AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

தனுசு செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Dhanusu Rasi Palan 2022

dateAugust 3, 2022

தனுசு செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:

இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். தனியார் உத்தியோகத்தில் பணியிடத்தில் நீங்கள் நல்ல பெயர் பெறுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.  தொழிலில் போட்டிகள் நிறைந்து இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம்  மந்தமாக இருக்கும். எனவே மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியதாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

இந்த மாதம் காதலர்களுக்கு ஏற்ற மாதமாக இருக்கும். இருவருக்கும் இடையில் சுமுகமான உறவுநிலை காணப்படும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே இது வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். நல்ல புரிந்துணர்வும்  அன்னியோன்யமும் அதிகரித்து காணப்படும். வீட்டில் உள்ள தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடனான உறவு நிலை நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் தாய் மற்றும் தந்தையை நன்றாக கவனித்து கொள்வீர்கள்.

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் வருமானம் உயரும். உங்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். என்றாலும் அதிக அளவில் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாமல் இருங்கள். யூக வணிகம் மூலமாக அதிக தன லாபத்தை எதிர்பார்க்கலாம். க்ரிப்டோ கரன்சி முதலீடுகள் நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும். ஆன்மீக சுற்றுலாவிற்காக அதிகம் செலவுகள் செய்வீர்கள்.

வேலை:

பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்க வாய்ப்பில்லை. சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரும். வேலையை விடுவது பற்றிய எந்தவொரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்.  அனுசரித்து நடந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பணி நிமித்தமாக முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் பொறியியல் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.

தொழில்:

தொழில் சிறப்பாக நடை பெறும். தொழில் மூலம் வருமானம் பெருகும். நெல் மற்றும் சோளக்கதிர்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் அயல் நாடுகள் மூலம். நல்ல தன லாபத்தை பெறுவார்கள். இரும்பு மற்றும் எஃகு ஆலை தொழிற்சாலை சார்ந்த தொழில்களை உடையவர்கள் தனது போட்டியாளர்களை விட அதிக லாபத்தை பெறுவார்கள்.

தொழில் வல்லுனர்கள்:

தொழிலில் போட்டி என்பது இயல்பு என்றாலும் இந்த மாதம் அதிக அளவில் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும் இந்த சூழ்நிலையை நீங்கள் சந்தித்து வெற்றி காண்பீர்கள். குறிப்பாக பெரிய சக்கரை ஆலைகளை வைத்து தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் தொழில் போட்டிகளை சந்தித்து வெற்றிவாகை சூடுவீர்கள். வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள்.

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறு சிறு உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். பல் மற்றும் காது சம்மந்தப்பட்ட வலிகள் வந்து தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். தக்க நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி மாணவர்கள் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க கடின முயற்சியுடன் படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி காண இயலும்.. போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கூடுதல் பயிற்சிகளை மேற்கொண்டு படித்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். இந்த மாதம் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள்.

சுப நாட்கள்:

6, 7, 8, 10, 12, 13, 15, 16, 17, 28, 30.

அசுப நாட்கள்:

14, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 29.


banner

Leave a Reply