AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

dateFebruary 28, 2022

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்

விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் 2 மற்றும் 5 ஆம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 வரை, உங்களது 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, நல்லது அல்லாதது என, கலவையான பலன்களைத் தரக்கூடும். ஆனால், ஏப்ரல் 12 க்குப் பிறகு, குரு உங்கள் 5 ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆவது என்பது, வாழ்க்கையில் சந்தோஷம், வெற்றி, வளம், வளர்ச்சி போன்றவற்றை அளிக்கக்கூடும். இந்த குரு பெயர்ச்சி 2022 இல், அதிர்ஷ்டம் உங்களை நிழல் போலத் தொடரக்கூடும். இது ஆனந்தம், சுகம், அதிக செல்வம், மரியாதை, கௌரவம் ஆகியவற்றை வழங்கக்கூடும். சிலரது வாழ்க்கையில் புதிய காதல் மலரலாம். குடும்ப வாழ்க்கையும் இணக்கமாகவும், அமைதியாகவும் செல்லக்கூடும். உங்கள் சேமிப்பும், செல்வச் செழிப்பும் ஏப்ரல் 12 க்குப் பிறகு அதிகரிக்கக்கூடும். தவிர, நீங்கள் இந்த ஆண்டு, அதிக வசதிகள், ஓய்வு, சுகம் போன்றவையும் அனுபவிக்கக்கூடும்.   

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

வேலை, தொழில்

பல விருச்சிக ராசி அன்பர்கள் அவர்கள் வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறக்கூடும். தொழில் முனைவோர் இந்த ஆண்டு, வளர்ச்சியும், ஆதாயமும், பல வழிகளில் லாபமும் காணலாம். சிலருக்கு வருமானமும் பல இடங்களிலிருந்து வரக்கூடும். கலை, படைப்புத் துறையில் உள்ளோர் மிகப்பெரும் வெற்றியையும், புகழையும் பெறுலாம். எனினும், மருத்துவம், பொறியியல் துறை வல்லுநர்கள், பணியில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கலாம். ஆனால், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பணி புரிபவர்கள் திடீர் புகழ் அடையும் வாய்ப்புள்ளது. இது போல, பயணம் தொடர்பான வேலை அல்லது தொழிலும் 2022 இல் அதிக லாபம் தரக்கூடும்.

மேலும், ஊடகம், சந்தை விற்பனை, விளம்பரம் தொடர்பான பணிகள் விரைவான வெற்றியையும், கணிசமான வருமானத்தையும் அளிக்கலாம். சிலருக்கு, உயர் பதவியில் அரசாங்க வேலையும் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரக்கூடும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், சிலர் உங்களைக் கண்டு பொறாமைப்படக் கூடும். ஆயினும், பலருக்கு இந்த ஆண்டு, அவர்கள் கனவு கண்டுகொண்டிருந்த வேலை கிடைக்கக்கூடும்.

காதல், உறவுகள்

நீண்ட நாள் காதல் உறவில் இருப்பவர்களின் காதல், இந்த 2022 இல் வளர்ந்து, கனியக்கூடும். திருமண வயதில் உள்ளவர்கள், உள்ளம் கவர்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலரது பிரார்த்தனைகள் நிறைவேறி, அவர்களுக்கு மிகவும் ஏற்ற வாழ்க்கைத் துணையையும் சந்திக்கக்கூடும். காதலும், வேட்கையும் இந்த 2022 முழுவதும் மட்டுமில்லாமல், 2023 இன் துவக்கத்திலும் அதிகமாக இருக்கும். உங்கள் காதலர் அல்லது காதலி, ஆண்டு முழுவதும், உங்களிடம் விசுவாசத்துடனும், அன்புடனும் நடந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் இந்த ஆண்டு, பிரச்சனைகளோ, பிரிவுகளோ ஏற்பட வாய்ப்பில்லை எனலாம்.

திருமண வாழ்க்கை

நீண்ட நாள் காதலர் அல்லது காதலியைக் கரம் பிடிக்க விரும்புபவர்கள் நோக்கம், இந்த ஆண்டு நிறைவேறக்கூடும். உங்கள் குடும்ப வாழ்க்கை இணக்கமாகவும், இன்பமாகவும் இருக்கக் கூடும். துணைவரால், உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், நிம்மதி, சந்தோஷம், சுகம் சேரக்கூடும். உங்களுக்கிடையே பரஸ்பர மதிப்பு, மரியாதை, நம்பிக்கை நிலவக்கூடும். உங்களிடையே நெருக்கம் அதிகரிக்கும்; அவர் உங்கள் மீது அன்பு, பரிவு, ஆதரவு ஆகியவற்றைப் பொழியவும் வாய்ப்புள்ளது. சிலர் தங்கள் உள்ளத்தில் இருந்த காதலை, வெளிப்படுத்தி, உறுதிப்படுத்தக்கூடும். மேலும், இந்த 2022 இல பல விருச்சிக ராசி அன்பர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுடன் மணவாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. 

