AstroVed Menu
AstroVed
search
search

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி | 2020 New Year Rasi Palangal Viruchigam

dateDecember 18, 2019

பொதுப்பலன்கள்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் ஆண்டின் துவக்க காலம், பணியில் பெரும் ஆதாயங்களை அளிக்க வல்லது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களைக் கொண்ட முதல் காலாண்டில், வேலையில் அவர்களது முழுத் திறனும் வெளிப்படும். அலுவலகத்தில் சலுகைகள், ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் போன்றவையும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் விரும்பும் இட மாற்றமும் ஏற்படக்கூடும். போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள், தைரியத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் அவற்றை எதிர்கொண்டு, வெற்றி பெறுவர்கள். உங்கள் நேர்மையும், கட்டுப்பாடும், உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். உங்களில் சிலருக்கு எதிர்பாராத லாபங்களும் ஏற்படலாம். அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருக்கக் கூடும். சிலர் பரம்பரை சொத்தையும் அடைவார்கள்..

இந்த காலகட்டத்தில் நீங்கள் தைரியத்துடன் செயலாற்றுவீர்கள்; அதே நேரம், உங்கள் பேச்சுத் திறனும் சிறந்து விளங்கும். இதன் மூலம், ஏதிரிகளையும், போட்டியாளர்களையும் நீங்கள் வெல்லலாம். சுப செலவுகளும் ஏற்படும். வருடத்தின் முதல் மற்றும் இறுதி காலாண்டுகளில், உங்கள் குழந்தைகளின் படிப்பும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஊக வர்த்தகத்தில் ஈடுபடக்கூடும்; லாபகரமான முதலீடுகளையும் செய்யக் கூடும். இந்த இரு காலாண்டுகளிலும், தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவி செய்தல் போன்ற உன்னதச் செயல்களிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். குறிப்பாக, ஏப்ரல் மாதம், உங்கள் துணிவு வெளிப்படும் நேரமாக அமையும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை

உங்கள் வேலை, தொழில் சூழல், நேர்மறை ஆற்றல்களால் நிறைந்திருக்கும். இது உங்களை, சவாலான பணிகளையும் துணிவுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் எதிர்கொள்ள வைக்கும். தவறுகள் எதுவும் இல்லாத, உங்களது நிறைவான செயலாற்றல், தடைகள் அனைத்தையும் விலக்கிவிடும். இதனால் சம்பள உயர்வு, பதவி உயர்வு, நீங்கள் விரும்பும் இடமாற்றம் போன்றவை கிடைக்கக்கூடும். இந்த நற்பலன்களெல்லாம், முதல் காலாண்டிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நிகழக் கூடும். மற்ற நாட்கள் சுமாராகவே இருக்கும்; இவற்றில், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் மிக மந்தமாக இருக்கக் கூடும். எனவே வேலை தொடர்பான எந்த முக்கிய முடிவையும், இந்த 2 மாதங்களில் எடுக்க வேண்டாம்.

வேலை, தொழில் மேம்பட Mercury Fire Lab (Homa)

காதல், மணவாழ்க்கை, உறவுகள்

வருடத்தின் முதல் மற்றும் கடைசி காலாண்டுகளில், காதல் மற்றும் வாழ்க்கைத் துணைகளுக்கிடையே அன்பு பெருகும்; எனவே, அப்பொழுது அவர்கள் உறவு, இணக்கமாகவும், மிக சுமுகமாகவும் இருக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவதற்கு இது சாதகமான காலம் அல்ல என்றாலும், மே மாத பிற்பகுதியிலும், ஜூன் மாதத்திலும், இது தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும் வாய்ப்புள்ளது.

உறவுகள் சிறக்க Parvati Fire Lab (Homa)

நிதி

பணம் தொடர்பான விஷயங்களுக்கு, மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்மை தரும். அப்பொழுது, வருமானம், சேமிப்பு இரண்டும் பெருகும். மற்ற காலங்களில் நிலைமை சுமாராகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதே, பணத் தட்டுப்பாடுகளை சமாளிக்க சிறந்த வழியாகும். முதல் மற்றும் இறுதி காலாண்டுகள், முதலீடுகளுக்கு சற்றே ஏற்றவை எனலாம். இவை தவிர, மற்ற நேரங்களில் முதலீடு செய்வதைத் தவிர்கவும்.

நிதிநிலை ஏற்றம் பெற Jupiter Fire Lab (Homa)

கல்வி

ஆண்டின் முதல் மற்றும் இறுதி 3 மாதங்களில், பள்ளி மாணவர்கள் நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் கடுமையாக உழைத்துப் படித்து, கல்வியில் முன்னேறுவார்கள். சிலர், போட்டித் தேர்வுகளிலும், விளையாட்டிலும் கூட சிறந்து விளங்குவார்கள். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பில் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, அவர்கள் விடா முயற்சி செய்வது அவசியம். எனினும் இந்த காலகட்டத்தில், ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது; வெளிநாட்டுக் கல்வி முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பும் உள்ளது.

கல்வியில் வெற்றி பெற Saraswathi Fire Lab (Homa)

ஆரோக்கியம்

ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என்ற, மூன்றாவது காலாண்டின் 3 மாதங்களைத் தவிர, வருடத்தின் மற்ற நாட்களில், நீங்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பீர்கள். இந்த 3 மாதங்களில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால், நோய்களிலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு, ஆண்டின் பெரும்பகுதி நன்றாகவே அமையும்; இந்த காலங்களில் மருத்துவச் செலவுகள் குறைவதுடன், உங்களை பாதிக்கும் வியாதிகளும் குணமடையக் கூடும்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Gayatri Homa

பரிகாரங்கள்

விஷ்ணு பகவானுக்கும், லக்ஷ்மி தேவிக்கும் மஞ்சள் பூ மாலைகளை சமர்ப்பிக்கவும் சிவபெருமானையும், துர்கா தேவியையும் வழிபட்டு, உங்கள் துன்பங்களைக் களைய வேண்டவும் பெண்கள், குழந்தைகள், ஏழைகள் போன்றோரிடம் அன்பு காட்டவும் ‘ஓம் ஸ்ரீ மகாலஷ்மை ச வித்மஹே, விஷ்ணு பத்ந்யை ச தீமஹி, தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும் ‘ஓம் ஷ்ரிங் ஷ்ரியே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்

பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும் கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:

Navagraha Homa and Nakshatra Shanti Homa

சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், அக்டோபர், நவம்பர், டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள்: ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)


banner

Leave a Reply