கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

கன்னி ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்
கன்னி ராசி அன்பர்களே! உங்கள் 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு, உங்களது 6 மற்றும் 7 ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்கிறார். ஏப்ரல் 12 வரை குரு உங்கள் 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது, வேலை, வேலைவாய்ப்பு தொடர்பாக சில நல்ல செய்திகளைக் கொண்டு வரலாம். சிலருக்கு குரு பெயர்ச்சி 2022 இல் முன் பகுதியில், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கலாம்; வேலை தேடிக்கொண்டிருக்கும் சிலருக்கு உயர் பதவியில், அதிக சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கலாம். ஏப்ரல் 12 க்குப் பிறகு, நிலைமை இன்னும் மேம்படலாம். பணியிடத்தில், உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கக் கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்குக் கை கொடுக்க, உங்கள் லட்சியங்களும், முயற்சிகளும் வெற்றியடையக் கூடும். வருடத்தின் மத்தியப் பகுதியில், தனிப்பட்ட மற்றும் அலுவலக வாழ்க்கை இரண்டிலும், சந்தோஷமான தருணங்கள் உருவாகலாம். உங்கள் வளமும், செல்வச் செழிப்பும், ஆண்டு இறுதியில் மேலும் அதிகரிக்கலாம். தவிர, வேலை, காதல் வாழ்க்கை தொடர்பான உங்களின் பல கனவுகளும், இந்த ஆண்டு நிறைவேறலாம்.
குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
வேலை, தொழில்
இந்த ஆண்டு வேலை, தொழிலில் நீங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும் வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத பலருக்கு வேலை கிடைக்கக்கூடும். வங்கி, குடியேற்றம் (இம்மிக்ரேஷன்) போன்ற துறைகளில் உள்ளோர், தங்கள் உயரிய பணி, கட்டுப்பாடு போன்றவற்றுக்காக பாராட்டும், அங்கீகாரமும் பெறக்கூடும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சிலர் அரசியலிலும் வெற்றியும், உயர் பதவியும் அடையலாம். பணியில் எதிரிகளை நீங்கள் வீழ்த்தலாம்; போட்டியாளர்களையும் வெல்லலாம். மருத்துவர்களும், பொறியாளர்களும் ஆண்டின் முற்பகுதியில், ஓரளவு வெற்றியை எதிர்பார்க்கலாம். சுய தொழில் செய்பவர்கள், இந்த ஆண்டு, நற்பெயரையும், வளத்தையும் அனுபவிக்கக்கூடும்.
ஆனால் சிலர், உங்கள் துரித வளர்ச்சி, வெற்றி ஆகியவை கண்டு பொறாமைப்படக் கூடும். ஆயினும், சில கன்னி ராசி அன்பர்கள் இந்த ஆண்டு, விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரியக்கூடும். தவிர, ஊடகம், எழுத்து, சந்தை வியாபாரம், விளம்பரத் துறைகள் வெற்றி பெறக்கூடும். கலைத்துறையில் உள்ள திறமைக்காக சிலர், அங்கீகாரம் பெறவும் வாய்ப்புள்ளது.
காதல், உறவுகள்
திருமண வயதில் உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்ற துணையைக் காணும் வாய்ப்புள்ளது. ஆனால், 2022 இறுதியில், சிலர், தங்கள் உறவுகளில் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும். எனினும், உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கக்கூடும்; காதலர் அல்லது காதலியுடன் நீங்கள் பல நெருக்கமான, மறக்க முடியாத அனுபவங்களையும் பெறக்கூடும். சிலருக்கு, மனதுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் திருமணமும் நடைபெறக்கூடும்; காதல் திருமணங்கள் வெற்றிகரமாக அமையவும் கூடும்; உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம், விசுவாசத்துடனும், பரிவுடனும் நடந்து, உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவும் கூடும். எனவே, இந்த ஆண்டு, உறவுகள் மூலம், உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியும், சுகமும் கிடைக்கக் கூடும்.
