 18, 2019 | Total Views : 967
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள்

2020 ஆம் வருடத்தின் மூன்றாவது காலாண்டு, துலாம் ராசி அன்பர்களுக்கு பல நன்மைகளைத் தருவதாக அமையும். நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும்; கடன்கள் தொலையும்; எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும். உங்கள் சமூக வட்டம் வளரும். நண்பர்கள், சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். தைரியம் பெருகும்; பிறருடன் அதிக தொடர்புகள் ஏற்படும். தந்தை, தாய், இளைய சகோதர சகோதரிகள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை வீட்டார் போன்ற அனைவரிடமும் மிக இணக்கமான உறவு நிலவும். கமிஷன், காண்ட்ராக்ட் தொழில்கள் ஆதாயம் தரும். பொதுவாகவே வேலை, தொழில் சிறக்கும்; நல்ல வருமானம் தரும். இப்பொழுது நீங்கள், நல்ல செயல் திறனுடனும், அதே நேரம் நேர்மை தவறாமலும் பணியாற்றுவீர்கள். மூன்றாவது கலாண்டான ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள், இது போன்ற நல்ல பலன்களை உங்களுக்கு அளிக்கும் வாய்ப்புள்ளது.

ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நீங்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். தினசரி அலுவலக வேலைகள் நன்கு நிறைவேறும். உங்களைத் தேடி வரும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை, உங்கள் வெற்றியைப் பறைசாற்றும். இந்த மாதங்களில், வீடு, மனை வாங்கி விற்கும் தொழிலும் லாபகரமாக நடக்கும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திருமணத்திற்கு வரன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை

ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் உங்கள் வேலைச் சூழல் மிகச் சிறந்து விளங்கும். சக பணியாளர்கள், உயர் அதிகாரிகள் என அனைவரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும். இது அலுவலகத்தில் உங்களுக்கு சந்தோஷமும், நிம்மதியும் தரும். இந்த நேரத்தில் நீங்கள் முழுத் திறனுடன் செயலாற்றி, உற்பத்தியைப் பெரிதும் உயர்த்துவீர்கள். நீங்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. ஆண்டின் மற்ற நாட்களில் வேலை, தொழில் சுமாராகவே நடக்கக் கூடும்.

வேலை, தொழில் மேம்பட Aditya Hrudayam Chanting followed by Sun Homa

காதல், மணவாழ்க்கை, உறவுகள்

துணையிடம் உங்களுக்கு எழும் காதல் இந்த நேரத்தில் சுமாராகவே இருக்கும். எனவே அன்பையும், பரிவையும், துணையிடம் நீங்கள் தாராளமாகக் காட்ட வேண்டிய காலம் இது. திருமணமான தம்பதிகள், தங்களுக்கிடையே, பாசத்தையும், நேசத்தையும், புதுப்பித்து, வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜூலை, ஆகஸ்டு என்ற இரண்டு மாதங்கள், உங்கள் திருமணத்திற்கு சரியான வரன் அமையக்கூடிய நேரம் ஆகும். எனவே, இந்த காலத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

உறவுகள் சிறக்க Durga Fire Lab (Homa)

நிதி

முதல் காலாண்டில், உங்கள் நிதிநிலை நன்றாக இருப்பது கடினம். இந்த நேரத்தில், வருமானம் குறையும்; இதனால், கையிலிருக்கும் பணமும், வங்கியில் இருக்கும் சேமிப்பும் குறைந்து விடக்கூடும்; இத்துடன் தேவையற்ற செலவும் சேர்ந்து கொள்ளும். இது உங்கள் பொருளாதார நிலையை சிக்கலாக்கக் கூடும். எனினும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நிலை சீரடையும்; பணம் புழக்கம் அதிகரித்து, செலவுகளும் கணிசமாகக் குறையும். மற்ற நாட்களில், சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும்.

நிதிநிலை ஏற்றம் பெற Kanakadhara Chanting followed by Sri Suktam Homa

கல்வி

ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள், கல்விக்கு மிகவும் ஏற்ற காலங்கள் ஆகும். பட்டப்படிப்பு படிக்கும் மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள், அவர்கள் முயற்சிகளில் வெற்றியடையும் வாய்ப்பும் உள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களும், அவற்றில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைவார்கள். அயல்நாட்டுக் கல்வி பெற முயற்சிக்கும் மாணவர்களுக்கு, சுமாரான வாய்ப்பே உள்ளது என்று சொல்லலாம். இதேபோல, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதிலும் சிக்கல்கள் எழலாம்.

கல்வியில் வெற்றி பெற Mercury Fire Lab (Homa)

ஆரோக்கியம்

வருடத்தின் ஆரம்ப காலங்களில், துலாம் ராசி அன்பர்கள், நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனினும், நாட்கள் செல்லச் செல்ல உடல்நிலை முன்னேறும்; ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நல்ல ஆரோக்கியம் நிலவும். எல்லா நேரத்திலும், பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்வது, உடற்கோளாறுகளிலிருந்து உங்களைப் பெரிதும் பாதுகாக்கும்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Ayush Fire Lab

பரிகாரங்கள்

ஏழைப் பெண்கள், குழந்தைகளுக்கு இனிப்பு தானம் செய்யவும் புலால் உண்பதைத் தவிர்த்து விடவும்; சாத்வீக உணவையே உட்கொள்ளவும் நிதிநிலை முன்னேற, மகாலக்ஷ்மி தேவியை வணங்கவும் ‘ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ சூர்யாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும் ‘ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ சந்த்ராய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்

பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும் கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:

Wealth Attraction Package

சாதகமான மாதங்கள்: ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள்: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர், நவம்பர், டிசம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

banner

Leave a Reply

Submit Comment