Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

Dhanusu Rasipalan 2021 Tamil

September 16, 2020 | Total Views : 970
Zoom In Zoom Out Print

தனுசு ராசி 2021 பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் நீங்கள் பெரும்பாலும் அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன்களைக் காணலாம். உங்கள் ஆன்மீக ஈடுபாடு மேம்படும். ஆன்மீக முன்னேற்றங்களைப் பெறுவீர்கள்.   வேலை செய்பவர்கள் பணியில் முன்னேற்றம் காண்பார்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் பாராட்டு கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும்.  ஒரு சிலருக்கு வெளி நாடு செல்லும் பாக்கியம் கூடக் கிடைக்கும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யும் செலவுகள் கூட உபயோகமான செலவுகளாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள், வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள்.  மாணவர்களும் சிறந்த முறையில் படிப்பார்கள்.போட்டித்  தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். நீண்ட  காலமாக வெளிநாடு சென்று  படிக்க வேண்டும் என விருப்பம் உள்ள மாணவர்களின் கனவுகள் யாவும் நனவாகும் காலக் கட்டமாக இந்த வருடம் அமையும்.  உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. தனுசு ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு தனுசு ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்:

ஜனவரி, டிசம்பர், மே, ஜூன், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் இந்த வருடம் உங்களுக்கு மிக முக்கியமான மாதங்கள் ஆகும். பணியில் இருக்கும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் வகையில் இந்த வருடம் பணி சம்பந்தமான உங்கள் கனவுகள் யாவும் நனவாகும். வேலை மாற்றம், பதவி உயர்வு, வெளிநாட்டில் வேலை தொழில் மற்றும் வியாபார மேன்மை என அனைத்து அம்சங்களிலும் நீங்கள் சாதகமான பலன்கள் மற்றும் அபிவிருத்தி காண்பீர்கள். சுய வேலை வாய்ப்பு மற்றும் வீட்டில் இருந்து தொழில் செய்பவர்களுக்கு இது பொன்னான  காலமாக அமையும்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண – சனி ஹோமம்

காதல் மற்றும் குடும்பம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு குறைவே இல்லாத சூழல் இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள்  மற்றும்  அனைத்து  குடும்ப உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். உங்களுக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். நீங்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வீர்கள். இதனால் புரிந்துணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளால் குதூகலம் பொங்கும். திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் வீட்டில்  நடக்கும். சந்தோசம் மட்டுமே இருந்தால் சலிக்கத் தானே செய்யும். அதை சரி கட்டும் வகையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அவ்வப் போது உரசல்களும்  வந்து போகும். அதனால் கருத்து வேறுபாடுகளும் தலை தூக்கும். இரண்டு கை தட்டினால்  தானே ஓசை. நீங்கள் பொறுமையுடன் இருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை கோபம் கொண்டாலும் நீங்கள் அமைதியாக இருங்கள். வெளியிடங்களுக்குச் சென்று  வருவதன்மூலம் உங்கள் உறவு வலுப்படும். உங்கள் குழந்தைகளால் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருட முடிவில் திருமணம் நடைபெறும்.
     
திருமண உறவில் நல்லிணக்கம் காண – சிவ சக்தி ஹோமம்

பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:

தனுசு ராசி அன்பர்கள் இந்த வருடம் முழுவதும் பண மழையில் நனைவீர்கள். குறிப்பாக ஜனவரி மற்றும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை உங்களுக்கு மிகவும் சாதகமான காலம் ஆகும்.  உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும்  வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் போது அதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  சனி பகவான் அருளால் இந்த வருடம் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். சொத்துக்களை சேர்க்கவும் இந்த வருடம் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நிதிநிலை உயர உதவுவார்கள். கேது உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் ராசியில் சஞ்சரிப்பதால் மருத்துவம் அல்லது வெளிநாடு செல்வதற்கான செலவுகளை நீங்கள் மேற் கொள்ள நேரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குபேர ஹோமம்

மாணவர்கள் மற்றும் கல்வி:

சிறிய அளவு உழைப்பில் பெரும் பயன் என்றால் மனம் மகிழத் தானே செய்யும். இந்த வருடம் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வருடமாகத் தான் இருக்கும்.  உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகுவின் சஞ்சாரம் காரணமாக நீங்கள் சிறிதளவு கடின உழைப்பில் எளிதாக  போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள்.  நீங்கள் எழுதும் அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி காண்பீர்கள்.  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதங்கள். மேல் படிப்பிற்காக இந்த மாதங்களில் நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிட்டும். பிப்ரவரி மார்ச் மாதங்களில்உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். 

கல்வியில் வெற்றி பெற : ஹயக்ரீவ ஹோமம்

ஆரோக்கியம்:

இந்த வருடம் பொதுவாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் உடலைப் பேணிக் காக்க வேண்டிய கட்டாயமும் உங்களுக்கு உள்ளது.  தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடல் உபாதைகள்  அதிகமாகாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் கேது உங்களுக்கு மன உளைச்சல், காய்ச்சல், வெட்டுக் காயங்கள், கொப்பளங்கள், பாத வெடிப்புகள், தூக்கமின்மை போன்ற உபாதைகளை வழங்குவார். சிலருக்கு, இருமல், சளி, அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட வாயப்புள்ளது. எனவே எச்சரிக்கை அவசியம். சூடான நீரில் எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்து அருந்துங்கள். நீரில் யூகலிப்டஸ் துளிகளைக் கலந்து அந்த ஆவியயை உள்ளிழுங்கள். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் மனப் பதட்டம் நீங்கும், தூக்கம் வரும்   

ஆரோக்கியம் மேம்பட : தனவந்தரி ஹோமம் 

வீட்டில் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள்:

•    ஜோதிடரின் ஆலோசனை பெற்று கனக புஷ்பராக கல்லை தங்க மோதிரத்தில்  பதித்து அணியுங்கள்.
•    வியாழக்கிழமை ஆல மரத்தை வழிபடுங்கள் 
•    கோவில் அர்ச்சகர்கள் அல்லது கோவிலில் பணிபுரிபவர்களுக்கு அன்னமிடுங்கள்
•    சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை ஆலயம் சென்று வழிபடுங்கள்
•    தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்யுங்கள்
•    சனிக்கிழமைகளில் எண்ணெய் மற்றும் உளுந்தை ஏழைகளுக்கு தானமாக அளியுங்கள்

அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
 

banner

Leave a Reply

Submit Comment