AstroVed Menu
AstroVed
search
search
x

துலா ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

dateFebruary 28, 2022

துலா ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களே! உங்கள் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த குரு பெயர்ச்சி 2022 ஆம் ஆண்டு, உங்களது 5 மற்றும் 6 ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்வது, உங்களுக்கு நல்லது, அல்லாதது என இருவகைப்பட்ட பலன்களையும் வழங்கக் கூடும். இந்த ஆண்டின் முதல் 3 மாதங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமாக அமையலாம்; உங்கள் முயற்சிகள் வெற்றியடையலாம்; சில ஆசைகளும் நிறைவேறலாம். ஏப்ரல் 12, 2022 வரை உங்கள் 5 ஆம் வீடான கும்பத்தில் குரு சஞ்சாரம் செய்வது என்பது, உங்கள் வாழ்க்கையில் புது காதல், புது சுகம், புதிய பொழுதுபோக்கு, ஏதோ ஒரு வெற்றி ஆகியவற்றை அளிக்கலாம். எனினும், இவை நீண்ட நாள் நீடிக்காமல் போகலாம். பின்னர், உங்கள் 6 ஆம் வீடான மீன ராசியில் குரு பெயர்ச்சியாவது, உங்களுக்கு மிகுந்த வேலை பளுவையும், மன அழுத்தத்தையும் தரலாம். மேலதிகாரிகளின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கக்கூடும். குடும்பத்தினர் எவராவது நோய்வாய்ப்படும் வாய்ப்பும் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சில பிணக்குகளும் ஏற்படக்கூடும். துலாம் ராசி அன்பர்கள் தங்கள் இலக்குகளை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வருடக் கடைசியில் கடன் வாங்கும் நிலையும் ஏற்படலாம். எனினும், வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கேயே குடியேற விரும்புபவர்கள் சிலரது விருப்பம் நிறைவேறி, அங்கு அவர்களுக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கலாம். 

துலா ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

வேலை, தொழில்

ஏப்ரல் 12, 2022 வரையிலான உங்கள் 5 ஆம் வீட்டில் குருவின் சஞ்சாரம் என்பது, ஆதாயம், பரிசு, மற்றும் உடன் பணியாற்றுபவர், உயர் அதிகாரிகள் ஆகியவர்களிடமிருந்து அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுத் தரலாம். ஆனால் அதற்குப் பிறகு, பணியிடத்தில் நிலைமை சிக்கலாகலாம். வேலை பளு அதிகம் இருக்கலாம்; அத்துடன் கூட வாடிக்கையாளர்கள், உயரதிகாரிகள், கூட்டாளிகள் ஆகியவர்களின் எதிர்பார்ப்பும், அதிகமாக இருக்கலாம். சூழ்நிலை பரபரப்பாகவும், இயத்திரத்தனமாகவும் மாறி விடலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், அந்தப் புதிய வேலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்வது சவாலாக இருக்கலாம். கலை, படைப்புத் துறையில் உள்ளவர்கள் கடுமையாக உழைத்த பின்னர், வெற்றிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். பொழுதுபோக்குத் துறை போன்றவற்றில் சிலருக்கு ஏமாற்றங்கள் காத்திருக்கலாம். ஆனால், வெப் டிஸைனிங் எனப்படும் வலைப்பதிவு, மென்பொருள் துறைகளில் உள்ளோர், தங்கள் பணியில் வளர்ச்சி காணலாம்.   

புதிதாக வேலை தேடுபவர்களுக்கும், மாற்று வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் வெற்றி கிடைத்தாலும், இந்த ஆண்டு உங்கள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். எனினும், கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, விடா முயற்சி போன்றவை உங்கள் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். ஆயினும், பணியில் வெற்றியும், வள்ர்ச்சியும் உங்களுக்கு எளிதில் கிட்டாமல் போகலாம். ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறை அல்லது பொறியியல் துறையில் உள்ளவர்கள், பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறக்கூடும். மேலும், மருத்துவம், மருந்தகம் துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்லது நடக்கக்கூடும். தவிர, வணிகம், சுயதொழில் போன்றவற்றால் திடீர் ஆதாயம், வெற்றி, நன்மதிப்பு ஆகியவையும் கிடைக்கலாம். 

காதல், உறவுகள்   

துலாம் ராசி அன்பர்கள் தங்கள் துணைவர்களால் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளது. இளைய வயதினரில் வாழ்க்கையில் அவர்கள் மனதிற்குப் பிடித்த ஒருவர், புதிதாக வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஆனால் இதனால் தோன்றும் காதலும், வேட்கையும் நீண்ட நாள் நீடிக்காமல் போகலாம். பொதுவாக, இந்த 2022 இல் காதல் வாழ்க்கை ஏமாற்றம் தருவதாக அமையக்கூடும். சிலரது காதல் தோற்று, அவர்கள் துணையிடமிருந்து பிரிந்து போய், அவர்கள் தனிமையிலும், துயரத்திலும் வாடலாம். உறவுகளில் நீங்கள் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கக் கூடும். 

