AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

September Monthly Taurus Rasi Palangal 2019 Tamil

August 31, 2019 | Total Views : 1,095
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள்

ரிஷப ராசி அன்பர்களே! கிரகங்கள் இப்பொழுது உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், பொதுவாக இது உங்களுக்கு நல்ல மாதமாகவே அமையும். உங்கள் செயல்கள் அனைத்தும் சுமுகமாக நடைபெறும். விருப்பங்கள் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேறும். சமூக வாழ்க்கை, மகிழ்ச்சியும், திருப்தியும் தரும். பொருளாதார நிலையும் சிறந்து விளங்கும். சேமிப்பு சீராக அதிகரிக்கும். உங்களில் சிலர், பாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு புதிய அனுபவம் பெறுவீர்கள். இதில் நீங்கள் வெற்றியும் அடைவீர்கள். உங்கள் பணிகளை நிறைவேற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகள், அனுகூலமான பலன்களைப் பெற்றுத் தரும். ஆரோக்கியம் பொதுவாக நன்றாகவே இருக்கும். 

ரிஷபம் ராசி - காதல் / திருமணம்

காதலில் மகிழ்ச்சியும், இன்பமும் காணும் காலம் இது. உங்களில் சிலர், துணையுடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். குடும்ப வாழ்விலும் நல்லிணக்கம் நிலவும். எனினும், அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் காரணமாக, உறவுகளுடன் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். எனவே, எந்தப் பிரச்சினை எழுந்தாலும், அதனுடன் தொடர்புடையவர்களுடன் தெளிவாகக் கலந்து உரையாடுவது நல்லது.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரக  பூஜை  

ரிஷபம் ராசி - நிதி

பலவகையிலும் இப்பொழுது உங்களிடம் பணம் சேரும் வாய்ப்புள்ளது. இது உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போதுமானதாக இருக்கும். செல்வத்தை மேலும் பெருக்க, நீங்கள் தொடர்ந்து சேமிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதனால், செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை

ரிஷபம் ராசி - வேலை

வேலை சாதகம் தரும். பணிகளை முடிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், தடைகளைத் தகர்த்து, வெற்றியையும், நல்ல பலன்களையும் அளிக்கும். வேலை தொடர்பான பயணங்களும் நன்மை தரும். அலுவலகத்தில், அனைவருடனும் நட்புடன் பழகுவது நல்லது. 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை

ரிஷபம் ராசி - தொழில்

தொழில் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக, பொதுஜனத் தொடர்புத் தொழில் சிறந்து விளங்கும். தொழில் கூட்டாளிகளுடன் உறவும் சுமுகமாக இருக்கும். புதிய தொழிலில் அவர்களது பங்களிப்பு குறித்து, நீங்கள் அவர்களுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதலும் தருவீர்கள். 

ரிஷபம் ராசி - தொழில் வல்லுனர் 

ரிஷப ராசி தொழில் வல்லுனர்களுக்கும் நல்ல நேரம் இது. மேலதிகாரிகளின் துணையுடன், உங்கள் மீது சுமத்தப்பட்ட பழிகளை உங்களால் இப்பொழுது நீக்கிக்கொள்ள முடியும். இது உங்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கும். சக பணியாளர்களின் நல்லாதரவும் உங்களுக்குக் கிடைக்கும். 

ரிஷபம் ராசி - ஆரோக்கியம்

உடல்நிலை சிறப்பாகவே இருக்கும் எனலாம். எனினும், பணியிடத்தில் காணப்படும் பதட்டம் காரணமாக, சரியான நேரத்தில் உங்களால் உணவு உட்கொள்ள இயலாமல் போகலாம். இதனால் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: சூரியன் பூஜை 

ரிஷபம் ராசி - மாணவர்கள்

மாணவர்கள் நல்ல கவனம் செலுத்தி, உற்சாகமாகப் படிப்பார்கள். பாடங்களை குறித்த நேரத்திற்குள் படித்தும் முடிப்பார்கள். கல்வியில் உங்கள் ஆர்வத்தையும், முன்னேற்றத்தையும் கண்டு ஆசிரியர்கள் வியப்படைவார்கள். தொண்டு நிறுவனங்கள் மூலம் சில மாணவர்கள் பண உதவியும் பெறுவார்கள். இது அவர்கள் தொடர்ந்து படிக்க உதவிகரமாக இருக்கும். 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,3,4,5,11,13,14,16,17,19,20,21,24,25,26,27,30
அசுப தினங்கள்: 2,6,7,8,9,10,12,15,18,22,23,28,29

banner

Leave a Reply

Submit Comment