AstroVed Menu
AstroVed
search
search

September Monthly Aries Rasi Palangal 2019 Tamil

dateAugust 31, 2019

மேஷம் ராசி - பொதுப்பலன்கள்

மேஷ ராசிக்காரர்களே! இந்த மாதம், உங்கள் திறமைகளுக்கு சவால் விடும் காலமாக இருக்கும். அலுவலகத்தில் அதிகமான வேலை இருக்கும். நீங்கள் அதிக சவால்களையும் சந்திக்க வேண்டி வரும். எனவே உங்கள் நடவடிக்கைகளில் ஆழ்ந்த கவனமும், எச்சரிக்கையும் தேவை. அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். எனினும், தன்னம்பிக்கையுடன் கூடிய கடின உழைப்பு மூலம் பணியிலும், வாழ்க்கையிலும் நீங்கள் முன்னேற்றம் காண முடியும். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் சந்தோஷத்தையும், திருப்தியையும் அளிக்கும். ஆனால் அதிர்ஷ்டத்தை நம்பி முதலீடு செய்வதைத் தவிருங்கள். ஆன்மீகத்தில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. எனவே உணவுமுறையில் எச்சரிக்கை தேவை.

மேஷம் ராசி - காதல் / திருமணம்

உங்களில் சிலருக்கு வாழ்க்கையில் புதிய காதல் மலரும் வாய்ப்புள்ளது. அது வெற்றிகரமாகத் தொடரும் வாய்ப்பும் உள்ளது. இந்த புதிய உறவு, உங்களுக்கு ஒரு இனிய அனுபவத்தைத் தரும். உங்கள் மதிப்பும் உயரும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாகச் செல்லும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, மணவாழ்க்கை அமைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன்  பூஜை      

மேஷம் ராசி - நிதி

பொருளாதார சிக்கல்கள் காரணமாக, உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் பணத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலோ, இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதிலோ அவசரம் வேண்டாம். நண்பர்களிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தேவைப்படும் நேரத்தில் நிதி உதவிகளைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக நீங்கள் கூடுதல் பணம் செலவு செய்ய  நேரலாம். எனவே செலவுகளைக் கண்காணிப்பது நல்லது. 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை


மேஷம் ராசி - வேலை

இந்த மாதம் வேலை நிலவரம் மந்தமாகவே இருக்கக் கூடும். அலுவலகத்தில் அனுசரித்துப் போவது நல்லது. சிறிய விஷயங்களுக்காக உணர்ச்சி வசப்படாதீர்கள். தகவல் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வதன் மூலம், உங்களால் பணிகளை நல்ல முறையில் முடிக்க முடியும். உங்கள் வெளிப்படையான இயல்பு, சக பணியாளர்களைக் கவரும். அலுவலகத்தில் நீங்கள் உற்சாகமாகவே இருப்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: கணபதி பூஜை  

மேஷம் ராசி - தொழில்

உங்கள் தொழில் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் நிதானம் தேவை. முடிக்கும் தருவாயில் உள்ள பணிகளைச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை, வியாபாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் மற்றும் பேரங்களின் பொழுது உதவிகரமாக இருக்கும். 

மேஷம் ராசி - தொழில் வல்லுனர் 

மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கு, இந்த மாதம் பதட்டம் நிறைந்து காணப்படும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய தருணங்களில், உங்கள் சமயோசித நடவடிக்கைகளும், பிறரை அனுசரித்துச் செல்லும் அணுகுமுறையும் சிறந்த பலன் தரும்; நல்ல பாராட்டையும் பெறும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது, அதில் தொடர்புடைய அனைவரின் கண்ணோட்டத்தையும் கருத்தில் கொள்வது அவசியம். இந்த நேரத்தில், சில விஷயங்களில், சக பணியாளர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நன்மை தரும். 

மேஷம் ராசி - ஆரோக்கியம்

இப்பொழுது நீங்கள், உடல் வலி, மன வேதனை ஆகியவற்றால் அவதிப்பட நேரிடும். அதிக ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும், நீங்கள் கவனம் செலுத்து வேண்டும்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை      

மேஷம் ராசி - மாணவர்கள்

மாணவர்களுக்கு மனநிறைவு தரும் காலம் இது. இப்பொழுது நீங்கள், அறிவை வளர்த்துக் கொண்டு, கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். மேற்படிப்பையும் உற்சாகமாகவே மேற்கொள்ளலாம். உங்கள் கவனத்திறனை அதிகரித்துக் கொள்ள, தியானம் மேற்கொள்வது நல்ல பலன் தரும். உங்களில் சிலர், வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிடுவீர்கள். 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,3,8,9,10,11,13,14,16,17,19,20,21,24,25,26,27,30

அசுப தினங்கள்: 2,4,5,6,7,12,15,18,22,23,28,29


banner

Leave a Reply