திருமண வாழ்க்கை

மண வாழ்க்கை, உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் ஏற்படும் முரண்பாடுகளாலும், கருத்து வேறுபாடுகளாலும் பாதிக்கப்படலாம். அகந்தை, தவறான புரிதல், பரஸ்பர நம்பிக்கையின்மை ஆகியவை சண்டை சச்சரவுகளுக்கும், குழப்பங்களுக்கும் வழி வகுக்கலாம். சிலர், சில தவறான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் துணையை ஏமாற்றலாம். சில புதுமணத் தம்பதிகள், தங்கள் துணையுடன் அனுசரிப்பதற்கும், ஒத்துப் போவதற்கும் கடினமாக உணரக்கூடும். சிலரது மணவாழ்க்கை சாதாரணமாகச் சென்றாலும், அதில் குறிப்படத்தக்க அல்லது உங்கள் ஆவலைத் தூண்டும் வகையில் எதுவும் இல்லாமல் போகலாம். தவிர, பல துலாம் ராசி அன்பர்கள், வீட்டிற்காக அதிக நேரம் செலவிட இயலாமல் போகலாம்.  

நிதி

பல துலாம் ராசி அன்பர்களின் நிதிநிலை நன்றாக இருக்கும். பங்கு சந்தை போன்ற ஊக வணிகங்ககள் 2022 கடைசிப் பகுதியில் ஆதாயம் தரலாம். வேலை, தொழில் காரணமாக, ஆண்டின் மத்திய பகுதியிலிருந்து உங்கள் வருமானம் உயரக்கூடும். ஆகஸ்டு மாதத்திற்குப் பின், வாணிகம், சுயதொழில் போன்றவை குறிப்பிடத்தக்க லாபம் தரக்கூடும். அதே நேரம் செலவுகளும் குறைவாக இருக்கக்கூடும். ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் அல்லது வெளிநாட்டுப் பணி மூலம், இந்த ஆண்டு சிலர் செல்வம் ஈட்டக்கூடும்.  

கல்வி

துலாம் ராசி மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எழுதுவார்கள் எனலாம். சிலர் அவர்கள் பள்ளி அல்லது கல்லூரியில் புகழ் பெறலாம்; சிலருக்குக் கல்வி உதவித் தொகையும் கிடைக்கக்கூடும். சிலர் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சிறந்து விளங்கக்கூடும். பள்ளி அல்லது பயிற்சி நிலையங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவதனால், சிலருக்கு, நற்பெயர் கிடைக்கக்கூடும். ஆனால், போட்டித் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வில் வெற்றி அடைய, நீங்கள் மிகக் கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். ஆயினும், சிலர் நுழைவுத் தேர்வுகளில் பிரகாசிப்பார்கள். தவிர, கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் மூலம் சிலருக்கு நல்ல வேலை கிடைக்கலாம். எனினும், சில மாதப் போராட்டங்களுக்குப் பின்னரே, சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையக்கூடும். 

ஆரோக்கியம்

 உங்கள் உடல்நிலை இந்த ஆண்டு நன்றாகவே இருந்தாலும், குடும்பத்தினரின் ஆரோக்கியம் உங்களுக்குப் பதட்டத்தையும், கவலையையும் அளிக்கலாம். மருத்துவத்திற்கும் செலவுகள் ஏற்படலாம். சில துலாம் ராசி அன்பர்களுக்கு சளி, ஜுரம் போன்றவை ஏற்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்குப் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. சிறிய காயங்கள் ஏற்பட்டாலும், விரைவில் குணமடையக்கூடும்; அதே நேரம், உங்கள் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் வழக்கத்தை விட இப்பொழுது அதிகமாக இருக்கக்கூடும். எனினும், நீண்ட நாள் நோய்கள், அல்லது கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பாதிப்புகளிலிருந்து விடுபட, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, முறையான உணவு தேவை. சிலர் இதயம் அல்லது ரத்தக் கோளாறுகளிலிருந்து இந்த ஆண்டு, குணமடையக்கூடும்.    

பரிகாரங்கள்

  • வெள்ளிக்கிழமைகளில் அன்னை லக்ஷ்மி அல்லது அன்னை துர்க்கையை வழிபடவும்
  • வெள்ளிக்கிழமைகளில், சிவபெருமான் ஆலயத்தில் சர்க்கரைக் கட்டிகளை தானம் செய்யவும்
  • வெள்ளிக்கிழமைகளில் தயிர் உண்ணவும்
  • வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை ஆடைகள் அணிந்து, வாசனைப் பொருட்கள் பூசிக்கொள்ளவும்
  • வெள்ளிக்கிழமைகளில் மாமிச உணவையும், மதுவையும், தவிர்க்கவும்
  • ஜோதிடரைக் கலந்தாலோசித்து, ஓபல் கல் அணியவும்
Tags Tags:

    Leave a Reply