நிதி

பொதுவாக, பல விருச்சிக ராசி அன்பர்கள், இந்த ஆண்டு, பொருளாதாரத்தில் வளம் பெற்றுச் செழிக்கும் வாய்ப்புள்ளது. சமூக ஊடகங்கள், விளம்பரம், சந்தை விற்பனை, பயணங்கள் குறித்த வலைப்பதிவு, மருந்து, ஒப்பனைப் பொருட்கள் தொடர்பான வேலையும், தொழிலும் கணிசமான லாபம் தரக்கூடும். அதே நேரம், மரம், சலவைக்கல், பால் பண்ணை வியாபாரம் போன்றவை அதிக செல்வம் தரக்கூடும்.

தவிர, ஏற்றுமதி-இறக்குமதித் தொழில் மற்றும் வணிகம், இந்த ஆண்டு உங்களைச் செல்வந்தராக்கக் கூடும். விவசாயம், சொத்து வாங்கல்-விற்றல், உணவு, ஹோட்டல் தொழில்களும் பெரும் லாபத்துடன் நடந்து, அதிக பொருள் வளம் தரக் கூடும். சிறிய தூரத்துக்கான பயணங்களால் உங்கள் வேலை, தொழில் விரைந்து முன்னேறும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு உங்கள் சேமிப்பும் உயரக்கூடும். 

கல்வி

விருச்சிக ராசி மாணவர்கள் தங்கள் கல்வி முயற்சிகளில் வெற்றியும், சந்தோஷமும் அடையக்கூடும். தேர்வுகளில் அவர்கள் சிறந்து விளங்கக் கூடும். சிலர், போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று, தங்கள் குறிக்கோள்களை எட்டக் கூடும். சிலர், மேற்படிப்புற்காக வெளிநாடு சென்று, சிறந்த முறையில் பிரகாசிக்கக் கூடும். சிலருக்குக் கல்வி உதவித் தொகையும் கிடைக்கலாம். வெளிநாட்டில் குடியேறுவது என்பது, 2022 இல், மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை குறித்த பல வாய்ப்புகளை அளிக்கலாம். சிலருக்கு, மதிப்பு மிகுந்த கல்வி நிறுவனங்களில் சேர அனுமதியும் கிடைக்கலாம். கல்வி கற்பது, போதிப்பது குறித்த உங்கள் விருப்பங்களும், இப்பொழுது நிறைவேறலாம்.       

ஆரோக்கியம்

 பெரும்பாலான விருச்சிக ராசி அன்பர்களுக்கு, இந்த ஆண்டு, ஆரோக்கியம் குறித்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை எனலாம். அதிர்ஷ்டமும் அவர்கள் பக்கம் இருக்கக்கூடும். எனவே, அதிக மருத்துவச் செலவுகளும் இல்லாமல் போகலாம். சிலர், யோகா, உடற்பயிற்சி, தியானம் மூலம் தங்கள் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே உள்ள நோய்களிலிருந்தும், விபத்துக்களிலிருந்தும் சிலர் விடுபடலாம். சிறு காயங்கள் ஏற்பட்டாலும், அவை விரைவில் குணமாகிவிடக் கூடும். சளி, இருமல், ஜுரம் போன்றவற்றிலிருந்தும் நீங்கள் எளிதில் குணமடைந்து விடலாம். ஆனால், இன்பம் தரும் நடவடிக்கைகளில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவது, சில ஆரோக்கியக் கேடுகளை உருவாக்கலாம். எனவே எச்சரிக்கை தேவை. 

பரிகாரங்கள்

  • தினமும் ஹனுமான் சாலிஸா ஓதவும்
  • செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு, உணவும், இனிப்புகளும் தானம் செய்யவும்
  • செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில், ஹனுமான் ஆலயத்தில், ஹனுமாருக்கு ஆரத்தி வழிபாடு செய்யவும். 
  • சனிக்கிழமைகளில் நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவளிக்கவும்
  • செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாமிச உணவைத் தவிர்க்கவும்
  • செவ்வாய்க்கிழமை அன்று, ஹனுமாருக்கு, மல்லிகைப்பூ எண்ணெய் சமர்ப்பிக்கவும்

banner

Leave a Reply