திருமண வாழ்க்கை
இந்த ஆண்டு, கணவர் மனைவி இடையே, அன்பு, புரிதல், மரியாதை, நெருக்கம் போன்றவை பெருமளவு தழைத்தோங்கி, நற்பலனும், ஆனந்தமும் நிறைந்த ஒன்றாக விளங்கக் கூடும். காதல் திருமணங்கள் சந்தோஷக் கொண்டாட்டங்களாக இருக்க, குழந்தை பிறப்பும் சிலருக்கு மகிழ்ச்சி தரக்கூடும். குடும்ப வாழ்க்கையில் இணக்கமும், அமைதியும் நிலவக்கூடும். சில தம்பதிகள், புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடும். உங்கள் துணை அல்லது துணைவரும், அவர்கள் பணியில் சிறந்து விளங்கக்கூடும்; உங்கள் பணியிலும் உதவி புரியக்கூடும். எனவே, 2022 ஆம் ஆண்டில், கணவர் மனைவி இருவரும், பரஸ்பரம், அன்பு, பரிவு, மரியாதை, நம்பிக்கை போன்ற அனைத்தையும் அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.
நிதி
இந்த 2022 இல், பல கன்னி ராசி அன்பர்கள், அதிக வருமானம், நிதி வளர்ச்சி, கணிசமான சேமிப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் காணும் வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலிலும் ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். வேலை, தொழிலிலும் கணிசமான லாபம் கிடைக்கலாம். தொழில் தொடர்பான ஆலோசனை தருவது, வீடு, மனை தொடர்பான வியாபாரம் போன்றவையும் அதிக வருமானம் அளிக்கக்கூடும். இதுபோல, உங்களது பல நடவடிக்கைகளும் ஆதாயம் தரக்கூடும். ஆனால், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதன் காரணமாக, செலவுகளும் அதிகமாக இருக்கலாம்.
மேலும், தொழில் அதிக வருமானம், லாபம் தரக்கூடும். நண்பர்கள், உடன் பிறந்தவர்களிடமிருந்து, தேவைப்படும் நேரத்தில், நிதி உதவியும் கிடைக்கக் கூடும். தவிர, நீங்களும், துணைவரும் கூட, இந்த ஆண்டு, அதிக வருமானம் ஈட்டுவீர்கள்; சேமிப்பும் உங்களுக்கு திருப்தி தரக்கூடும். இவற்றால், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க, இந்த ஆண்டு நீங்கள் திட்டமிடக்கூடும்; பல ஆடம்பர வசதிகளையும் அனுபவிக்கக்கூடும்.
கல்வி
2022 இல், கன்னி ராசி மாணவர்கள், கல்வியில் மிகச் சிறந்து விளங்கி, தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளிலும், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கக்கூடும். சிலருக்குத் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலம், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்குப் புகழ்பெற்ற நிறுவனத்திடமிருந்து கல்வி உதவித் தொகை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேரும் அரிய வாய்ப்பும், இப்பொழுது சிலருக்குக் கிடைக்கக் கூடும். மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, சிலர் அரசாங்க வேலையிலும் சேரக்கூடும்.
ஆரோக்கியம்
கன்னி ராசி அன்பர்களுக்கு, இந்த ஆண்டு, எந்தப் பெரிய ஆரோக்கியப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. குடும்ப மருத்துவச் செலவுகளும் அதிகமாக வாய்ப்பில்லை. சிலர் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களையும், நல்ல உணவுப் பழக்கங்களையும் மேற்கொண்டு, ஆரோக்கியமாக வாழக்கூடும். எனினும், சிலர் அதிக கொழுப்பு காரணமாக பாதிக்கப்படலாம்; ஆனால் அவர்களும், ஆரோக்கிய உணவு, யோகா, தியானம், நடை மற்றும் உடற்பயிற்சி மூலம் பாதிப்புகளைக் கட்டுக்குள் வைக்கலாம். எனினும், கோபத்தைக் கட்டுக்குள் வைப்பது, அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். பொதுவாக, உங்கள் ஆற்றல், எதிர்ப்பு சக்தி, உடல்வலு போன்றவை அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது; எனவே, சிறு விபத்துகள், காயங்கள் போன்றவற்றிலிருந்து நீங்கள் விரைந்து குணமடையக்கூடும்.
பரிகாரங்கள்
- புதன்கிழமைகளில் ஏழைகளுக்கும், பார்வை இல்லாதவர்களுக்கும் உணவளிக்கவும்
- வீட்டில், நாய் அல்லது கிளி போன்ற செல்லப் பிராணிகளுக்கு உணவளிக்கவும்
- புதன்கிழமைகளில் நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவளிக்கவும்
- புதன்கிழமைகளில் விநாயகருக்குக் கொழுக்கட்டை படைத்து வழிபடவும்
- வியாழக்கிழமைகளில் மாமிச உணவையும், மதுவையும், தவிர்க்கவும்
- ஜோதிடரைக் கலந்தாலோசித்து, மரகதக் கல் அணியவும்
