Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மகரம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Magaram Rasi Palan 2022

August 3, 2022 | Total Views : 727
Zoom In Zoom Out Print

மகரம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:

மகர ராசி அன்பர்களே! குடும்ப நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் குடிகொண்டிருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லுறவு காணப்படும். புதிய மனிதர்களின் நட்பைப் பெறுவீர்கள். அவர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். உங்கள் நட்புவட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும்.  தொழில் மூலம் தன வரவு அதிகரிக்கும். ஆன்மீகம் சம்மந்தப்பட்ட தொழிலைத் தொடங்குவது ஏற்றத்தைக் கொடுக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சில தடைகளை தாண்டி கல்வியில் முன்னேறுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே  நல்லுறவு காணப்படும். குழந்தைகளுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். 

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் காணும் வகையில் இருக்கலாம். நீங்கள் பிறருக்கு கடனாகக் கொடுத்த நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் கடன் தொகை வசூலாகும். அதிகமாக வந்த வருவாயை கொண்டு தங்கள் வீட்டிற்கு புதிய வண்ணம் அடித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள்.

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை பொதுவாக சிறப்பாக உள்ளது என்றாலும் ஒரு சில துறையினருக்கு கடின உழைப்பை மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் கிட்டுவது அரிதாக இருக்கும். நீங்கள் தனியார் துறையில் பணி புரிபவர் என்றால் உங்களுக்கு புதிய பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். பங்கு வர்த்தக துறையில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்ற ஏற்றங்கள் கிடைக்கும். அச்சு ஊடக உத்தியோகத்தைப் பொறுத்தவரை கடின உழைப்பை மேற்கொண்டு பலனுக்ககாக காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

தொழில்:

பழம் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகளின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.  உணவு தானியங்கள் சம்மந்தமான கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கல்வி சம்மந்தப்பட்ட தொழிலை நிர்வகிக்கும் உங்கள் செயல் திறன் வாடிக்கையாளர்களால் பாராட்டப்படும்.   

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் தனியார் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர் எனில் உங்கள் தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.  உயர்கல்வித்துறையில் உத்தியோகத்தில் உள்ள உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். தங்களுக்கு உடன் பணிபுரியும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

ஆரோக்கியம்:

இந்த மாதம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய அளவிலான உடல் பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்றாலும். சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். வீட்டில் உள்ள வயதில் மூத்த பெரியவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை. குறித்த நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் உடல் நிலை பாதிப்பில் இருந்து வெளியே வரலாம்.

மாணவர்கள்:

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். குறிப்பாக பொறியியல் மற்றும் அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சிகல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு தங்களது ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். 

சுப நாட்கள்:

1, 2, 3, 15, 17, 20, 21, 22, 23, 30.

அசுப நாட்கள்:

14, 18, 19, 24, 25, 26, 27, 28, 29.

banner

Leave a Reply

Submit Comment