AstroVed Menu
AstroVed
search
search

கடக ராசி பலன் 2021 - Cancer Horoscope 2021 in Tamil

dateSeptember 16, 2020

கடக  ராசி 2021 பொதுப்பலன்கள்:

கடக  ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் நீங்கள் பெரும்பாலும் நல்ல  பலன்களையே காண்பீர்கள்.  சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரக் காண்பீர்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையக் காண்பீர்கள். பணியைப் பொறுத்தவரை இந்த வருடம் உங்களுக்கு மிகவும் சிறப்பான வருடமாக இருக்கும்.  பிப்ரவரி முதல் ஏப்ரல், செப்டம்பர் இடைப் பகுதி முதல் நவம்பர் வரை குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மற்ற மாதங்களில் நீங்கள்  கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழும். வேலை நிமித்தமாக நீங்கள் சில மாதங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிய நேரும். திருமண வாழ்வில், கணவன் மனைவி உறவில்  ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சனி பகவான் காரணமாக பதட்ட நிலை இருந்தாலும் குரு பகவான் உங்களைக் காப்பார்.  நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த வருடம் நீங்கள் சில போராட்டங்களை சந்திக்க நேரும். வருட ஆரம்பத்தில் உங்கள் நிதியில் முன்னேற்றம் இருக்கும். கடக ராசி அன்பர்கள் இந்த வருடம் வியாபாரம் மற்றும் செய் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.  கல்வி பயிலும் கடக ராசி மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை  சாதகமான மாதம் ஆகும். இந்த மாதங்களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றியைக் காண்பீர்கள். என்றாலும் நீங்கள் உங்கள் மனதைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கடினமாக உழைத்துப் படிக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு முட்டி மற்றும்  இடுப்பு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்புள்ளது.  பதினொன்றாம் வீட்டில் இருக்கும் ராகுவால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. கடக ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு கடக ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்:

இந்த வருடம் நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்றுவீர்கள். என்றாலும்  நீங்கள் சற்று கவனமுடன்  நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில்  தேவையற்ற வாக்கு வாதங்கள்,  கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றை ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்த்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இது சாதகமான வருடமாக இருக்கும். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நீங்கள் சுய தொழில் செய்பவர் என்றாலும் இந்த வருடம் உங்களுக்கு பல சாதகமான பலன்கள் கிடைக்கும்.  வேலை அல்லது தொழில் நிமித்தமாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

வேலையில்  மற்றும் தொழிலில் வெற்றி பெற : ஹனுமான் ஹோமம்  

காதல் மற்றும் குடும்பம்:

குடும்பம் என்றால் குதூகலம் மட்டும் தானா? நடை முறை வாழ்க்கையில் சண்டை சச்சரவுகளும் இருக்கத் தானே செய்யும். இந்த வருடம் நீங்கள் சில பதட்டமான சூழ்நிலைகளை குடும்பத்தில் சந்திக்க வேண்டியிருக்கும். பெற்றோர், வாழ்க்கைத்துணை என இரண்டு பக்கமும் மத்தளம் போல நீங்கள் அவர்களுடன் போராட வேண்டித் தான் இருக்கும். அவர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டுவது கடினம். என்றாலும் நீங்கள் உங்கள் கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். இணக்கமாக நடந்து கொள்ள முயலுங்கள். குடும்ப பிரச்சினைகளில் இருந்து விலக நீங்கள் ஆன்மீக வழியை நாடுவீர்கள். எனவே உங்கள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு புதிய காதல்  மனதில் உதயமாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். 
திருமண உறவில் நல்லிணக்கம் காண – சிவ - சக்தி ஹோமம்

பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:

இந்த வருடம் உங்கள் நிதிநிலை சிறப்பாகவே இருக்கும்.  நீங்கள் பாரம்பரிய சொத்துக்களுக்கு உரிமைதாரர் ஆவீர்கள். குறிப்பாக உங்களுக்கு தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.  வருட ஆரம்பத்தில் நீங்கள் சில கடன்களை வாங்குவீர்கள். பண வருமானம் உங்கள் மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் சேமிப்புகளையும்  முதலீடுகளையும் மேற்கொள்வீர்கள். அதே சமயத்தில் நீங்கள் ஆடம்பர செலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள்  அதிகம் உள்ளது என்பதால் உங்கள் செலவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். 
நிதிநிலை மேம்பட :குபேர ஹோமம்

மாணவர்கள் மற்றும் கல்வி:

இந்த வருடத்தின் ஆரம்ப கால மாதங்கள், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். நீங்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இலக்கில்லாத பயணம் சேருமிடம் சேராது என்பது போல கவனம் சிதறினால் கல்வியில் உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய இயலாது போகும். எனவே கவனச் சிதறல் ஏற்படாத வகையில் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முயலுங்கள். மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் இடைப் பகுதிகளில் வெற்றி காண்பார்கள். இந்த வருடத்தின் இடைப் பகுதியில் மேற் படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். உங்கள் மனதை வலுப்படுத்த யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். 

கல்வியில் வெற்றி பெற – சரஸ்வதி ஹோமம்

ஆரோக்கியம்:

கடக ராசி அன்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு  சில எதிர்பாராத உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். வருடத்தின் முதல் கால் பகுதியில் நீங்கள் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய அளவில் உடல் நலக் கோளாறு இருந்தாலும்  உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. செப்டம்பர் 15முதல் நவம்பர் 20 வரையிலான காலக் கட்டத்திற்குள்  உங்கள் உடல் நிலை படிப்படியாக சீராகும். துரித உணவு, எண்ணெய் கலந்த உணவு தவிர்க்க வேண்டும். முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  
ஆரோக்கியம் மேமேபட : தன்வந்தரி ஹோமம்

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்:

•    ஜோதிடரின் ஆலோசனை பெற்று முத்து மோதிரம் அணிந்து கொள்ளவும்
•    தினமும் தண்ணீர்/ பால் அருந்த வெள்ளியினால் ஆன கோப்பையைப் பயன்படுத்தவும்
•    ஹனுமான் சாலீசா அல்லது குரு மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்
•    திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு செல்லவும். செவ்வாய்க் கிழமை ஹனுமார் கோவிலுக்கு செல்லவும்
•    வியாழக்கிழமை விரதம் மேற்கொண்டு  ஆன்மீக அன்பர்களுக்கு அன்னதானம் அளிக்கவும்

அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி,  மார்ச், செப்டம்பர், அக்டோபர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,நவம்பர், டிசம்பர்


(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)            


banner

Leave a Reply